பையன் திருந்திட்டான் - அரை பக்கக்கதை
என்னங்க, நம்ம பையனைப் பத்தி அப்படி இப்படின்னு நினைச்சோம்லே, அதெல்லாம் தப்புன்னு இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா?
என்னடி சொல்றே? கொஞ்சம் விவரமா சொல்லு.
நம்ம பையன் சுரேஷ், சென்னையிலே வேலை பாத்துக்கிட்டிருந்தாலும், கிராமத்திலே இருக்கிற இந்த வீட்டுக்கே வரமாட்டான். நாலஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை வந்தாலும், யாரோடவும் பேசாம டிவி பாத்துட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவான்.
அதனாலே?
கேளுங்க. ரூம்லே இருக்கிற பாட்டி பக்கத்துலேகூட போகமாட்டான். அவங்களுக்கு குடிக்க தண்ணி குடுறான்னா, நீயே போய் குடு, அந்த ரூமுக்கு நான் போகமாட்டேன்னுடுவான்.
இப்போ என்ன சொல்ல வர்றே?
இந்த முறை பாத்தீங்களா? அப்படியே தலைகீழா மாறிட்டான். போன வாரம் வந்தவன், டிவியே போடல. என்கிட்டே ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தான். அவனோட சின்ன வயசிலே நடந்ததையெல்லாம் சொல்லச் சொல்லி நச்சரிச்சான். எனக்கு சமையல்லே கூட ஒத்தாசையா இருந்தான்னா பாத்துக்கோங்களேன்.
ஏண்டி, சரியா பாத்தியா? அவனுக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிக்கலியே?
ச்சீ. போங்க. பாவம் சின்னபுள்ள. இன்னும் கேளுங்க. என்கிட்டே மட்டுமில்லேங்க. பாட்டிகூடவும் அவன் ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தான். ரெண்டு நாளா அவங்களுக்கு மருந்து, தண்ணியெல்லாம் அவனே போய் குடுத்திட்டிருந்தான்.
அப்புறம்?
அப்புறம்.... ம்.. கையோட ஒரு காமிரா கொண்டு வந்திருந்தான். நம்ம வீடு, கிணத்தடி, மாடு-கன்னு இதையெல்லாம் படம் பிடிச்சிக்கிட்டு போனான். எனக்கென்னவோ, அவன் நம்மளையெல்லாம் பிரிஞ்சியிருக்கோம்னு ஃபீல் பண்றான்னு நினைக்கிறேன். காலாகாலத்திலே, அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுடணும். என்ன சொல்றீங்க.
ம்..ம்.. போடலாம் போடலாம். முதல்லே எனக்கு சோத்தை போடு.
(ஊரிலிருந்து சென்னை போய்கிட்டுருந்த சுரேஷ் - தன் நண்பனுக்குத் தொலைபேசுகிறார்).
மச்சான், இனிமே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிடணும். அம்மா, அப்பா, பாட்டியோட நிறைய பேசணும். பின்னே என்னடா, நீங்கல்லாம் தினமும் ஒரு பதிவா போடறீங்க. எனக்கு எதுவுமே தோண மாட்டேங்குது. இதுக்காவே இந்த தடவை ஊருக்குப் போய் நிறைய மேட்டர் தேத்தியிருக்கேன். நாளையிலேர்ந்து ஐயாவோட பதிவைப் பாரு.
எங்க வீட்டு ஃபோட்டோ, கிராமத்து சமையல், என்னோட சின்ன வயசு நிகழ்வுகள், எங்க பாட்டி காலத்து வாழ்க்கை சூழல் - இப்படின்னு ஏகப்பட்ட சரக்கு என் கையிலே இருக்கு. வர்றேன்.. வர்றேன்... நாளையிலேர்ந்து தமிழ்மணத்தை ஒரு கலக்கு கலக்கறேன் பாரு... வச்சிறட்டா... பை..
25 comments:
தப்பில்ல, எதுவுமே தப்பில்ல... 4 பேரு சந்தோசமா இருக்காங்கன்னா மொக்க ப்ளாக் எழுதுறதுல கூட தப்பேயில்ல...
டிங்...டிடிங்...டிடிங்..டிங்........டிடிடிங்... தென்பாண்டிச் சீமையில...தேரோடும் வீதியில,,,,,,
நீங்களே பதிவு போடறதுக்கு அடிக்கடி இந்தியா வருவிங்க போலிருக்கு.
வரும்போது மறக்காமல் அழையுங்கள்
வால்பையன்
அவ்வ்வ்வ்... மொக்கை தாங்க முடியல...
//தப்பில்ல, எதுவுமே தப்பில்ல... 4 பேரு சந்தோசமா இருக்காங்கன்னா மொக்க ப்ளாக் எழுதுறதுல கூட தப்பேயில்ல//
ரீப்பீட்டே....
ஹிஹிஹி
கம்பேனி ரகசியாத்தல்லாம்
வெளிய சொல்லிகிட்டு
//ஹிஹிஹி
கம்பேனி ரகசியாத்தல்லாம்
வெளிய சொல்லிகிட்டு//
ரீப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே :)))
வாங்க வெண்பூ -> அவ்வ்வ். இது மொக்கையா?... எவ்ளோ நல்ல கருத்தை சொல்லியிருக்கேன்....
வாங்க வால்பையன் -> இல்லீங்கோ. தினமும் தொலைபேசும்போதே 'மேட்டரை' வாங்கிடுவேன். அதை வெச்சே பதிவு ரெடி...
ஆ விக்னேஸ்வரன் -> இதுக்கு பேர்தான் மொக்கையா.. எனக்கு தெரியாமே போயிடுச்சே.....
வாங்க அதிஷா -> சரிசரி.. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க...
மறுபடி ரிப்பீட்டு போட வந்த வெண்பூக்கு நன்றி....
கதை நன்றாகத்தான் இருந்தது. இந்த கதை அப்படி ஒன்னும் படு மொக்கை இல்லை....
ஹை, சூப்பருங்க. நீங்க ஒரு நாள் பெரிய கதை திரைக்கதையாசிரியராகி,அகில உலக சூப்பர் ஸ்டார், மருத்துவத்துறையின் விடிவெள்ளி டாக்டர் விஜய், பெண்களின் மானம் காக்க வந்த விரல் வித்தை மன்னன் சிம்பு படத்துக்கும், சிகயலங்கார சக்கரவர்த்தி எஸ்.ஜே.சூர்யா படத்துக்கும்,இவங்க எல்லாரையும் மிரட்டுற அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி அடைஞ்சுகிட்டு வர்ற நம்ம தல படத்துக்கும், எழுதி தமிழ்நாடே கலகலத்துப் போக வெக்கணும். ஹி ஹி ஹி
வாங்க ஜாக்கிசேகர் -> 'படு' மொக்கை இல்லேன்னா, அப்போ இது மொக்கைன்னுதான் அர்த்தமா ... அவ்வ்வ்.... இருந்தாலும் 'கதை நல்லா இருந்தது'ன்னு சொன்னதாலே உங்களுக்கு ஒரு நன்றி...
வாங்க ராப் -> ஏன்.. ஏன்... ஏன்... இந்த கொலவெறி உங்களுக்கு?... என்மேலே ஏதாவது கோபம் இருந்தா, ஒரு ஆட்டோவோ அல்லது கால்டாக்சியோ அனுப்பிச்சிடுங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
நாமெல்லாம் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்து ஆளுங்களாச்சே, நமக்கு யாருங்க ஆட்டோ அனுப்பப்போரா, நாமதான் அவருக்கு போட்டியா வந்திருக்குற சாம் ஆண்டர்சனோட வீட்டுக்கு ஆட்டோல போகணும்.
ராப் -> ஹாஹா.. போறோம். கண்டிப்பா போறோம்...:-))))
இது போல எங்கோ படிச்சமாதிரி இருக்கே (http://imsaiarasi.blogspot.com/2008/01/blog-post_23.html)
நல்லா எழுதுறீங்க
வாழ்த்துக்கள்
பாவங்க அந்த அம்மா, அப்பா , பாட்டி.
வாங்க அனானி -> அவ்வ்வ்வ்... அப்போ இது அதோட 'அப்பட்டமான காப்பி'ன்றீங்களா????.... காலத்துக்கு ஏத்த மாதிரி 'ரீமிக்ஸ்'னுகூட சொல்லக்கூடாதா????.....
வாங்க லதானந்த் -> ஆகா.. இன்னிக்கு பெரிய பெரிய தலைகள்லாம் வர்றாங்களே..... நன்றி...
வாங்க ராமலக்ஷ்மி மேடம் -> ஆமாங்க. ரொம்பவே பாவங்க அவங்க....
//நாலஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை வந்தாலும், யாரோடவும் பேசாம டிவி பாத்துட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவான்.//
ஹா ஹா ஹா
//இதுக்காவே இந்த தடவை ஊருக்குப் போய் நிறைய மேட்டர் தேத்தியிருக்கேன். நாளையிலேர்ந்து ஐயாவோட பதிவைப் பாரு//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நீங்க " கையோட ஒரு காமிரா கொண்டு வந்திருந்தான். நம்ம வீடு, கிணத்தடி, மாடு-கன்னு இதையெல்லாம் படம் பிடிச்சிக்கிட்டு போனான்" இதை சொன்னதுமே ..இந்த விசயத்துக்கு தான் வர போறீங்கன்னு தெரிந்து விட்டது :-)))))
சூப்பர் போங்க :-))) கலக்கல்
உண்மையிலேயே கான்செப்ட் சூப்பர் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
Cool, really nice story.
வாங்க கிரி, அருவை பாஸ்கர் (வாத்தியார் படம் சூப்பர்ங்க!!!), சிவா -> ரசித்ததற்கு நன்றி..
ரீ-மிக்ஸ் நல்லாயிருக்குங்க..... :)
நல்லாத் தேத்தறீங்கப்பா....:-)))))
பதிவு மேட்டரைத்தான் :-)
வாங்க இராம் மற்றும் துளசி மேடம் -> நன்றி...
உங்களை சின்னப்பையன் என்டெல்லோ நினைச்சன். பதிவெல்லாமே இப்பிடித்தான் ஓடிக்கொண்டிருக்குதோ? நானும் ஒருக்கா கமராவோட ஊருக்கு போகவேணும். வலைப்பூ சும்மா கிடக்குது.
வாங்க சன்சுதா -> போங்க போங்க.. கடகடன்னு மேட்டரை பிடிச்சி, பதிவைப் போடுங்க... :-)))
அதுக்கப்புறம் அந்த மாதிரி பாட்டி கதையே இல்லையே. சீக்கிரம் எழுதுங்க. படிப்போம்.
Post a Comment