Friday, June 13, 2008

ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!

ச.உ = சட்டமன்ற உறுப்பினர்.

சபாநாயகர் to ச.உ:


சபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க...
---

கடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!!!
---

தினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே இங்கே படிக்காதீங்க. அந்த செய்தியைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் சொல்லுங்க.
---

இங்க பாருங்க, சபையிலே உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்குத்தான் நீங்க பதில் சொல்லணும். நீங்களா சில கேள்விகளைக் கொண்டு வந்து அதற்கு பதில் சொல்லக்கூடாது.

---

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான், இந்த திட்டத்துக்கு ஆதரவா பேசினீங்க. உடனே, அதே திட்டத்துக்கு எதிரா - உங்க குரலை மாத்தி பேசறீங்க - இது கொஞ்சம் கூட நல்லாயில்லே..

---

புதிய சட்டசபை கட்டடம் எங்கே கட்டலாம்னு கேட்டா, கடற்கரையிலே காந்தி சிலைக்குப் பின்னாலே கட்டலாம்ன்றீங்களே, அங்கேயெல்லாம் கட்டடம் கட்டமுடியாதுங்க...

---

மொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...

---
ச.உ. வேண்டுகோள் to சபாநாயகர்:

'இன்று அதிகம் மேசையைத் தட்டியவர்கள்' பட்டியல் தயாரித்து அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

---

வாரம் ஒரு ச.உ. - ஒரு உறுப்பினரை ' நட்சத்திரம்'ஆக தேர்ந்தெடுத்து அவரது தொகுதி வளர்ச்சி பற்றி விவாதிக்கவேண்டும்.

19 comments:

VIKNESHWARAN ADAKKALAM June 13, 2008 at 12:41 PM  

//மொதல்லே அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேளுங்க. எதுக்கெடுத்தாலும் 'ரிப்பீட்டேய்ய்ய்' அப்படின்னு சொல்லிட்டு இருக்காதீங்க...//

'ரிப்பீட்டேய்ய்ய்'

Jayaprakash Sampath June 13, 2008 at 12:49 PM  

அசத்திபுட்டீங்க போங்க...

வால்பையன் June 13, 2008 at 1:01 PM  

உங்களை தாங்க அனுப்பி வைக்கணும் சட்ட மன்றத்துக்கு
நீங்க தான் சரியான ஆள்

வால்பையன்

rapp June 13, 2008 at 1:08 PM  

கலக்கிட்டீங்க. சரி இன்னைக்கு யாரோ கமலாமே, அவரு ஏதோ பத்துத்தலய வெச்சு ராவண வேஷம் போட்டு விஷ்ணு லீலைகளப் பத்தின ஒரு படத்துல நடிச்சிட்டாருன்னு எங்க ஊர் கேபிள் டிவில சொன்னாங்க. இதுக்கே இப்டின்னா, நம்ம தலை ஜெ.கே. ரித்தீஷ் படம் வந்துச்சுன்னா அவ்ளவு தான் இல்லைங்க!!!

சின்னப் பையன் June 13, 2008 at 1:29 PM  

வாங்க... நன்றி சிறில்.....

வாங்க விக்னேஸ்வரன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

வாங்க பிரகாஷ்.. நன்றி...

வாங்க வால்பையன் -> என்மேல உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி...

வாங்க கப்பி பய -> நன்றி...

சின்னப் பையன் June 13, 2008 at 1:31 PM  

வாங்க ராப் -> நான் ஒரு பதிவாவே போடணும்னு நெனெச்ச விஷயத்தை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க...

நாங்க சொல்ல மாட்டோம்... தல படம் வரட்டும்... செய்து காட்டுவோம். ஓகேவா...

புதுகை.அப்துல்லா June 13, 2008 at 1:41 PM  

அண்ணே சூப்பர்ணே!!!!

rapp June 13, 2008 at 2:14 PM  

அப்படி போடுங்க அரிவாள, நாமப் பண்ற அளப்பரயில தமிழ்மணமே கதிகலங்கிடனும்.

பரிசல்காரன் June 13, 2008 at 3:50 PM  

சந்தேகமே இல்லை. 2011 - ல நீங்கதான் முதலமைச்சர்!

சின்னப் பையன் June 13, 2008 at 6:32 PM  

வாங்க அப்துல்லா -> நன்றி...

வாங்க ராப் -> கண்டிப்பா...

வாங்க பரிசல்காரன் -> அவ்வ்வ்வ்...

சி தயாளன் June 13, 2008 at 11:22 PM  

கண்டிப்பா உங்கள ஒரு நாள் சட்ட மன்றத்துக்கு அனுப்பத்தான் வேண்டும்

Albert June 14, 2008 at 11:12 AM  

வாழ்த்துக்கள்.

சின்னப் பையன் June 14, 2008 at 11:42 AM  

டொன் லீ, அதிஷா மற்றும் ஆல்பர்ட் -> நன்றி...

Sivaram June 18, 2008 at 9:28 AM  

சூப்பர் !!!
அதோடு இதையும் சேத்துக்கங்க.
ச நா டு ச உ
. இப்படி கவன ஈர்ப்பு ன்னு சொல்லிட்டு எல்லா உறுப்பினர்களும் தசாவதாரம் பத்தியே பேசி என் கழுத்த அறுக்காதீங்க
. உங்க பேர்லேயே இன்னொரு உறுப்பினர் இருக்கலாம் . அதுக்காக உங்கள் பேர் சொல்லும் போது பின்னாடி அடைப்பு குறி போட்டு தொகுதி எண், வார்டு எண் , வாக்காளர் எண் எல்லாத்தையும் சொல்லி சித்ரவதை செய்யாதீங்க

சின்னப் பையன் June 18, 2008 at 11:19 AM  

வாங்க ஜீவன் -> சூப்பர்!!!

Anonymous,  June 19, 2008 at 2:21 AM  

superb, yaar!!!!!!!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP