Monday, June 16, 2008

அம்மாவுக்கு கடிதம் - அரை பக்க கதை

அன்புள்ள அம்மாவுக்கு,

நீங்கள் தம்பி வீட்டுக்கு சென்றதிலிருந்து இங்கே எல்லோரும் உங்கள் நினைவாகவே உள்ளோம். உங்கள் பேத்தி தினமும் நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று கேட்கிறாள். உங்கள் மருமகளும் உங்களுக்குப் பிடித்த இனிப்பு வகைகளை செய்து வைத்துக்கொண்டு வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள்.

ஒரு மாதம் நீங்கள் தம்பி வீட்டுக்குப் போகிறேன் என்றபோதே நான் தயக்கத்துடந்தான் ஒப்புக்கொண்டேன் என்று உங்களுக்குத் தெரியும். இன்னும் ஒரே வாரத்தில் அந்த கெடு முடியப்போகிறதென்று உங்களுக்குச் சொல்லத்தான் இந்த கடிதம் எழுதுகிறேன். அதனால், வரும் திங்கட்கிழமை நாங்கள் எல்லோரும் உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்போம்.

என்றும் உங்கள் அன்புடன்...

சுரேஷ்.

கடிதத்தை மடித்து சட்டைப்பையில் வைத்தான் - " நாளைக்கு மறக்காமல் அனுப்பிடணும்".

அலமாரியிலிருந்து நாட்குறிப்பு எடுத்து எழுத ஆரம்பித்தான்.

இன்று அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். அவர் இல்லாததால், தங்கமணி தினமும் என்னிடம் சண்டை போடுகிறாள். அடுத்த வாரம் அம்மா வந்த பிறகு, அவர்கள் இருவரையும் கோர்த்து விட்டாச்சுன்னா, எனக்கு பிரச்சினை இல்லை. நிம்மதியாக 'தமிழ்மணத்தில்' உட்காரலாம் என்று நினைக்கிறேன்.

15 comments:

சென்ஷி June 16, 2008 at 12:39 PM  

அடப்பாவிங்களா :)

ச்சின்னப் பையன் June 16, 2008 at 2:43 PM  

வாங்க சென்ஷி -> ஆமாங்க. அடப்பாவிதான்... நன்றி...

rapp June 16, 2008 at 2:45 PM  

அடா அடா அடா, என்னே ஒரு நல்லெண்ணம். உங்களுக்கெல்லாம் ஆப்பு வெக்கிறாப்போல ஒரு பதிவெழுதி நம்ம மோகன் கந்தசாமியோட(http://mohankandasami.blogspot.com) வெள்ளிவிழா மலருக்கு அனுப்பிருக்கேன், நாளைக்கு வந்து பாருங்க.வசதியா மறந்துட்டாலும் நாளைக்கு அவரு பதிவ பப்ளிஷ் பண்ண உடன் உங்களுக்குத்தான் என் முதல் நினைவூட்டல். எப்புடி?

ச்சின்னப் பையன் June 16, 2008 at 4:52 PM  

வாங்க ராப் -> ஆஹா. பேஷா குடுங்கோ.. அதையும் பாத்துடலாம்...

VIKNESHWARAN June 16, 2008 at 6:34 PM  

//நீங்கள் தம்பி வீட்டுக்கு சென்றதிலிருந்து இங்கே எல்லோரும் உங்கள் நினைவாகவே உள்ளோம். //

நெசமாவா???

VIKNESHWARAN June 16, 2008 at 6:35 PM  

//உங்கள் மருமகளும் உங்களுக்குப் பிடித்த இனிப்பு வகைகளை செய்து வைத்துக்கொண்டு வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள். //

வயசான காலத்துல இனிப்பு நீர் வந்துட போது

VIKNESHWARAN June 16, 2008 at 6:37 PM  

//உங்களுக்குச் சொல்லத்தான் இந்த கடிதம் எழுதுகிறேன். //

இந்த விசயத்த ஒரு smsல் அனுப்பிடலாம் போல...

VIKNESHWARAN June 16, 2008 at 6:38 PM  

//நிம்மதியாக 'தமிழ்மணத்தில்' உட்காரலாம் என்று நினைக்கிறேன்.//

இதுலயும் ஒரு யூகம் தானா?? நிச்சயாம சொல்ல முடியாதுங்கிறீங்க...

ச்சின்னப் பையன் June 16, 2008 at 7:32 PM  

தமிழ்மணத்துல உக்கார்றீங்களா? நாங்கெல்லாம் ச்சேர்லதான் உட்காருவோம்! (எங்ககிட்டயும் கீபோர்டிருக்கு.. நாங்களும் கடிப்போம்.. கடிச்சுட்டு.. நாங்களே சிரிச்சுக்குவோம்! ஆஆஆஆமா!)


-இதை உங்க கமெண்ட் பாக்ஸ்ல போட்டுட்டு பாத்தா publish பட்டனைக் காணோம். என்னான்னு பாருங்க! -
--
கிருஷ்ணா
@
பரிசல்காரன்

ச்சின்னப் பையன் June 16, 2008 at 7:34 PM  

வாங்க விக்னேஸ்வரன் -> மறுபடியுமா????.... அவ்வ்வ்வ். கதையை அனுபவியுங்க... ஆராயாதீங்க... :-))))

வாங்க பரிசல் ->
உங்க கமெண்டை போட்டுட்டேன்... இன்னிக்கு படுபிஸி.. ஒரு கமெண்ட் கூட போடலேங்க.. கண்டிப்பா வர்றேன்....

வெண்பூ June 18, 2008 at 2:36 AM  

என்னாது? அம்மாவும் தங்கமணியும் ஒரே வீட்லயா? ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிதான்.

அப்புறம் உங்க புண்ணியத்துல நானும் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிச்சி பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

http://venpu.blogspot.com/

VIKNESHWARAN June 18, 2008 at 7:53 AM  

வெண்பூ நானும் உங்க வலை பக்கம் வந்தேன்... ஒரு பின்னூட்டம் போடலாம்னு பார்த்தேன்... பின்னூட்ட பெட்டியை திறக்காமல் வச்சிருகிங்க...

Vijay June 18, 2008 at 9:25 AM  

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

ச்சின்னப் பையன் June 18, 2008 at 11:18 AM  

வாங்க துளசி மேடம் -> நன்றி..

வாங்க வெண்பூ -> அவ்வ்வ்வ்வ். இது என் கதை இல்லீங்கோ... கற்பனைக் கதைதாங்கோ...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP