கிபி 2030 - சிவாஜி வாயிலே ஜிலேபி
முன்:
உன்னை யாரும் கூப்பிடப்போவதில்லை என்று வருத்தப்படாமல், 'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிடு என்று பாபாஜி ( நம்ம பதிவுலக பாபா இல்லை) கூறியதால் புகழ் பெற்ற இத்தலைப்பில் இந்த பதிவு.
---
உலகத்திலேயே முதல் முறையாக - சூப்பர்ப் ஆக்டரின் திரைப்படம் ஒன்று சென்னைத் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகிறது.
சுரேஷும் அவர் பேரனும் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருக்கின்றனர். பேரன் பீர் பாட்டில்களை தயாராக வைத்துள்ளான்.
"எங்க காலத்திலே நாங்க இப்படியெல்லாம் அபிஷேகம் செய்யமாட்டோம். கொஞ்ச நாள் கழிச்சு உங்க அப்பா காலத்திலே, படம் வெளியிடும் நாள்லே தியேட்டர்லே நடிகர்கள் பேனருக்கு பால், பீர் அபிஷேகம் செய்வார்கள். இப்போ என்னடான்னா, வீட்லேயே டிவிக்கு அபிஷேகம் பண்ண பீரோடு உக்காந்திருக்கே. காலம் ரொம்ப முத்திப்போயிடுச்சு!!!" - இது தாத்தாவின் புலம்பல்.
படம் பார்க்க வந்திருக்கும் தன் நண்பர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்குகிறான் பேரன். " நம்ம தலைவர் படம். எல்லோரும் இனிப்பு எடுத்துக்கோங்க..."
படம் துவங்குகிறது. பெயர் போட்டவுடன், 'விசில்' சத்தம் காதைப் பிளக்கிறது. பேரன் பீர் எடுக்கத் தயாராகிறான்.
திடீரென்று தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பு - "தடங்கலுக்கு வருந்துகிறோம்"... "திரைப்படம் அடுத்த அரை மணி நேரம் கழித்து திரையிடப்படும். அதுவரை, பழைய திரைப்படப் பாடல்கள் - கண்டு களியுங்கள்".
"எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி..." திரையில் சிவாஜி தோன்றுகிறார். தாத்தாவுக்கு பயங்கர குஷி. "இதை பாருடா, எங்க தலைவர்... இந்த மாதிரி பாட்டு இப்பொல்லாம் எங்கே வருது?.. தலைவா... நீ சூப்பர்மா.. இரு உனக்கு ஏதாவது தரணுமே.."
சுற்றுமுற்றும் பார்க்கிறார். தட்டில் ஜிலேபி. எடுத்து சிவாஜி வாயில் அடைக்கிறார். "சாப்பிடு தலைவா.. சாப்பிடு..."
6 comments:
ஹய்யோ ஹய்ய்யோ....
கவித சூப்பர்.
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க சிவா -> அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
ஹி ஹி ஹி, நல்ல பதிவுங்க. என்ன, சிவாஜி சார் வாயே சில பழைய படங்கள்ல பார்க்க ஜிலேபி மாதிரி தான் இருக்கும்(லிப்ஸ்டிக் கைங்கர்யத்தால்)
என்னை விட சூப்பரா சமாளிச்சிட்டீங்களே!!!! நீங்களா ச்சின்னப்பையன்?
வாங்க ராப்ப் -> நன்றி...
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க நானானி... ஆமாங்க நான் நிசமாகவே சின்னப்பையந்தான்....:-))))
Post a Comment