Monday, June 9, 2008

கிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச் செய்தி!!!

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை இனிமேல் சாலைகளில் நிறுவக்கூடாதென்று உலக வங்கி ஆணையிட்டிருப்பது தெரிந்ததே.


இதனால், முதற்கட்டமாக சென்னையில் தலைவர்களின் சிலைகள் வைப்பதற்காக பத்து மாடி கட்டடம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் பத்து சிலைகள் இருக்கும்.


கீழ்த்தளத்தில் சிலை அலங்காரத்திற்காகவும், அபிஷேகத்திற்காகவும் பால், பீர், சந்தனம், பூ ஆகியவை விற்கப்படும்.

தங்கள் தலைவர்களுக்காக 'மொட்டை' போடுபவர்களுக்காக முடிதிருத்தும் நிலையங்களும் அதே வளாகத்தில் அமைக்கப்படும்.

அந்த கட்டடத்தைச் சுற்றி இரண்டு நடைபாதைகள் (சாலைகள்) அமைக்கப்படும். சிலைக்கு மாலை அணிவிக்க வரும் அரசியல் கட்சியினர் அந்த சாலைகளில் ஊர்வலம் போக வசதி செய்து தரப்படும்.

கட்டடத்தில் எல்லா சிலைகளுக்கும் 24X7 பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிலைக்கு மேலும் (அல்லது பக்கத்திலும்) திறந்தவெளி அல்லது ஜன்னல் இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சிலைகள் மேல் காக்கைகள் வந்து உட்கார வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் சிறிது காலி இடம் ஒதுக்கப்படும். மாதம் ஒருமுறை கூடும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அங்கே சந்திப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே எந்த சிலையும் போக்குவரத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதாகும். சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சிலை அப்படி தடையாக இருந்ததும், இரவில் ஒரு லாரி மோதி சேதமடைந்ததும் அனைவரும் அறிந்ததே.

4 comments:

பிரேம்ஜி June 9, 2008 at 9:19 AM  

//கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. //

கலக்கிட்டீங்க சின்ன பையன்.

//கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. //

இது சூப்பர்.

Athisha June 9, 2008 at 9:26 AM  

//மாதம் ஒருமுறை கூடும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அங்கே சந்திப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
..//

விளங்கன மாதிரிதான்
அப்பவும் அங்கனதானா

சின்னப் பையன் June 9, 2008 at 10:34 AM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

வாங்க அதிஷா -> :-)))))

rapp June 11, 2008 at 9:53 AM  

செம நக்கல் கற்பனை என்றாலும், இப்படி நிகழ்ந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும். சூப்பர்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP