ஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு!!!
முன் - 1: சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு கேள்வி/பதில் பதிவு போடணும்னு ஆசை. ஆனா, யாரும் கேள்வியே கேக்கமாட்டேன்றாங்க. (Tounge pulling கேள்விகூட கேக்கமாட்றாங்க!!!). எவ்ளோ நாள்தான் காத்திருக்குறது... அதான் 'கலைஞர்' பாணியில் நானே கேள்வி நானே பதில் பதிவு போடலாம்னு...
முன் - 2: சரி சரி.. நாலு சின்ன சின்ன மேட்டர் கையிலே இருக்கும். அதை ஒரே பதிவில் எப்படி போடறதுன்னு யோசிச்சிருப்பே... கேள்வி பதிலா போட்டுட்டே... அப்படின்றவங்க... all silent.
-----
கே: உங்களுக்கு கோபம் வருமா? யாரையாவது பிடித்துத் தள்ளியிருக்கிறீர்களா?
ப: கண்டிப்பாக தள்ளியிருக்கிறேன். ஆனால் கோபத்தில் அல்ல. சிரித்துக்கொண்டேதான். அது எப்படி என்கிறீர்களா?
ஒரு நாள் அலுவலகத்தில் ஓய்வறைக்குப் போவதற்கு, கதவைத் திறக்கப்போனேன். அப்பொழுது பார்த்து பக்கத்திலிருந்து ஒருவர் 'ஹலோ' என்றார். அவருக்கு சிரித்துக்கொண்டே 'ஹாய்' சொல்லிவிட்டு கதவைத் தள்ளப்போனால், அந்த கதவை ஏற்கனவே (உள்ளேயிருந்து) ஒருவர் திறந்துவிட்டார். பிறகென்ன, இவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே, அவரைப் பிடித்து தள்ளிவிட்டேன்.
கே: கையால் தள்ளியிருக்கிறீர்கள், சரி. யாரையாவது தலையால் முட்டி தள்ளியிருக்கிறீர்களா?ப: ஓ. அதையும் செய்திருக்கிறேன்.
ஒரு தடவை 'வால்மார்ட்'டில் பாப்பாவிற்காக ஒரு சிறிய மிதிவண்டி (இந்த ஊரில் மிதிவண்டியை, 'பைக்' என்கிறார்கள்) வாங்கப்போயிருந்தோம். ஒரு மிதிவண்டி எடுத்து பாப்பாவை ஓட்டிப்பார்க்கச் சொன்னோம். அதன் 'சங்கிலி' சுற்றாமல் அடம் பிடித்தது. நான் பெரிய மிதிவண்டியில் செய்வதுபோல், ஒரு காலை ஒரு 'பெடலில்' வைத்து கொஞ்சம் சுற்றலாம் என்றால், வண்டி 'சர்ரென்று' கொஞ்சம் முன்னே சென்றது.
நானும் நிலை தடுமாறி, நான்கடி தள்ளி முதுகு காட்டி நின்றிருந்த ஒருவர் மீது போய் தலையால் அவரை 'லேசாக' தள்ளி விட்டேன். அதற்கே அவர் 'டென்சன்' ஆகிவிட்டார் என்பது தனி கதை!!!
கே: புகைவண்டியில் போகும்போது, அதனுள்ளே நீங்கள் வேகமாக ஓடியிருக்கிறீர்களா?
ப: NY போய்விட்டு வரும்போது எங்கள் புகைவண்டி கிளம்புவதற்கு சில நொடிகளே இருந்ததால், கடைசி பெட்டியில் ஏறிவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து எங்கள் இறங்கும் இடம் வந்ததும், இறங்க முயற்சி செய்தால், கதவு திறக்கவேயில்லை. கதவைத் தட்டி தட்டி பார்த்தோம். ம்ஹூம்.
அப்போது அங்கிருந்த ஒருவர் - இந்த இடத்தில் நடைமேடை சிறிதாக இருப்பதால், கடைசி 5-6 பெட்டிகளில் கதவு திறக்காது என்றும், வேகமாக முன்னால் ஓடி எங்கு கதவு திறந்திருக்கிறதோ, அங்கிருந்து இறங்கிக்கொள்ளவும் என்று கூறினார்.
அவ்வளவுதான். எல்லா பொருட்களையும் தூக்கிக்கொண்டு பெட்டி பெட்டியாக ஓடினோம். ஒரு 5 பெட்டிகள் கடந்த பிறகு, ஒரு பெட்டியில் கதவு திறந்திருந்தது. மூச்சிறைக்க அங்கிருந்து நடைமேடையில் இறங்கிவிட்டோம்.
இறங்கிய பிறகு தங்கமணி "அப்போதிலிருந்தே உள்ளே ஏதோ அறிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்க கவனிக்காமே உங்க நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தீங்க" என்றார். நற நற...
கே: 'இவர் முகத்தில் நான் மறுபடி எப்படி முழிப்பேன்?' - என்று யார் பற்றியாவது நினைத்ததுண்டா?
ப: ஆம்.சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்தது இது. என் தாயுடன் ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். அவர் வரிசையில் போய், அங்கிருந்த பணியாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, நான் சற்று தள்ளி உட்கார்ந்திருந்தேன். அந்த பணியாளர் அங்கிருந்தே என்னைப் பார்த்து சிரித்த மாதிரி இருந்தது.
வெளியே வந்தபிறகு கேட்டேன்.
"என்னைப் பற்றி ஏதாவது பேசினீர்களா?"
"ஆம், நீ என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டார். நானும் சொன்னேன்"
"ம். என்ன சொன்னீர்கள்"
" நீ Data Entry Operatorஆக வேலை பார்க்கிறாய் என்றேன்"
ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் 'குழுத்தலைவராக' இருந்த என்னை 'Data Entry Operator' என்று மிகவும் பெருமையாக அந்த பணியாளரிடம் சொல்லியிருக்கிறார் என் தாயார். (மென்பொருள் சம்மந்தப்பட்ட பதவிகளில் அப்போது என் தாயாருக்குத் தெரிந்தது 'Data Entry Operator' ஒன்றுதான்.)
"ஏன், நீ அந்த வேலைதானே செய்கிறாய்?"அய்யோ.. நீங்கள் அப்படி சொன்னது கூட எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ஒரு வாரம் முன்னால்தான் நான் அவரிடம் கணிணி பற்றியும், 'Technology' பற்றியும் பயங்கர 'பிலிம்' காட்டியிருந்தேன். அதனால்தான் நீங்கள் அப்படி சொன்னதும், அவர் என்னை பார்த்து 'இதுக்கே' இவ்ளோ 'பில்டப்பா' என்று நக்கலாக சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் அவர் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?".
அதன்பிறகு அவரை நான் பார்க்கவில்லை.
28 comments:
கடைசி தாங்க டாப்!
இது மாறி எங்க அம்மாவும் பல பக்கம் உண்மைய (கவனிக்க உண்மைய ) உலறி வச்சு
போற பக்கமெல்லாம் மானம் போகும்
வால்பையன்
செம நக்கலு பதிவு தலிவா!!!
//இறங்கிய பிறகு தங்கமணி "அப்போதிலிருந்தே உள்ளே ஏதோ அறிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்க கவனிக்காமே உங்க நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தீங்க" என்றார். நற நற...//
நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு கேட்டு இருந்தா என்ன ஆயிருக்கும்!!! :)))
வாங்க வால்பையன் -> 'உண்மையை' நம்பிட்டேன்...
அனானி -> நன்றி..
வாங்க இ.கொ -> அது மாதிரி எதுவும் கேக்கமுடியாதுன்னுதானே, ' நமக்கு நாமே' திட்டத்துலே ' நற நற' பண்ணிட்டுருக்கேன்....:-)))
கடைசி கேள்வி பதில் டாப் ..
:-)))
பில்டப் கேள்வி பதில்......சூப்பரு:))
மிகவும் அருமை நண்பரே.
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்கள் பணி.
வாங்க பிரேம்ஜி, திவ்யா -> அது சரி. 'டென்சன்'ஆனது எனக்குத்தானே தெரியும்... நீங்க சிரிங்க.... :-)
நன்றி கரிகாலன்...
பத்திரிகைகளில் வரும் 'வாசகர் அனுபவம்' போல் இருக்கிறது. 'கேள்வி பதில்' பகுதியை விட சுவாரசியமானது இம்மாதிரி அனுபவங்கள்.
இது மாதிரி அனுபவங்களைப் பதிய Forum போன்ற அமைப்புகள் இருந்தால் சுவாரசியமாக இருக்கும். :-))
எனது கேள்வி - எதற்காக ஒரு 'ச்'ன்னாவை ஒட்டி வைத்திருக்கிறீர்கள் முன்னே. ரொம்ப 'சின்ன'ப் பையனா காண்பிக்கவா? 'ச்சின்ன ப்பையன்' இப்படியும் சொல்லலாமா?
வாங்க ஸ்ரீதர் -> நன்றி.
'Forum' - நம்ம வலைக்குழுக்களைப் போலத்தானே சொல்கிறீர்கள்?
'ச்' நீங்க சொன்னாமாதிரி 'ரொம்ப' சின்னப்பையனா காட்டத்தான்...
Are you from Metuchen?
Anony,
I am not from Metuchen.
I am from Danbury, CT.
டாப் தலைவா டாப்
கடைசி கேள்வி super
ஏம்பா? கொஞ்சம் அம்மாக்களை educate பண்ண மாட்டீங்களா?
rombathaan nakkal panreengale/
அடுத்த வாரத்துக்கான எனது கேள்விகள் :
1) இப்படி எத்தனை பேரு (கொல வெறியோட) கெளம்பியிருக்கீங்க?
2) நம்ம முதலமைச்சர காப்பி அடிச்சு எத்தனை பேரு தானே கேள்வி தானே பதில் சொல்லுவீங்க?
3) மேலே 1வது கேள்விக்கும் 2வது கேள்விக்கும் உள்ள 6 வித்தியாசம் என்ன?
வாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன் -> நன்றி.
வாங்க மின்னல் -> அவ்வ்வ்வ்வ்வ்.
வாங்க மாயவரத்தான் -> ஐயா, இது வாரா வாரம் வர்ற பகுதி இல்லீங்கோ!!! அதனாலே உங்க பதில்கள் இங்கேயே!!!
1) தெரியலீங்க. கேட்டு சொல்றேன்.
2). அதுதான் நான் முன் - 1லேயே சொல்லிட்டேனே. யாரும் என்னை கேள்வியே கேக்கமாட்டேன்றாங்க.
3). ஏங்க ஒரு வித்தியாசம்கூட தெரியலியா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கடைசி...கிகிகிகிகிகி
ரித்தீஷின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து கொண்டு இளையதளபதிக்கு ரசிகர் என்று இந்தச் சின்னப்பையனைப் போய் ஏமாற்றுகிறீர்களே...இது நியாயமா???
:-((((
ஹலோ ச்சின்னப்பையா.
கேள்வி பதிலில் யாரும் கேள்விக் கேட்கமாட்டங்கறாங்கனு நீயே கேள்வி கேட்டு, நீயே பதில் எழுதிக்கொள்கியாய். வாழ்த்துக்கள். வரவேற்கிறேன். ஆனால் பின்னூட்டம் யாரும் எழுதவில்லையென்றால், அதையும் நீயே எழுதிக்கொள்வாயா?
ஹி... ஹி... அதைத்தான் என் பதிவில் நான் செய்து கொண்டிருக்கிறேன். வரட்டா.
//மென்பொருள் சம்மந்தப்பட்ட பதவிகளில் அப்போது என் தாயாருக்குத் தெரிந்தது 'Data Entry Operator' ஒன்றுதான்//
நான் கூட வேலை தேடும் போது அடிபட்ட பெயர்களில் இந்த பெயர் தான் அதிகம் :-)
தட்டச்சு தெரியாமல் சென்று உட்கார்ந்து அவங்க தட்டச்சு செய்ய கூறி, நான் ஒரு வரி அடித்ததும் தம்பி நீ ரொம்ப வேகமாக!!! அடிக்கிறேன்னு கூறி வழி அனுப்பி வைத்து விட்டார்கள் ;)
/
'இதுக்கே' இவ்ளோ 'பில்டப்பா' என்று நக்கலாக சிரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.. இனிமேல் அவர் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்?".
/
:))))))))))
/
//மென்பொருள் சம்மந்தப்பட்ட பதவிகளில் அப்போது என் தாயாருக்குத் தெரிந்தது 'Data Entry Operator' ஒன்றுதான்//
/
கணிணி பற்றி இந்த அளவுக்கு தெரிஞ்சி வெச்சிருக்காங்களே!!!
சந்தோசப்படுங்க!!!!
:)))))
உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் யாரையாவது பிடித்துத் தள்ளி, தலையில் இடித்து, அதுவும் ஓடும் ரயிலுக்குள் ஓடியபடியே செய்து, பின்னர் அவர்முகத்தில் எப்படி விழிப்பேன் என நினைத்ததுண்டா?
கொசுறு: ஒபாமா வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
வாங்க தூயா -> நன்றி...
வாங்க செல்வம் -> சும்மா ஜாலிக்குத்தாங்க அப்படி சொன்னேன். சீரியஸா எடுத்துக்காதீங்க....:-)))
வாங்க ஜிம்ஷா -> அச்சச்சோ சத்தம் போட்டு சொல்லாதீங்க... அப்புறம் நிறைய பேர் " நாங்களும் அப்படித்தான்"னு சொல்லப்போறாங்க..
வாங்க கிரி -> :-)))
வாங்க சிவா -> ஆமாங்க.. இப்போ நிறைய தெரியும் அவங்களுக்கு..
:)))) Same Blood...
வாங்க சிறில் (சாரி, பதில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு!!!)
இதென்ன கேள்விச்சரமா?.. நானும் பதிவிலே இருக்கற பதில்களை எல்லாம் வரிசையா கோர்த்து போட்டுடவா?
போர் நிறுத்தம் அப்படின்னு ஆரம்பிச்சி நிறைய "மாற்றங்களை" கொண்டு வருவேன்னு சொல்லியிருக்காரு, நம்ம ஒபாமா மாமா. பாப்போம்.
வாங்க ஜி -> நன்றி.
உங்கள் முதல் கேள்வியின் முதல் பாகத்திற்க்குப் பதிலே எழுதலியே? இதுவும் கலைஞர் பாணியோ?
ஹாய் மதனை விட அறிவுபூர்வமான கேள்வி பதில்கள்........ஹா ஹா..நன்று தோழரே..வளமான நகைச்சுவை..ரித்தீஷ் புகை படம் பார்த்த பொழுதே சந்தேக பட்டேன்..யாவும் பகடியே..நன்று..
இப்படிக்கு
லேகா
http://yalisai.blogspot.com/
Post a Comment