Thursday, May 29, 2008

ஒரு பக்க கதை - அரைபக்க கதை

ஒரு சொற்பொழிவாளர்
பேசிக்கொண்டிருந்தார்.

கிமு-விலிருந்து இன்று வரை
நடந்த நிகழ்ச்சிகள் /
படையெடுப்புகள் /
தலைவர்கள் பிறந்த - இறந்த நாட்கள்
என அனைத்து
முக்கிய நிகழ்வுகளையும்
சுவைபட தேதிவாரியாகக்
கூறிக்கொண்டிருந்தார்.

கூட்டத்தினர் அவரது
நினைவுத்திறனை மெச்சினர்.

ஒரு சிறுவர் எழுந்தான் -
"ஐயா, ஒரு சந்தேகம்".

"என்ன"?

"உங்கள் பெற்றோர் திருமண நாள்
என்னவென்று நான்
தெரிந்துகொள்ளலாமா"?

சபையினர் அமைதி காத்தனர்.
சொற்பொழிவாளரும்தான்.

பின் - 1: மேட்டர் சின்னதுதான். ஆனா ரொம்ப முக்கியமானது, என்ன சொல்றீங்க?

பின் - 2: பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா?... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை!!!

12 comments:

வால்பையன் May 29, 2008 at 1:14 PM  

//பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா?... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை!!!//

தலைவரும் வர வர ஒரு பக்கமா (சீரியசா) தான் பதிவு போடுறாரு

வால்பையன்

சின்னப் பையன் May 29, 2008 at 1:23 PM  

நன்றிங்க இளா மற்றும் சிவா...

வால்பையன்.. ஆமா. அது யாருங்க அந்த தலைவர்....!!!...

வால்பையன் May 29, 2008 at 1:31 PM  

//ச்சின்னப் பையன் said...
வால்பையன்.. ஆமா. அது யாருங்க அந்த தலைவர்....!!!...///

இப்படி பெருந்தன்மையான ஒருத்தரை தலைவர அடையறதுக்கு நாங்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும்
(ஏற்கனவே கழுத்து பாதி அறுந்து தொங்குது)

வால்பையன்

சின்னப் பையன் May 29, 2008 at 1:42 PM  

அ. இன்னும் கொஞ்சம் பொறுங்க.. மீதியும் பதிவு போட்டே 'அறுத்துடுவோம்'...
ஆ. என்ன கொடுமை இது வால்பையன்....
இ. ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு....

மேலெ உள்ள ஏதாவது ஒரு (அல்லது எல்லா) பதிலை எடுத்துக்கோங்க வா.பை...:-)))))

பிரேம்ஜி May 29, 2008 at 1:47 PM  

//பதிவு ஏன் ஒரு பக்கமா இருக்குன்றீங்களா?... அதுதான் ஒரு 'பக்க' கதை.. அதாவது ஒரு பக்கமா (Side-ஆ) இருக்கிற கதை!!!//

:-))))))))))))

தயவு செய்து சொல்லுங்க. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?

வால்பையன் May 29, 2008 at 1:48 PM  

அ.எப்படியும் நைட்டுக்கு மொக்கை போட ஒருத்தர் கிடச்சுட்டார்

ஆ.வருங்கால வலையுல பிதாமகனுக்கு ஒரு ஐஸ் தான்

இ.இதுக்கே இப்படினா எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு

எது வேணுமோ அத எடுத்துகோங்க

வால்பையன்

சின்னப் பையன் May 29, 2008 at 1:51 PM  

அ. ஹாஹா
ஆ.ஹாஹா
இ.ஹாஹா

அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு தூங்கப்போறேன் (ஒரு மீட்டிங்). அது முடிச்சிட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் வா.பை...

வால்பையன் May 29, 2008 at 1:54 PM  

நான் இருக்கிறது தமிழ்நாட்டுல
உங்கள விட எனக்கு முக்கியமான மீட்டிங்
(நானும் தூங்க போறேன்)

வால்பையன்

சின்னப் பையன் May 29, 2008 at 3:34 PM  

வாங்க பிரேம்ஜி ->
என்ன நீங்க அபூர்வ சகோதரர்கள் ஏட்டு மாதிரி பேசறீங்க?
நானும் 'மைக்கேல்' கமல் மாதிரி சொல்றேன்... எல்லாம் தன்னாலே வருதுங்க.....:-)))

வால்பையன் ->
அ. நல்ல வேளை மீட்டிங் இருந்ததாலே மொக்கையிலேர்ந்து தப்பிச்சேன்.
ஆ. இது என்ன, ஒரு படத்திலே நடிச்சவுடனே வருங்கால முதல்வர்ன்றா மாதிரியா?
இ. எதையெல்லாமோ சமாளிச்ச நாங்க இதை சமாளிக்க மாட்டோமா?

Good Night...

நாமக்கல் சிபி May 30, 2008 at 1:51 PM  

அருமையான கதை!

ஃபினிசிங்க் டச் சூப்பர்! அதான் ஒரு பக்கக் கதைக்கான விளக்கம்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP