Thursday, May 8, 2008

மல்டி குருவி மார்க்கெட்டிங்!!!

ஆறு வித்தியாசங்கள் மாதிரி இது ஆறு ஒற்றுமைகள். நல்லா இருக்கா சொல்லுங்க!!!

காப்பி:

எம்.எல்.எம்: ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் மோசடி செய்த கும்பல் தமிழ் நாட்டுக்கு வரும்.

குருவி: ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் எடுக்கப்பட்ட படம் (Mostlyஆந்திரா) தமிழில் காப்பி செய்யப்பட்டு வெளிவரும்.

பந்தா:

எம்.எல்.எம்: ஏதாவது ஒரு ஹோட்டலில் மக்களை கூட்டி இவுங்க செய்ற பந்தா, அடேங்கப்பா...

குருவி: வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், டாக்டருக்கு ஒரு திருப்புமுனை படம் - இப்படியெல்லாம்தானே விளம்பரப்படுத்தினாங்க..

கூட்டம்:

எம்.எல்.எம்: முன்னாடி எவ்ளோ திட்டத்திலே ஏமாந்தாலும், மக்கள் திரும்ப திரும்ப கூட்டமா போவாங்க.

குருவி: முன்னாடி எவ்ளோ படத்தை பாத்து ஏமாந்தாலும், மக்கள் திரும்ப திரும்ப கூட்டமா போய் ஏமாறுவாங்க.

வசூல்:

எம்.எல்.எம்: வசூல் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. குறைந்த பட்சமே 1 கோடிதான்.

குருவி: மக்கள் நொந்து நூடுல்ஸ் ஆனாலும், 100+, 150+ நாட்களுக்கு குறையாமெ ஓட்டி வசூல் செய்வாங்க.

சமாளிப்பு:

எம்.எல்.எம்: நான் அந்த மீட்டிங்குக்கு போனேன். ஆனா பணமெல்லாம் கட்டலேப்பா. (வயித்தெரிச்சலை கிளப்பாதேப்பா. பத்தாயிரம் போச்சு).

குருவி: வெயில் கொடுமை தாங்கமே, ஏசியில் உக்காரலாமேன்னுதான் அந்த படத்துக்கு போனேன். (குடும்பத்தோட போய் 500 ரூபாய் செலவு செஞ்சி எல்லோருக்கும் தலைவலி வாங்கி வந்தது எனக்குத்தானே தெரியும்).

அடுத்து:

எம்.எல்.எம்: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மோசடி செய்தி வரும்.
குருவி: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மொக்கை படம் வரும்.

9 comments:

கிஷோர் May 8, 2008 at 12:32 PM  

வலையுலக கிரேஸி மோஹன் வாழ்க‌

Anonymous,  May 8, 2008 at 2:24 PM  

//எம்.எல்.எம்: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மோசடி செய்தி வரும்.
குருவி: ஒரு ஆறு மாதம் கழித்து மறுபடி ஏதாவது ஒரு மொக்கை படம் வரும்.//

பொறவு நாம பதிவு போடுறதுக்கு மேட்டர் வேண்டாமா ?

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

பிரேம்ஜி May 8, 2008 at 3:10 PM  

You got the rhythm to make the people laugh.Dont stop.As uaual 5 STAR Rating.

சின்னப் பையன் May 8, 2008 at 4:04 PM  

வாங்க கிஷோர் -> ஒண்ணுமே புரியலையே... இதிலே ஏதாவது உள்ள்ள்ள்குத்து இருக்குதா... எப்படி இருந்தாலும் நன்றி... :-)

வாங்க கேஆர்பி -> சரியா சொன்னீங்க... நன்றி...

வாங்க பிரேம்ஜி -> நன்றி...

கிஷோர் May 8, 2008 at 11:32 PM  

உள்குத்து வெளிகுத்தெல்லாம் இல்லைங்க.
பாராட்ட வார்த்தை தேடுறேன்.

Syam May 9, 2008 at 3:03 AM  

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....எப்புடி ராசா இப்படி....சூப்பர்...:-)

முரளிகண்ணன் May 9, 2008 at 3:39 AM  

குருவி என்பதற்குப்பதில் விஜய் படம் என்று இருந்தால் நன்றாக இருக்கும்

சின்னப் பையன் May 9, 2008 at 8:57 AM  

மிக்க நன்றி கிஷோர்....

வாங்க ஸ்யாம் -> நல்லாயிருந்துதா... நன்றி...

வாங்க முரளிகண்ணன் -> சரியா பாயிண்டை பிடிச்சிட்டீங்க... நான் 'டாக்டர் படம்'னு போடலாமா, 'குருவி'ன்னு போடலாமன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன்.. ஆனா பதிவோட தலைப்பு பிடிச்சிருந்ததாலே, 'குருவி'ன்னே வெச்சிட்டேன்... நன்றி...

technicalganesh August 2, 2009 at 9:40 AM  

மல்டி லெவல் மார்க்கட்டிங் வரலாறு இன்னதென்று தெரிய இங்கு சென்று பாருங்கள்...
http://www.panithuligal.com/the-news/69-2009-07-17-03-41-57.html

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP