Tuesday, May 6, 2008

பேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை தொலைபேசிப் பேச்சு!!!

ஹலோ, நாந்தான் அன்பழகன் பேசறேன். புஷ், எப்படியிருக்கீங்க?
என்னத்தெ சொல்றது, இன்னும் கொஞ்ச நாள்தான், நான் அதிபரா இருப்பேன். அதுக்கப்புறம் வேறே யாராவது வந்துடுவாங்க...

என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. நீங்க உடனடியா கூட்டணி மாறிடுங்க. அப்படி மாறி, எதிர்க்கட்சியோட கூட்டணி வெச்சிக்கிட்டு தேர்தலை சந்திச்சீங்கன்னா, அடுத்த தேர்தல்லெயும் வெற்றி பெற்று, மறுபடி அதிபரா ஆகிடலாம்.

அப்படியா?

நாங்கல்லாம் அப்படித்தான். தேர்தல் வர்ற்த்துக்கு சரியா ஆறு மாசம் முன்னாடி ஏதாவது சாக்கு சொல்லிட்டு எதிர்க்கட்சிக்கு போயிடுவோம். அப்புறம் என்ன, மறுபடியும் வெற்றிக்கூட்டணிதான்.

அதெல்லாம் இங்கே நடக்காதுங்க.. வேறே ஏதாவது பேசுவோம்.

சரி. நான் இப்போ போன் பண்ணினதே, உங்களுக்கு நன்றி சொல்லத்தான். கொஞ்ச நாள் முன்னாடி நான் எங்க மக்கள்கிட்டே பணப்புழக்கம் அதிகமாயிடுச்சு. நகைக்கடையிலேயும், சாப்பாட்டுக்கடைகளிலேயும் கூட்டம் நிரம்பி வழியுது பாருங்கன்னேன். அதையே காப்பி அடிச்சமாதிரி நீங்களும் இந்திய மக்கள் ஜாஸ்தி சாப்பிடறாங்க அப்படின்னுட்டீங்க.. ஆனா, ஒரு விஷயம் மறந்துட்டீங்க. அமெரிக்காவிலேயும் நிறைய இந்தியர்கள் இருக்காங்க. அவங்களும் அரிசி, கோதுமை நிறைய சாப்பிடுவாங்க.

சோ, அதனாலே?

என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க? அப்போ அங்கேயும் அரிசி, கோதுமை விலை ஏறணுமில்லே? அப்போதானே நீங்க சொன்னது நிஜம்னு ஆகும்.

ஓ, அப்படி வேறே இருக்கோ? ஆனா, அமெரிக்காவிலே இருக்கறவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

இப்படில்லாம் நினைச்சா, நீ அரசியல்லே இருக்க லாயக்கேயில்லை. இதோ பாரு, இப்போதான் நீ நிறைய பேருக்கு Economic Stimulus Pay கொடுத்திருக்கே. இந்தியர்களும் நிறைய பேர் அதை வாங்கியிருப்பாங்க. அதனாலே, இப்போ எல்லார்கிட்டேயும் பணப்புழக்கம் ஜாஸ்தியாகியிருக்கும். நான் சொல்றபடி கேளு. அரிசி விலை போன மாசம் 20lb. 16$ இருந்தது. அதை உடனடியா 26$ ஆக்கிடு. ரொம்பவே பிரச்சினை வந்தாக்கா, 1$ அல்லது 2$ குறைச்சிக்கலாம். இங்கே நாங்க பெட்ரோலுக்கெல்லாம் இப்படித்தான் பண்ணுவோம். என்ன? சொல்றது புரிஞ்சுதா?

சரியா சொன்னீங்க. உடனடியா அப்படியே செய்துடறேன். வெச்சிடட்டா?
சரி. பிறகு பாப்போம். ஜார்ஜ் வாஷிங்க்டன் நாமம் வாழ்க.

என்னது? என்ன சொன்னீங்க?
இதோ பாரு, இப்படி பழைய நல்ல தலைவர்கள் யாராவது ஒருத்தர் பேரை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கணும். அப்போதான் நாம அரசியல்லே இருக்கமுடியும். சரி. இதெல்லாம் உனக்கு எங்கே புரியபோகுது? வை போனை.

செய்தி: கனெக்டிக்கட்டில், சென்ற மாதன் 20lb. அரிசி 16$, இந்த மாதம் 26$. அதுவும் உடனடியா கிடைப்பதில்லை. 2 நாள் பொறுத்திருந்து வாங்கவேண்டியிருக்கிறது.

8 comments:

பிரேம்ஜி May 6, 2008 at 12:10 PM  

:-)))))

நியூ ஜெர்சியில் 30 டாலர்கள் சின்ன பையன்.

வெட்டிப்பயல் May 6, 2008 at 12:29 PM  

இப்பவே இங்க 26$ தான்...

ச்சின்னப் பையன் May 6, 2008 at 4:16 PM  

வாங்க பிரேம்ஜி -> ஓ பரவாயில்லையே. இங்கே 4$ கம்மி...:-)

வாங்க வெட்டிப்பயல் -> இன்னும் அதிகமாகும் போலிருக்கு...:-(

Anonymous,  May 8, 2008 at 2:17 PM  

லாஸ் ஏஞ்சலிசில் 20 lb $20 . அதுக்கே நாங்கள்ளாம் அளுவறோம். உங்களை பார்த்து மனசை தேத்திக்க வேண்டியது தான்.

Anonymous,  May 13, 2008 at 3:09 PM  

கண்ணகட்டிகுட்டு-ல ... சே..சே கனெக்டிகட்டுல எந்த ஊருங்க ? ஹார்ட்ஃபோர்ட்-ஆ ?

போனவாரம் ஒருத்தருக்கு ஒரு பை-தான்னு ரேஷன் வேற பண்ணிட்டாரு நம்ம குஜ்ஜு.

அன்புடன்
முத்து

ச்சின்னப் பையன் May 13, 2008 at 4:37 PM  

வாங்க முத்து... நாம இருக்கறது ஒரு 'குக்'கிராமங்க.. பேரு Danbury.

வால்பையன் May 14, 2008 at 11:28 AM  

ஹீ ஹீ ஹீ
இங்க கிலோ ரெண்டே ரூபா
ஆனா மத்ததுக்கெல்லாம் சொத்த எழுதி வைக்கணும்

வால்பையன்

Raj,  May 14, 2008 at 11:38 AM  

Minneapolis
20Lbs=22$
(limited one per purchase/family)

I called couple of my friends in CA...its 24$...so its all over US....

mmmm...nalla irrungada....

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP