Saturday, May 3, 2008

(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில் மேலும் ஒரு புதிய கட்சி!!!

தன் மகன்களுக்காக கடிதம் எழுதியதில் அமைச்சர் டி.ஆர்.பாலு விவகாரம் வருங்காலத்தில் என்னவாகும் என்று ஒரு சிறு கற்பனை. கீழே கொடுத்திருப்பதெல்லாம் தினத்தந்தி/தினமலர் பத்திரிக்கைகளில் வெளியாகும் 'தலைப்புச் செய்தி' வாக்கியங்கள். விரிவான செய்திகள் உங்கள் கற்பனைக்கே.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்:

- டி.ஆர்.பாலு அமைச்சர் பதவி மாற்றம். கட்சிப்பணிக்கு அழைப்பு
- டி.ஆர்.பாலு திமுகவிலிருந்து ராஜினாமா.
- பாலு திராவிட முன்னேற்ற கழகம் துவக்கம்.

தேர்தலில்:

- பாதிமுக - திமுக கூட்டணி
- டி.ஆர்.பாலு தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

தேர்தலுக்குப் பின்:

- மத்தியில் அமையவிருக்கும் கட்சிக்கு திமுக ஆதரவு
- பாதிமுக பாதியிலேயே கலைப்பு - கட்சியினர் தாய்க்கழகம் திரும்பினர்
- டி.ஆர்.பாலு மீண்டும் 'மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை' அமைச்சர் ஆனார்.
- மீண்டும் தன் மகன் கம்பெனிக்கு டி.ஆர்.பாலு கடிதம்
- 'கடிதம் எழுதியதில் என்ன தப்பு?' அமைச்சர் கேள்வி

மக்கள்:

- அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா
- 'பிள்ளையார் கண் அடித்தார்' - தமிழகத்தில் பரபரப்பு (மக்கள் மேற்கூறிய பிரச்சினையை மறந்துட்டாங்கோ!!!)


4 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ May 3, 2008 at 9:56 AM  

ஓரளவு சரி.
என்னுடைய பதிவைப் பார்க்கவும்.

http://sangappalagai.blogspot.com/2008/04/56.html

வால்பையன் May 3, 2008 at 12:57 PM  

//'பிள்ளையார் கண் அடித்தார்' - தமிழகத்தில் பரபரப்பு (மக்கள் மேற்கூறிய பிரச்சினையை மறந்துட்டாங்கோ!!!)//

இந்த நெத்தியடி பத்தாது சம்பட்டியாள அடி மாமு

வால்பையன்

சின்னப் பையன் May 3, 2008 at 2:08 PM  

வாங்க அறிவன் -> ஆமாங்க. உங்க பதிவையும் பார்த்தேன்... சரியா சொல்லியிருக்கீங்க... நன்றி...

வாங்க வால்பையன் -> நிஜம்தானே அது?... நன்றி...

Thamizhan May 3, 2008 at 3:29 PM  

பெரிசுகளே சின்னப் பையன்கள் மாதிரி உளறும் போது,சின்னப் பையன் பெனாத்துவது பரவாயில்லை தான்.
இருந்தாலும் இப்படி நேரத்தை வீணடிக்காம ஏதாவது நம்ம மக்க முன்னேற நல்ல சின்னப் பயனா வழி யோசிங்கப்பா!
நேரம் பொன்னானது!சிரிக்கலாம் சிந்திப்புடன்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP