கிபி 2030 - அட்சய த்ரிதியை.
சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கை:
கடந்த 5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், அட்சய த்ரிதியையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கு ஏற்ற நாட்கள் - அட்சய த்ரிதியைக்கு முன்னால் ஒரு வாரமும், பின்னால் ஒரு வாரமும் - ஆக மொத்தம் 15 நாட்கள் என்று புகழ்பெற்ற ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சென்ற 10 ஆண்டுகளாக தங்கம் விற்பனை வருடத்திற்கு 100% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விற்பனை அதே அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகர் சங்க அறிக்கை:
அட்சய த்ரிதியைக்கு மக்கள் தங்கள் கணவன் / மனைவிக்கு கீழ்க்கண்ட வண்ணங்களில் ஆடைகள் வாங்கிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதோடு அவரவர் வாழ்வில் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் காலம் காலமாக நம்பப்படுகிறது.
இதனால், கடந்த பல வருடங்களாக அட்சய த்ரிதியை அன்று மக்கள் தங்கள் கணவன் / மனைவிக்கு, பண்டிகைக்கு ஆடைகள் வாங்கித் தருவது அதிகரித்து வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆடைகளும் கையிருப்பில் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அட்சய த்ரிதியை அன்று:
கணவர்கள் மனைவிக்கு - பச்சை நிறத்தில் புடவை, சுடிதார் வாங்கித் தரவேண்டும்.மனைவிகள் கணவருக்கு - மஞ்சள் நிறத்தில் சட்டை, கறுப்பு நிறத்தில் பேண்ட் வாங்கித் தரவேண்டும்.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் அறிக்கை:
அட்சய த்ரிதியை தினத்தன்று தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கப்போவதற்காக ஒரு நாள் அரசு விடுமுறை அளித்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அன்று எந்த கடைக்குப் போய் வரிசையில் நின்றாலும், வெளியே வருவதற்கு அடுத்த நாள் ஆகிவிடுவதால், இந்த ஆண்டிலிருந்து அட்சய த்ரிதியைக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த அறிவிப்பு வராவிட்டால், அடுத்த திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு அறிக்கை:
அட்சய த்ரிதியை கொண்டாட்டங்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக சட்டசபையில் கடந்த ஒரு வாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது.
அட்சய த்ரிதியை ஒரு தமிழர் பண்டிகையே அன்று. அந்த பண்டிகை, வைகாசி** மாத வளர்பிறை மூன்றாம் நாள் கொண்டாடப்படுவதற்கு போதிய சரித்திர சான்றுகள் இல்லை.
அதனால், இந்த ஆண்டிலிருந்து, அட்சய த்ரிதியை வைகாசி மாதத்திற்கு பதிலாக, புரட்டாசி மாத வளர்பிறை மூன்றாம் நாள் கொண்டாடப்படவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அரசு ஆணை இந்த வாரமே வெளியிடப்படும்.**சந்திரனின் சுழற்சியைக் கொண்ட பஞ்சாங்கத்தின்படி.
9 comments:
கலக்கல்
போட்டு தாக்கிட்டீங்க சின்ன பையன்!
வாங்க இளா மற்றும் பிரேம்ஜி -> நன்றி... மீண்டும் வருக....:-))
எல்லாஞ்சரி, ஒன்னே ஒன்னைத்தவிர.
//அட்சய த்ரிதியைக்கு முன்னால் ஒரு வாரமும், பின்னால் ஒரு வாரமும் - ஆக மொத்தம் 15 நாட்கள் //
அட்சயத் திருதியைக்குப் பொருள்வாங்க நல்ல நாள் என்று (இனி) ஜோதிடர்கள் குறித்திருப்பது இப்படி.....
அட்சயத்திருதியைக்கு முன் 182 நாளும் அட்சயத்திருதியைக்குப் பின் ம182 நாளும் நல்லநாட்கள்.
வாங்க துளசி மேடம் : அது சரி.. தங்கம் வாங்கறதுக்கு தங்கமணிக்கு சொல்லணுமா... 365 நாட்களும் ரெடியா இருப்பாங்க.... அதிலேயும் ஜோதிடர்கள் சொல்லிட்டாங்கன்னா... நெனெச்சி பாக்கவே முடியல...
சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட எங்கள் தலைவர் ச்சின்னப்பையன் வாழ்க.
மஞ்சள் கருப்பு காம்பினேஷன் இல்ல, பச்சை சிவப்பு காம்பினேஷனா இருந்தாலும் நம்மாளுங்க மனசாட்சியே இல்லாம கடைபிடிப்பாங்க
soooober... :-)
வாங்க கிஷோர் -> அது சரி... ஜோசியர் சொல்லிட்டா வேறே பேச்சே இல்லையே....:-)))
வாங்க ஸ்யாம் -> நன்றி...
Post a Comment