யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!
யூ.கே.ஜி படித்த ஒரு சிறுமி 'கேம்பஸில்' தேர்வாகி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கும் என்று ஒரு சிறு கற்பனை.
நேத்து 'கோலங்கள்' பாக்கமுடியலே. அதனாலென்ன, இங்கெயிருக்கிற அங்கிள் எல்லோரும் பாத்திருப்பாங்க. Status Meeting-லே அதெதானே பேசபோறாங்க. அப்போ தெரிஞ்சிக்கலாம்.
---
இதோ பாரும்மா, என்னோட மென்பொருள்லே நீ நிறைய தவறுகளை கண்டுபிடித்திருக்கலாம். அதுக்காக, என் அப்பா அம்மாவை நாளைக்கு அலுவலகத்துக்கு கூட்டிண்டு வான்னு சொல்றதெல்லாம் டூ மச். ஆமா.
---
சிரிப்பே வரலேன்னாகூட அந்த அக்கா சொல்றதுக்கெல்லாம், இந்த அங்கிள் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கறாரு?
---
ஒரு வாரமா தினமும் Meeting போடறாங்க. அதிலே தினமும் பேசினதையே பேசறாங்க. ஏன்னு புரியலையே?
---
தப்பு செஞ்சா கடவுள் கண்டுபிடிச்சுடுவாருன்னு அம்மா சொன்னாங்க. அப்போ 'Test Director'தான் கடவுளா?
---
'Multi Tasking' அப்படின்னா என்ன அங்கிள்னு கேட்டதுக்கு, சுடோகு விளையாடிகிட்டே, பாட்டு கேட்டுகிட்டே, காபி குடிச்சிகிட்டே, தமிழ்மணம் பாத்துகிட்டே, ஜிடாக்லே பேசறதுதான் அப்படின்றாரே, நிஜமாயிருக்குமோ?
---
இந்த ஆண்டி ரொம்ப நல்லவங்க. என் அம்மா மாதிரியில்லே. ஏன்னு கேக்கறீங்களா?. என் அம்மா எவ்ளோ நேரம் கதை சொன்னாகூட எனக்கு தூக்கமே வராது. ஆனா, இந்த ஆண்டி பயிற்சி வகுப்பு (Training) எடுக்க ஆரம்பிச்சவுடனே, எல்லோரும் அமைதியா தூங்க ஆரம்பிச்சிடறாங்க...
6 comments:
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை
வால்பையன்
அப்படி போடு.
இந்த Multi Tasking சொந்த கதைங்களா??
வாங்க வால்பையன், நன்றி..
வாங்க பிரேம்ஜி -> ச்சீ போங்க.. இப்படி வெளிப்படையா கேட்டா எப்படி?
//சிரிப்பே வரலேன்னாகூட அந்த அக்கா சொல்றதுக்கெல்லாம், இந்த அங்கிள் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கறாரு?//
ஹா..ஹா..:))))
இது சூப்பர்:))
//'Multi Tasking' அப்படின்னா என்ன அங்கிள்னு கேட்டதுக்கு, சுடோகு விளையாடிகிட்டே, பாட்டு கேட்டுகிட்டே, காபி குடிச்சிகிட்டே, தமிழ்மணம் பாத்துகிட்டே, ஜிடாக்லே பேசறதுதான் அப்படின்றாரே, நிஜமாயிருக்குமோ?//
இது டாப்பு:))
வாங்க ரசிகன் -> ரசித்ததற்கு நன்றி.
Post a Comment