ATG (Asked To Go) - அரைபக்க கதை
சுரேஷ் தன்னைத்தானே நொந்துகொண்டான்.
கொடியதிலும் கொடியது - தனக்குக் கீழ் வேலை பார்ப்பவனை (ரமேஷ்) - இன்றோடு உன் வேலை முடிந்துவிட்டது என்று வேலையை விட்டுத் தூக்குவது. இப்போது இது எல்லா இடத்திலும் சகஜமாகிவிட்டாலும், இவ்வளவு நாள் நண்பனைப் போல் பழகியவனிடம் இதை எப்படி சொல்வது?
என்ன சொல்லவேண்டுமென்று ஒரு முறை தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்ட பிறகு, தொலைபேசியில் கூப்பிட்டான்.
"ரமேஷ், ஒரு நிமிடம் என் அறைக்கு வரமுடியுமா?"
தொண்டையை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தபோது, சுரேஷின் தொலைபேசி அலறியது. மறுமுனையில் சுரேஷின் பாஸ்.
"சுரேஷ், ஒரு நிமிடம் என் அறைக்கு வரமுடியுமா?"
சுரேஷ், பாஸின் அறைக்குள் நுழைந்தான்.
"சுரேஷ், வாங்க. நான் உங்ககிட்டே ஒரு ஐந்து நிமிடம் பேசணும்..." - தயக்கத்துடன் ஆரம்பித்தார் பாஸ்.
அப்போது அவரின் தொலைபேசி அலறியது...
4 comments:
கம்பெனியில மொத்தமா எல்லார் சீட்டும் கிழியுது போல...
வாங்க பிரேம்ஜி -> ஆமாங்க. நல்லவேளை இது எங்க கம்பெனி இல்லே......:-)))
நல்ல கதை.....
ஆமா எங்க ஒரு வாரமா ஆளையே காணோம். ஆபிஸ்ல நெறைய ஆணி சேந்துருச்சோ?
வாங்க வெண்பூ -> ஆஆ.. என்ன இப்படி 'நோட்' பண்றீங்க?.. ஆமாங்க.. 'ட்ராப்ட்ஸ்'லே இருந்த பதிவுகளைக்கூட வெளியிட முடியாத நிலைமைலே இருந்தேன்.... தினமும் 'same blood' தான்...:-(((((((
Post a Comment