Monday, May 26, 2008

குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்!!!

அப்பா இங்கே பாருப்பா இந்த அக்காவை. எப்போ பாரு மைக்கை தூக்கி என்மேலே அடிச்சிக்கிட்டே இருக்காங்க.

---

அண்ணி, எனக்கு தலை சுத்துது. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கறேன். ஏதாவது வாக்கு அளிக்கணும்னா என் கையை தூக்கி காட்டுங்க. கை தட்டணும்னா என் கையைப் பிடிச்சு மேஜையை தட்டுங்க.

---

இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே பேசும்போதெல்லாம் நீங்க வெளி நடப்பு செய்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே...

---

பங்காளி, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்கிட்டேதான் வரணும். ஞாபகம் வச்சுக்க. நான் என்ன பேசினாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்காதே, சரியா?

---

இங்கே இருக்கறவங்க அத்தனை பேர்கிட்டேயும் சொல்லிக்கறேன். நான் தயாரிச்ச படம் பார்க்க எல்லோரும் நாளைக்கு மதியம் 'சத்யம்' தியேட்டருக்கு வந்திடுங்க.

---

அம்மா, நம்ம சித்தப்பா குடும்பத்திலேர்ந்து இன்னிக்கி யாரையும் காணலே?

சித்தப்பா ஒரு படம் எடுக்கறாரில்லே. அதிலே அவர் பெரிய பையந்தான் இயக்குனர். சின்னவன் கதானாயகன். பொண்ணு இசை. அதனாலே, அவங்க குடும்பமே இன்னிக்கு சபைக்கு வரலே.

---

பெரியப்பா, அங்கே மாடத்திலே உக்கார்ந்திருக்காங்களே, அவங்களை நான் விரும்பறேன்.

கவலைப்படாதே மகனே, அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்.

--

மாமா, நம்ம சென்னை கிங்ஸ் ஜெயிச்சிடுச்சு!!!

சூப்பர்டா மாப்ளே...

---

தாத்தா, அடுத்தது நான் பேசட்டுமா?

இருடா பேராண்டி, அவசரப்படாதே. நான் சொல்றேன்.

4 comments:

வால்பையன் May 28, 2008 at 12:40 PM  

நீங்க உங்க குடும்பத்தோட எப்ப உள்ள போக போறிங்க
(அட சட்டசபைக்கு தாங்க)

வால்பையன்

மங்களூர் சிவா May 29, 2008 at 1:13 PM  

/
வால்பையன் said...

நீங்க உங்க குடும்பத்தோட எப்ப உள்ள போக போறிங்க
(அட சட்டசபைக்கு தாங்க)
/

ரிப்பீட்டேேஏஏஏய்

சின்னப் பையன் May 29, 2008 at 1:21 PM  

வாங்க வால்பையன் மற்றும் சிவா -> ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு.....???....!!!!

Sathiya July 1, 2008 at 11:27 PM  

//இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே பேசும்போதெல்லாம் நீங்க வெளி நடப்பு செய்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே...//
ஐய்யோ ஐய்யோ:)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP