ஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்!!! - ஒரு (பெரிய) ஜாலி கதை
ஹலோ. யாருப்பா அது. என் அலமாரியை நோண்டிக்கிட்டிருக்கிறது?
டாக்டர், நான் சொல்றேன். அவர் என் கணவர்தான். தப்பா எடுத்துக்காதீங்க. அவர் பதிவு போடுவதற்காக ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு உங்க அலமாரியை பார்த்துக்கிட்டிருக்கார்.
என்னது, பதிவா? அப்படின்னா. நீங்க எதுக்காக வந்துருக்கீங்க? யாருக்கு என்ன பிரச்சினை?
டாக்டர். பிரச்சினை என் கணவருக்குதான். அவர் ஒரு மென்பொருள் நிபுணர். ஆனா சமீபகாலமா, தமிழ் வலைப்பதிவு உலகத்திலெ நுழைஞ்சி தினமும் ஒரு பதிவு போட்டுண்டிருக்கார். அந்த பதிவை தமிழ்மணம் திரட்டியில் இணைச்சிருக்கார். அந்த பதிவு போடுவதற்கான மேட்டர் தேடுவதில் ரொம்பவே மெனக்கெடறார்.
சோ, அதில் என்ன பிரச்சினை?
பதிவு எழுத ஆரம்பிச்சபிறகு, குடும்பத்தை சரியாவே கவனிக்கமாட்டேங்கிறார். அலுவலகத்தை விட்டு வந்து வீட்டிலேயும் மடிக்கணினி வெச்சிண்டு உக்கார்ந்தார்னா, பக்கத்துலே குண்டு விழுந்தாக்கூட அவருக்கு கேக்காது. அப்படியும் தொந்தரவு செய்தோம்னா, உடனே கோபம் வந்துடும். எரிஞ்சி விழுவார். அதனாலே பி.பி இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க ப்ளீஸ்.
இருக்கட்டுமேம்மா... ஆழ்ந்து ஈடுபட்டு ஒரு வேலையை செய்றாருன்னா அதுக்காக சந்தோஷப்படறதை விட்டுட்டு ஏன் வருத்தப்படணும்?
ஒரு பதிவு போடறதுக்காக இவரு பண்றதையெல்லாம் கேட்டீங்கன்னா இப்படி சொல்லமாட்டீங்க டாக்டர்.. உதாரணத்துக்கு சொல்றேன் பாருங்க.
அ) தொலைபேசியிலே ராங் நம்பர் வந்தாக்கூட அரை மணி நேரம் பேசறது.
ஆ) போக்குவரத்து சிக்னல்லே நின்னாக்கூட சுத்திமுத்தி பாத்துக்கிட்டே இருக்கார். அந்த ஒரு நிமிஷத்திலே, பக்கத்துலே நிக்கறவங்ககூட பேச்சு வேறே.
இ) மளிகைக்கடை பொட்டலங்கள் மடிச்சி வர்ற பேப்பர்களை வரிக்கு வரி படிக்கறது.
இதெல்லாம் எதுக்குன்னு நினைக்கிறீங்க? பதிவு போட ஏதாவது செய்தி கிடைக்காதான்னுதான். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு டாக்டர். இவரை தமிழ்மணம் பக்கம் போகாதீங்கன்னு சொல்லுங்க.
(டாக்டர் ஒரு பத்து நிமிடம் வலைப்பதிவு/தமிழ்மணத்தை பற்றி அவருடன் பேசுகிறார்).
அப்படியில்லைமா. இவரு தமிழ்மணம் படிக்க/பதிவு போட ஆரம்பிச்சபிறகுதான் ரொம்ப சுறுசுறுப்பா இருக்காருன்னு சொல்ல வரேன். பலதரப்பட்ட விஷயங்களை தெரிஞ்சிண்டிருக்காரு. இந்திய/உலக அரசியல், திரைப்பட/கலையுலக செய்திகள், பக்தி இலக்கியங்கள்/தமிழ்க்கடவுள் பற்றி, கண்ணதாசன்லேர்ந்து திபெத் பிரச்சினை வரைக்கும் அத்தனையும் இவருக்கு அத்துப்படி ஆயிருக்கு. அது ரொம்ப நல்ல விஷயம். மேலும் இதிலே பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை.
சரி டாக்டர். சாதாரண நாள்லே இவரோட நடவடிக்கைகளைப் பாத்து எனக்கு பயமே இல்லை. ஆனா ஏதாவது போட்டின்னு வந்துட்டா இவர் பணற அட்டகாசம் தாங்கமுடியலை. தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வெச்சிடலாம்னு தோணுது.
போட்டியா? அப்படின்னா?
வலையுலகத்துலே அப்பப்போ சில போட்டிகள் நடக்கும். புகைப்படப்போட்டி, கதைப்போட்டி இப்படி. இப்போகூட பாருங்க, ஒரு சங்கம் துவங்கி ரெண்டு ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஒரு போட்டி வெச்சிருந்தாங்க. இவரும் அதுக்காக ரெண்டு பதிவுகள் போட்டார்.
அப்படியா?
அந்த போட்டிக்காக பதிவு போடணும்னு என்ன கூத்து பண்ணினாருன்னு தெரியுமா டாக்டர்? ரெண்டு வாரமா யாரோடும் பேசலே. ஓய்வறைக்கு போயிட்டார்னா ரெண்டு மணி நேரம் உள்ளே யோசிச்சிண்டே இருப்பாரு. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் தனியா பேசிண்டே, சிரிச்சிண்டே இருப்பாரு. இவரோடு சேர்ந்து பாருங்க, நானும் ரெண்டு ரெண்டுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.
அவளை விடுங்க டாக்டர். நான் ரொம்ப தெளிவா இருக்கேன். ரெண்டு போட்டிக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த வருஷத்துக்கான போட்டிக்கும் நான் இப்பவே பதிவு ரெடி பண்ணிட்டேன். அந்த சங்கத்தோட அஞ்சாவது வருஷத்துக்கான போட்டிக்கு - அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி... அப்படின்னு அஞ்சு பதிவுக்கான செய்திகளை தயாரா வெச்சிருக்கேன்.
சரி டாக்டர், நீங்க இன்னும் பிரச்சினையை உணரலைன்னு நான் நினைக்கிறேன். ஒரு பயங்கரமான உண்மையை நான் இன்னும் உங்ககிட்டே சொல்லவேயில்லை.
அப்படியா, அது என்ன?
இவர் ரெண்டு/மூணு வலைப்பூ வெச்சிருக்கார். இவரோட பேர்லே ஒண்ணு, நண்பர்களோட சேர்ந்து ஒண்ணு, அவங்களுக்கே தெரியாம ஒண்ணு இப்படி. எல்லாத்துலேயும் வேறே வேறே பேர்லே எழுதறார். வேறே யாரும் இவருக்கு பின்னூட்டம் போடலேன்னா, இவரே ரெண்டு பதிவுலேயும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்கறார். எனக்கு என்னமோ, அன்னியன் படத்துலே வர்றாமாதிரி 'மல்டிபிள் பெர்சனாலிட்டி' பிரச்சினை இருக்குமோன்னு சந்தேகத்துலேதான் உங்ககிட்டேயே வந்தோம்.
சரிம்மா. இவ்ளோ பிரச்சினையை வெச்சிக்கிட்டு நீங்க முன்னாடியே வந்துருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நான் உடனே வேலையில் இறங்கறேன். சார், நீங்க எனக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கணும். என்ன?
(இப்படி சொல்லிவிட்டு டாக்டர் சீரியஸாக ஏதோ எழுத ஆரம்பிக்கிறார். இந்த கதையை படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதை Zoomin செய்து காட்டுகிறேன். நீங்களே படித்துக்கொள்ளுங்கள்).
முதல் பூ - தனிப்பதிவு - என் அனுபவங்கள்
ரெண்டாவது பூ - என் நர்ஸோடு சேர்ந்து - வாய் விட்டு சிரி
மூன்றாவது பூ - அனானியாக - கதை, கட்டுரை, அரசியலுக்காக
(இப்படியாக மேலும் ஒரு வலைப்பதிவர் பூ தொடுக்க ஆரம்பித்துவிட்டார்).
21 comments:
:-)))))))
காமெடி நல்லா சரளமா வருது பாஸ் உங்களுக்கு.அசத்தல்.
:-))))))))
////பதிவு எழுத ஆரம்பிச்சபிறகு, குடும்பத்தை சரியாவே கவனிக்கமாட்டேங்கிறார். அலுவலகத்தை விட்டு வந்து வீட்டிலேயும் மடிக்கணினி வெச்சிண்டு உக்கார்ந்தார்னா, பக்கத்துலே குண்டு விழுந்தாக்கூட அவருக்கு கேக்காது. அப்படியும் தொந்தரவு செய்தோம்னா, உடனே கோபம் வந்துடும். எரிஞ்சி விழுவார். அதனாலே பி.பி இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு./////
சொந்த அனுபவமா?
வெளங்கிரும்...
:)))
'விவசாயி' இளா
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க வாங்க துளசி மேடம் -> நன்றி...
வாங்க வாத்தியார் ஐயா -> என்ன இப்படி சபையிலே கேட்டுட்டீங்க?.. வாத்தியார்கிட்டே பொய்கூட சொல்ல முடியாது.....:-(((
வாங்க இளா -> ஆமா ஆமா... :-)))
:)))))))))))))
நல்லா இருந்தது...
Senthil,
Bangalore
இப்படிப்பட்ட ஒரு ஜென்மத்த நான் பார்த்ததே இல்ல பா. எப்டி இப்டி பின்னுரீங்க.
சும்மா பட்டாசா எழுதறீங்க.
நீங்க ஏன் சினிமால வசனம் எழுத கூடாது? (ஏதோ நம்மால கொளுத்த முடிஞ்சது)
வாங்க செந்தில் -> ரசித்ததற்கு நன்றி...
வாங்க கிஷோர் -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமாயிருக்கு....:-))))
பதிவெழுதறவங்களை
பாத்தா நக்கலு???
இருக்கட்டும் இருக்கட்டும்!!
நான்கூட மூனு ப்ளாக் வெச்சிருக்கேன் ஆனா ஒரே பேர்ல எழுதறேன்
:((((((((
வாங்க மங்களூர் சிவா -> ஹாஹா. நீங்களும் மூணு பதிவுகள் வெச்சிருக்கீங்களா!! ஆனா இது யாரையும் குறித்து எழுதப்பட்ட பதிவு இல்லீங்கோ... டிஸ்கி போடலேன்னாக்கூட டமாஸா எடுத்துப்பீங்கன்னு எழுதினதுதாங்கோ!!!!!!!
/
ச்சின்னப் பையன் said...
வாங்க மங்களூர் சிவா -> ஹாஹா. நீங்களும் மூணு பதிவுகள் வெச்சிருக்கீங்களா!! ஆனா இது யாரையும் குறித்து எழுதப்பட்ட பதிவு இல்லீங்கோ... டிஸ்கி போடலேன்னாக்கூட டமாஸா எடுத்துப்பீங்கன்னு எழுதினதுதாங்கோ!!!!!!!
/
நீங்க என்னைக்கு சீரியஸா எழுதிருக்கீங்க இத தப்பா எடுத்தக்கறதுக்கு!?!?!
நான் சும்மாதானுங்க சொன்னேன்.
நீங்களும் அப்படித்தானா ?
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
நன்றிங்க சிவா.. சீரியஸையும் நக்கலா சொல்லத்தான் முயற்சி பண்றேன்... பாக்கலாம்...:-)
வாங்க கேஆர்பி -> நான் அப்படி இல்லீங்கோ... ஒரே ஒரு பூதான் வெச்சிருக்கேன்... :-)
சான்ஸே இல்லீங்க.....காமெடி உரையாடல் அல்டிமெட்!
மிகவும் ரசித்து சிரித்தேன்!!
\இவர் ரெண்டு/மூணு வலைப்பூ வெச்சிருக்கார். இவரோட பேர்லே ஒண்ணு, நண்பர்களோட சேர்ந்து ஒண்ணு, அவங்களுக்கே தெரியாம ஒண்ணு இப்படி. எல்லாத்துலேயும் வேறே வேறே பேர்லே எழுதறார். வேறே யாரும் இவருக்கு பின்னூட்டம் போடலேன்னா, இவரே ரெண்டு பதிவுலேயும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்கறார்\
ROTFL:)))
this is the highlight!!
Hilarious post!!!
//பதிவு எழுத ஆரம்பிச்சபிறகு, குடும்பத்தை சரியாவே கவனிக்கமாட்டேங்கிறார். அலுவலகத்தை விட்டு வந்து வீட்டிலேயும் மடிக்கணினி வெச்சிண்டு உக்கார்ந்தார்னா//
அங்கயுமா....இந்த தங்கமணிஸே இப்படித்தான் அவங்களோட ரங்கமணிஸ் அறிவு வளரவே விடமாட்டாங்க....:-)
வாங்க திவ்யா -> ரசித்ததற்கு நன்றி.. மீண்டும் வருக...
வாங்க ஸ்யாம் -> எல்லாத்துக்கும் பொறாமைதான் காரணம். சரிதானே?.....:-)))
haa..haa.. super:))
மிகவும் ரசித்து சிரித்தேன் பின்னூட்டம் உட்பட
வாங்க ரசிகன் மற்றும் முரளிகண்ணன் -> நன்றி...
Post a Comment