அமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு!!!
முன்னுரை: இந்த கட்டுரையில் வரும் (அமெரிக்காவின்) இடங்களின் பெயர்கள் படிப்பதற்கு வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார்.
அவருடன் நானும் (ச்சின்னப்பையன்) மற்றும் The News Times நிருபர் ஒருவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். JFK-யிலிருந்து Danbury வருவதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ளுமாறு Captain நிருபரிடம் கூறினார். இனி பேட்டி:
எந்த கட்சியுமே Danbury-யில் அலுவலகம் திறக்காத நிலையில், நீங்கள் மட்டும் அலுவலகம் திறந்திருக்கிறீர்களே, ஏன்?
இங்கே நிறைய தமிழர்கள், என் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னை அன்போடு அழைத்து, ஒரு அலுவலகம் திறந்தால் கட்சி வளரும் என்று கூறினார்கள். அதோடு இங்கே வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அந்த பிரச்சினைகளை போக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே அலுவலகம் திறந்திருக்கிறேன்.என்ன பிரச்சினைகள் என்று சொல்வீர்களா?
இங்கே நிறைய தமிழ் மக்கள் இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு கோவில் கிடையாது. பக்கத்திலுள்ள கோவிலுக்கு சுமார் 40 மைல்கள் செல்லவேண்டும். இந்திய திரைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்றால், வேறொரு திசையில் 30 மைல்கள் தாண்டி செல்லவேண்டும். இவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு இந்திய பலசரக்குக் கடைதான் இருக்கிறது. அங்கேயும் எப்போதும் பொருட்கள் தட்டுப்பாடுதான். இதையெல்லாம் எதிர்த்து எங்கள் கட்சி போராடும்.
இங்கே எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? என்னென்ன செய்யப்போகிறீர்கள்?
-> இன்றிரவு I-84 Exit 7க்கு அருகில் இருக்கும் Park & Ride அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.
-> அதற்காக I-84 Exit 1ல் இருந்து பேரணி புறப்பட்டு, Exit 7ல் முடிவடையும்.
-> கூட்ட முடிவில், அதே Park & Rideல் நம் கட்சிக்காக பாடுபடும் திரு. சதீஷ் அவர்களின் மார்பளவு சிலை திறக்கப்படும்.
-> நாளை நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் வீட்டில் விருந்து சாப்பிடுகிறேன்.
-> நாளை மாலை Walmartல் shopping செய்துவிட்டு, இரவே சென்னைக்குப் புறப்படுகிறேன். இப்போது எனக்கு சிறிது ஓய்வு தேவை. வணக்கம்.
விமானத்தில் வந்த களைப்பில் Captain சிறிது ஓய்வு எடுக்கிறார்.
பிறகு மாலையில் பேரணி அட்டகாசமாக துவங்கி, பொதுக்கூட்டத் திடலில் முடிகிறது. Captain மேடையில் நின்று கொண்டு கையசைத்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். அடுத்த ஒரு மணி நேரம் பேசி தொண்டர்களை மகிழ்விக்கிறார். அவர் பேசிமுடித்தபிறகு - "அடுத்து நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் அவர்கள் பேசுவார்கள்" என்று அறிவிக்கிறார். (கூட்டத்திலிருந்து வரும் கைதட்டல் ஒலி விண்ணை எட்டுகிறது).நான் கைகூப்பிக்கொண்டே என் இருக்கையை விட்டு எழுகிறேன்.
திடீரென்று டம்-என்று ஒரு சத்தம்.
"வாரயிறுதி ஆச்சுன்னா மதியம் நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடவேண்டியது.. சாப்பிட்டப்புறம் யானையே நுழைந்தாலும் தெரியாதவாறு வாயை திறந்து போட்டு தூங்கவேண்டியது.. இதிலே கனவு வேறு... கடவுளே... இப்பவாவது கண்ணைத் தொறங்க... உங்க மடியிலே இருந்த மடிக்கணிணி கீழே விழுந்துடுச்சு பாருங்க... போச்சு.. போச்சு.. இனிமே வேலை செய்யுமான்னு தெரியலே.. ஆண்டவா... "
நான் எழுந்து நின்று 'கேப்டன் வாழ்க!!!' என்று ஏன் சொல்கிறேன் என்று புரியாமல் என் தங்கமணி விழிக்கிறார்.
21 comments:
//JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார். //
Gaptainனை Captain என எழுதி அவமானப்படுத்திய ச்சின்னப்பையனுக்கு என் வன்முறையான கண்டனங்கள். இதற்கு மேல் இந்தப் பதிவைப் படிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சச்சோ... இ.கொ.. கேப்டனை கேப்டன்னும் சொல்லலாம்... நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம் அப்படின்னு நினைச்சேன்... (பூ.. புய்பம் மாதிரி)... இனிமே நீங்க சொல்ற மாதிரியே சொல்லிடறேன்.. பதிவை தயவு செய்து படிச்சுடுங்க......:-))))
//சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார//
கேப்டன், விமானத்துக்கு வெளியே தான தொத்திட்டு வந்தாரு ???
//Gaptainனை Captain என எழுதி அவமானப்படுத்திய ச்சின்னப்பையனுக்கு என் வன்முறையான கண்டனங்கள்.//
2011 முதல்வரை இப்படி அவமானப் படுத்துவதற்கு கடுமையான கண்டனங்கள்.
'விவசாயி' இளா,
செயலாளர்.
தே.மு.தி.க நியூ ஜெர்சி.
உடல் மண்ணுக்கு, உயிர் விசயகாந்துக்கு
சின்ன பையா மச்சான் பேரு சதீஷ் இல்ல சுதீஷ் சரியா. ஏன் சின்ன புரட்சி தலைவி பற்றி கூறாமல் விட்டு விட்டிர்கள்.
வாங்க களப்பிரர் -> ஹாஹா... ஆமா ஆமா... அப்பப்போ 'ஜூஸ்' குடிக்க மட்டும் கதவைத் திறந்துகிட்டு உள்ளே போனாருன்னு சொன்னாங்க...:-))))
வாங்க இளா -> மேலே இ.கொ.வுக்கு சொன்னேன் பாத்தீங்களா... புஷ்பம் புய்பம் மாதிரி சொல்லலாம்னு நெனெச்சேன்... நாமெல்லாம் ஒரே கட்சியில் (தேமுதிக) இருந்துகிட்டு காங்கிரஸ் மாதிரி அடிச்சிக்கலாமா...
வாங்க திலீபன் -> கேப்டன் பேர்தான் தப்பா அடிச்சேன்னு நினைச்சேன்... அவர் மச்சான் பேரும் தப்பா... இன்னும் யார்லாம் திட்டப்போறாங்களோ......:-((((
ஹா..ஹா..ஹா
:-))))
வாங்க பிரேம்ஜி -> நல்லாயிருந்துச்சா, நன்றி...
ஹா ஹா ஹா கலக்கீட்டியே சின்னப் பையா .
இந்தப் பதிவு தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு புதிய வலைப்பதிவாளருடைய பதிவை ஒத்திருக்கிறதே!
http://parisalkaaran.blogspot.com/2008/05/blog-post_21.html
ஒகே. ஒகே.. நடத்துங்க! கனவு காணுங்கள்-ன்னு கலாம் சொன்னா, அதுக்காக இப்படியா!
வாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன் -> நன்றி..
வாங்க பரிசல்காரன் -> ஓ. ஆமாம். உங்க பதிவையும் பார்த்தேன். கமெண்ட்டிட்டேன். ஆமாங்க. கலாம் எல்லோரையும்தானெ கனவு காணச் சொன்னார்.....:-))))
அந்த ஊர்ல தீவிரவாதி யாரும் இல்லையா?
இரு ஒரு மணி நேரம் பேசி அவனை இந்திய கொடிக்கு ஒரு சல்யூட் அடிக்க வெச்சு இருபாரே
அதெப்படி? கேப்டன் சிகாகோவுக்குத்தான் முதல் அப்பாயிண்ட்மண்ட் குடுத்திருக்காரு.
இப்படிக்கு,
(அகில உலக) தே.மு.தி.க செயலாளர்(சிகாகோ)
வாங்க குசும்பன் -> :-)))
கேப்டன் வரும்போது ஒரு செட் 'தீயணைப்பு படை வீரர்' உடையையும் கொண்டு வரச்சொல்லியிருக்கேன்...:-)))
வாங்க சிறில் -> முதல்லே அங்கேதாங்க வர்றதா இருந்தாரு. தீவிரவாதிங்க அவர் விமானத்தை கடத்தி இங்கே இறக்கி விட்டுட்டாங்க....:-)))
//முதல்லே அங்கேதாங்க வர்றதா இருந்தாரு. தீவிரவாதிங்க அவர் விமானத்தை கடத்தி இங்கே இறக்கி விட்டுட்டாங்க....:-)))//
இருக்க முடியாது. கேப்டன் தீவிரவாதிகளை துவம்சம் செஞ்சுடுவாரே.
:)
அட ஆமாங்க சிறில், நாங்ககூட அப்படித்தான் நினைச்சோம்.. ஆனா, அவரு தீவிரவாதிங்ககூட சண்டை போடறதுக்குள்ளே - கதாநாயகிகூட ஒரு டூயட் பாடணும்னு NY போனாரு. அதுக்கப்புறம் இடைவேளை வேறே விட்டுட்டாங்க.. அதனால, லேட்டாயிடுச்சு!!!
>> திடீரென்று டம்-என்று ஒரு சத்தம்.
"வாரயிறுதி ஆச்சுன்னா மதியம் நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடவேண்டியது.. சாப்பிட்டப்புறம் யானையே நுழைந்தாலும் தெரியாதவாறு வாயை திறந்து போட்டு தூங்கவேண்டியது.. இதிலே கனவு வேறு... கடவுளே... இப்பவாவது கண்ணைத் தொறங்க... உங்க மடியிலே இருந்த மடிக்கணிணி கீழே விழுந்துடுச்சு பாருங்க... போச்சு.. போச்சு.. இனிமே வேலை செய்யுமான்னு தெரியலே.. ஆண்டவா... "
<<
அட அது மடிக்கணினி கீழ உழுந்த சத்தம்தானா ? நா வேற என்னமோல்ல நெனச்சேன் !!!!
பி.கு : அப்படியே exit 62 பக்கம் வரச்சொல்லுங்க ! எரிபொருள் புண்ணியத்துல அடிவயிறு எரிஞ்சிட்டு இருக்கற எங்கூரு மக்கள் கொஞ்சம் எஞ்சாய் பண்ணட்டும் !
அன்புடன்
முத்து
வாங்க முத்து -> தப்பா எதுவும் நினைக்கிலையே???
கண்டிப்பா அனுப்பிடலாம். அங்கன ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க...
அடடா... பக்கத்துலேதானா?... தொலைபேசி எண் மயிலில் அனுப்புங்க... பேசலாம்...
:))))))))))
//
சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார்.
//
spelling mistake Gaptian தான் சரி..
நன்றி சிவா..
அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே ஜெகதீசன்.. பதிவுலே வேறே எதுவுமே இல்லையா அல்லது நீங்களும் பதிவையே படிக்கலியா?... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Post a Comment