மாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை
ஒரு பிரபல நடிகர் திடீரென்று எல்லாவற்றையும் துறந்து ஆன்மீகவாதியாகிவிட்டார் என்பதுதான் எல்லா ஊடகங்களிலேயும் இன்றைய பரபரப்புச் செய்தி. அவரை பேட்டி காண அனைத்து பத்திரிக்கைகளிலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் நிருபர்கள் அவரது இல்லத்தில் கூடியிருந்தனர்.
திடீரென்று அறைக்குள் நுழைந்தார் நடிகர். கூடவே அவரது உதவியாளர்.
எல்லோருக்கும் வணக்கம்.
உங்களைப்பற்றி இன்று வெளிவந்திருக்கும் செய்தி உண்மைதானா?
உண்மைதான். சொல்லப்போனால் உண்மை, பொய் எல்லாமே மாயாதான்.
இனிமே உங்க குடும்பம், குழந்தைகள்?
முதலிலேயெ சொன்னாமாதிரி, எல்லாம் மாயாதான்.
இவ்வளவு நாட்களாய் இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மீகவாதியாய் இருந்தீர்கள். இப்போது திடீரென்று எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்களே, என்ன காரணம்?
இவ்வளவு நாள் எனக்கு தெரியவில்லை. நேற்று திடீரென்று ஞானம் தோன்றியது. இந்த மனைவி, மக்கள், அரசியல், ரசிகர்கள் எதுவும் தேவையில்லை. ஏனென்றால் எல்லாமே மாயாதான். அதனால், எல்லாவற்றையும் துறந்துவிட்டேன்.
அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?
ரிஷிகேசத்தில் நான் கட்டியிருக்கும் ஆசிரமத்தில் இருந்துகொண்டு, இந்த உலகத்திற்கு, எல்லாமே மாயாதான் அப்படியென்று காட்டப்போகிறேன்.
பேட்டி முடிந்தது. நான் போகவேண்டும். அனைவருக்கும் நன்றி.
( நடிகர் திரும்பி உதவியாளரிடம், "மாயா, போகலாமா..." என்று எழுந்து போனார்).
டிஸ்கி: இந்த வார குமுதத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரைக்கும் இந்த கதைக்கும் கொஞ்சம் கூட தொடர்பேயில்லை என்று தயவு செய்து நம்பவும்.
12 comments:
என்ன உள்குத்து இது? இருங்க குமுதம் படிச்சுட்டு வரேன்.
அடச்சே குமுதம் படிக்க முடியலயே, ட்ரை பண்ரேன்.
உங்களுக்கு குமுதம் கமிஷன் எதும் இல்லையே? இப்டி எல்லாம் சொல்லி விளம்பரம் செய்யுறீங்க? :-)
வாங்க பிரேம்ஜி -> அதான் 'தொடர்பே இல்லை' அப்படின்னு சொல்லிட்டேன்லே? அப்புறம் என்ன?...:-)
வாங்க கிஷோர் -> ஓ. உரல் கொடுத்தா கமிஷன் கூட கிடைக்குமா?.. முயற்சி பண்றேன்...:-)))
150 பேருக்கு மேலே படிச்சிருக்காங்க.. ஆனா ரெண்டே ரெண்டு பின்னூட்டங்கள்தான். இதுவும் மாயாதான் போல....:-(((((((((((((((
கதை மிக அருமை. தங்களின் நடை ஒ ஹென்றியின் கதை நடை போல் உள்ளது. தொடரட்டும் உங்கள் அரை பக்க கதைகள். வே. நடனசபாபதி
//150 பேருக்கு மேலே படிச்சிருக்காங்க.. ஆனா ரெண்டே ரெண்டு பின்னூட்டங்கள்தான். இதுவும் மாயாதான் போல....:-((((((((((((((( //
நம்ம தலைவர் இருக்க தமிழ்மணத்துல தலைவருக்கே பின்னூட்டம் இல்லைன்னா, யாருக்கும் பின்னூட்டம் கிடையாது :-)
வாங்க அனானி -> ( நீங்க சிரிப்பான் எதுவும் போடலேங்கறதாலே ) கருத்துக்கு நன்றி...
வாங்க கிஷோர் -> இதெல்லாம் ரொம்பவே டூடூடூ மச்....:-))))
குமுதம் படித்தும் உள்குத்து புரியவில்லை
சரி வேறே வழியேயில்லை. இந்த கதைக்கு (!!) ஒரு கோனார் நோட்ஸ் நானே போட்டுடறேன்.
---
1. நடிகருக்கு எல்லாமே மாயாதான் - மாயா அப்படின்னு அவர் சொல்றது 'மாயை'யை இல்லை.
2. 'மாயா'ன்ற அவரோட உதவியாளர்தான் இனிமே எல்லாம் அவருக்கு.
3. ஆஸ்ரமத்துலேயும் அவர் இந்த 'மாயா'வோடதான் (உதவியாளரோடுதான்) இருப்பேன் அப்படிங்கறார்.
4. இன்னொரு 'பிரேமானந்தா' in making.
5. நிஜமாகவே குமுதம் கட்டுரைக்கும் இதுக்கும் தொடர்பேயில்லை. ஆனா, இதோட கரு அங்கேயிருந்துதான்.
கோனார் நோட்ஸ் இல்லாமலே புரிந்தது. குமுதம் இன்னும் படிக்கலை!!
நல்லா இருக்கு.
:))
//நடிகர் திரும்பி உதவியாளரிடம், "மாயா, போகலாமா..." //
ROTFL :-)
வாங்க சிவா -> ரெண்டு/மூணு பேர் புரியலேன்னாங்க... சரின்னு கோனார் போட்டுட்டேன்... நன்றி...
வாங்க ஸ்யாம் -> நன்றி...
Post a Comment