Thursday, May 15, 2008

நான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...!!!

சென்னையில் ஒரு தூரத்து உறவினரின் பெண் நடந்து முடிந்த +2 தேர்வில் 1163 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நேற்று அவர் தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

"எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து +2 வரைக்கும் இவர் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டினாலே, அது 1163-ஐ விட கம்மியாகத்தான் இருக்கும்" - இது சந்தடிசாக்கில் தங்கமணி என்னைப் பற்றி அவரிடம் கூறியது.


பிறகு நான் அந்தப் பெண்ணிடம் வாழ்த்துக்கள் கூறிவிட்டு 'ஏதோ, நான் கணக்கு சொல்லிக்கொடுத்து வளர்ந்த பொண்ணு, இவ்ளோ மதிப்பெண்கள் எடுத்திருப்பது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு' என்றேன்.


திடீர்னு என்ன ஆச்சுன்னே தெரியலே, அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்துவிட்டது.


"என்னது, நீங்க எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்தீங்களா? நாம ரெண்டு பேரும் பார்த்தே நான்கு வருடமாயிடுச்சு. நீங்க எப்போ எனக்கு சொல்லிக்கொடுத்தீங்க?..." அப்படின்னுட்டாங்க.

நான், "என்னம்மா, மறந்துட்டியா!! நீ ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் நான் உங்க வீட்டுக்கு வந்திருந்தேன். நீ கணக்கு புத்தகம் காணோம்னு தேடிண்டிருந்தே. அங்கே கீழே கிடந்த புத்தகத்தை நான் கண்டெடுத்து, இங்கே பாரும்மா, கணக்கு புத்தகம் இங்கேயிருக்கு அப்படின்னு சொல்லிக் கொடுத்தேன். ஞாபகம் வருதா..." அப்படியென்றேன்.

அதற்குப்பிறகு அந்தப் பெண் கோபத்தில் கூறியவையெல்லாம் என் காதிலும் விழவில்லை, இந்த பதிவுக்கும் தேவையில்லை!!!

15 comments:

பிரேம்ஜி May 15, 2008 at 12:48 PM  

//ஆறாம் வகுப்பிலிருந்து +2 வரைக்கும் இவர் எடுத்த மதிப்பெண்களைக் கூட்டினாலே, அது 1163-ஐ விட கம்மியாகத்தான் இருக்கும்//

ஹய்யோ...ஹைய்யோ...
:-)))

Anonymous,  May 15, 2008 at 1:59 PM  

007 Rithish padam soooper!!!

சின்னப் பையன் May 15, 2008 at 3:37 PM  

வாங்க பிரேம்ஜி -> அது சரி... நல்ல சிரிங்க...:-))

வாங்க அனானி -> பாத்தவுடனே அந்த படம் 'பச்சக்'னு மனசிலே ஒட்டிக்கிச்சி.....:-)))

துளசி கோபால் May 15, 2008 at 4:35 PM  

வாத்தியார் ச்சின்னப்பையன், வால்க.:-)

சின்னப் பையன் May 15, 2008 at 5:45 PM  

வாங்க துளசி மேடம் -> நன்றி...

Sen22 May 15, 2008 at 11:19 PM  

//அதற்குப்பிறகு அந்தப் பெண் கோபத்தில் கூறியவையெல்லாம் என் காதிலும் விழவில்லை, இந்த பதிவுக்கும் தேவையில்லை!!!//

காதுல ரத்தம் வந்ததா.. இல்லையா?????...


Senthil,
Bangalore

Sen22 May 15, 2008 at 11:19 PM  

//அதற்குப்பிறகு அந்தப் பெண் கோபத்தில் கூறியவையெல்லாம் என் காதிலும் விழவில்லை, இந்த பதிவுக்கும் தேவையில்லை!!!//

காதுல ரத்தம் வந்ததா.. இல்லையா?????...


Senthil,
Bangalore

Anonymous,  May 16, 2008 at 3:59 AM  

cchinna paiyya, You should have labelled this post in "Thittadhinga" also.

:D :D :D

சின்னப் பையன் May 16, 2008 at 9:01 AM  

வாங்க செந்தில் -> same blood.....:-(((

வாங்க சுதா -> அதான் அவங்களே திட்டிட்டாங்களே.....:-((((

லதானந்த் May 16, 2008 at 12:01 PM  

நீங்க நல்லாக் கணக்குப் பண்ணுவீங்அன்னு நெனைக்கிரேன்.
www.lathananthpakkam.com பாஎஉங்கண்ணா!

Unknown May 19, 2008 at 2:04 AM  

இதேல்லாம் ஒரு joke. உன்ன கல்லால அடிக்கனும்

சின்னப் பையன் May 19, 2008 at 6:26 AM  

வாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன் ->

என்ன ஒரு மொக்கை ஜோக்குக்கு இப்படி டென்சனாயிட்டீங்க...கூல்..கூல்...

சரி இனிமே மொக்கை போடறதுன்னா மேலேயே ஒரு டிஸ்கி கொடுத்துடறேன். நீங்க படிச்சிட்டு அப்படியே 'எஸ்' ஆயிடலாம். ஓகேவா?

Unknown May 20, 2008 at 3:56 AM  

//மொக்கை போடறதுன்னா மேலேயே ஒரு டிஸ்கி கொடுத்துடறேன்//


அது....

பரிசல்காரன் May 22, 2008 at 3:57 AM  

நீங்க கணக்கு சொல்லி குடுத்த லட்ஷணத்தை படிச்ச சிரிப்பு சிரிப்பா வருதுங்க! எல்லாம் தலை எழுத்து!
நல்லாத்தான் கதை விடுறீங்க! நிறைய எழுதி எங்க எல்லாரையும் உய், உய் -ன்னு உய்விங்க!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP