Tuesday, May 13, 2008
May 14, 2001 - திங்கட்கிழமை
இன்றிலிருந்து சரியாக ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சமாச்சாரம் இது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நாள். மதியத்துக்குள் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் நாள்.
தேர்தலில் வெல்லப்போவது - தங்கள் வேட்டியே கழண்டு விழுந்தாலும் அம்மா வந்துதான் ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்லும் அமைச்சர்களை உடைய அம்மா கட்சியா அல்லது நாளொரு கலை நிகழ்ச்சியிலும் பொழுதொரு தொலைக்காட்சி விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கும் அமைச்சர்களை உடைய ஐயா கட்சியா என்று நிர்ணயிக்கும் நாள்.
இந்த இடத்திலே 'cut' செய்றோம்.
சென்னை நங்கநல்லூரில் ஒரு திருமண மண்டபம். காலை 7.30 மணிக்குள்ளேயே முகூர்த்தம் முடிந்துவிட்டதால் சாப்பிடும் இடம் மட்டும் பரபரப்பாக இருக்கிறது. அனைவரும் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
அன்று காய்ந்த நாள் (Dry day) என்று தெரியாமல் ஊரிலிருந்து 'கையிருப்பு' இல்லாமல் வந்துவிட்ட நண்பர்களும், சிலபல பெரிசுகளும் சிறிய வானொலிப்பெட்டி வைத்துக்கொண்டு ஆங்காங்கே தேர்தல் நிலவரங்களைக் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கின்றனர்.
எதிர்ப்பார்த்தபடி அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிட்டன. ஒரு தடவை நீங்க, ஒரு தடவை நாங்க அப்படின்னு 'அவங்க' ரெண்டு பேருமே ஒப்பந்தம் போட்டு வைத்துக்கொண்டதைப் போல் இந்த தடவை 'அம்மா' வெற்றி பெற்றுவிட்டார்.
அனைவரும் மாப்பிள்ளையை கலாய்க்கின்றனர். "மாப்ளே, தமிழகத்துலே மட்டுமல்ல, உன் வாழ்க்கையிலும் என்ன நடக்கப்போகுது, யார் ஆட்சி செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு"!!!.
அவங்க சொன்னாமாதிரியே அந்த மாப்பிள்ளையின் வாழ்விலும் அன்றைய தேதியிலிருந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே விட்டது. வீட்டில் அம்மா (அவர் மனைவி) ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அவர் அவ்வப்போது ஏதாவது 'புரட்சி' செய்தாலும், அந்த அம்மாவைப் போலவே இந்த அம்மாவும் இரும்புக்கரம் கொண்டு அந்த புரட்சிகளை அடக்கிவிடுவார்.
தமிழகத்திலாவது ஐந்து வருடத்திற்குப் பிறகு, அந்த 'ஒப்பந்தத்தின்படி' ஆட்சி மாற்றம் நடந்து விட்டாலும், நம் நண்பரின் வாழ்வில் மட்டும் ஏழு வருடங்களானாலும் இன்றைய தேதி வரை 'அம்மா' ஆட்சியென்பது மாறவேயில்லை.
சரி. ஏழு ஆண்டுகளாகிவிட்டது. பொறுத்தது போதும். பொங்கி எழுந்துடலாம் அப்படின்னு அந்த மாப்பிள்ளை (இன்னுமா!!!) நேற்று அந்த அம்மாகிட்டே (மனைவிதாங்க) பேசப்போறார்.
ம்.ம்கூம்.. (கனைக்கிறார்)..
ம். வந்திருக்கிறது தெரியுது... என்ன விஷயம்?
அதாவது... நமக்கு கல்யாணமாகி இன்னியோட ஏழு ஆண்டுகளாகி விட்டது.
அதான் தெரியுமே? அதுக்கென்ன இப்போ?
இவ்ளோ நாளா வீட்லே நீதான் ஆட்சி செஞ்சிண்டுருக்கே. இனிமேலாவது என் கையில் ஆட்சி ஒப்படைக்ககூடாதா?
இதோ பாருங்க. உங்களுக்கு என் இதயத்திலே கண்டிப்பா இடமுண்டு. ஆனா ஆட்சியையோ, ஆட்சியில் பங்கையோ கேட்காதீங்க. ஆமா. சொல்லிட்டேன்.
அதான் உன்னோட கடைசி முடிவா?
(சட்டென்று பின்ணணி இசை மாறுகிறது. மனைவி சென்டிமென்ட் (தமிழில்?) மூடுக்கு தாவுகிறார்.)
இங்கே பாருங்க. ஏழு ஆண்டுகள் மட்டுமல்ல. இன்னும் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் நாந்தான் உங்களுக்கு மனைவி. அந்த எல்லா ஜென்மங்களிலும் என்னோட ஆட்சிதான். நான் எது செஞ்சாலும் நம்மோட நல்லதுக்குதான் செய்வேன்னு உங்களுக்குத் தெரியாதா, என்ன?
சரி. வாங்க. உங்களுக்குப் மிகவும் பிடித்த 'அல்வா' செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க.
( நம் நண்பரும் வழக்கம்போல் செண்டிமென்டுக்கு பணிந்து விடுகிறார்).
இப்படியாக, இப்போதும் இங்கு அம்மா ஆட்சிதான் நடக்கிறது (அப்பாடா, தலைப்பு வந்துடுச்சு!!!)
பிகு: இந்த மாப்பிள்ளை யாருன்னு உங்களுக்கே இன்னேரம் தெரிஞ்சிருக்கும். ஒரு தடவை லேபிளையும் பாத்திருங்க.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நாம துண்டு போட்டுட்டோம்ல...
தலைவா இடத்த பாத்துக்கங்க, படிச்சிட்டு வரேன்
நாம துண்டு போட்டுட்டோம்ல...
தலைவா இடத்த பாத்துக்கங்க, படிச்சிட்டு வரேன்
இது சொந்த கதை இல்ல தல சோகக்கத.
நாட்டாம... லேபிள மாத்து
நல்லா இருங்கப்பா!!
திருமண நாள் வாழ்த்துகள்
வாங்க கிஷோர் -> கருத்திற்கு நன்றி... லேபிளை மாத்திடலாங்க.. ஆனா என்னோட கோரிக்கை ஆட்சியை மாத்தணும்னுதானே.....:-)
வாங்க கொத்ஸ் -> நன்றி...
வாங்க வெட்டி -> வாழ்த்தியதற்கு நன்றி...
என்னங்க இது?
நான் தேர்தல்ல போட்டியிடவே பயமா இருக்கே?
உங்களுக்கே இந்த நிலைமைனா? நமக்கெல்லாம் டெபாசிட் காலி ஆகிடும் போலிருக்கே
திருமண நாள் வாழ்த்துகள்
அட எனக்கும் இதே நாளில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனா ஒரு வருஷம் தான் ஆகுது.
எனவே கும்பிடு போட்டுக்கறேன் சீனியர். :))
மறுபடி வந்ததற்கு நன்றி கிஷோர். இதுக்கெல்லாம் பயந்தா நடக்குமா? வீட்டுக்குள்ளே கோவை சரளா வடிவேலுவை லுங்கியை சுத்தி சுத்தி அடிக்கறா மாதிரி நடந்தாலும், வெளியே நடக்கும்போது மீசையை முறுக்கிண்டு நடப்போம்ல?... சும்மா தைரியமா களத்திலே குதிங்க...:-)
வாங்க அம்பி -> ஓகே ஜூனியர். காலையிலேயே உங்களை வாழ்த்திட்டேனே... உங்க பதிவை பாத்ததுக்கபுறம்தான் சரி நாமும் இதே மாதிரி ஒரு பதிவு போடுவோம்னு போட்டேன்...:-)
வாழ்த்துக்கள்!! :)
வாழ்த்துக்கள் :-)))))
திருமண நாள் வாழ்த்துக்கள் சின்ன பையன்!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கப்பி பய, சத்யபிரியன் மற்றும் பிரேம்ஜி...
Happy Wedding day :)
Sudha -> Thanks.
///சரி. வாங்க. உங்களுக்குப் மிகவும் பிடித்த 'அல்வா' செஞ்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க.///
அடடே! எல்லா இடத்திலேயும் இதே ஆயுதம் தானா
வால்பையன்
Post a Comment