Wednesday, June 18, 2008

திரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்!!!

இதோ பாருங்க, இந்த மென்பொருள்லே நீங்க பண்ண தவறு - உங்க கவனக்குறைவினால்தான். 12ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தால் அல்ல...
---

எல்லா எழுத்துருவையும் ஒரே அளவிலே வைங்க. ஏன், ஒரு பக்கத்துலே அந்த எழுத்துரு ரொம்ப பெரிசா இருக்கு, இன்னொண்ணு ரொம்ப சின்னதா இருக்கு. எதையுமே படிக்கமுடியலே.
---


சூப்பர் சாப்ட்வேர் எதுன்னு கேட்டதுக்கு 'ஆண்டி' (Aunty) வைரஸ்ன்னு சொல்றார் சார் இவரு.

---

நீங்க செய்திருக்கிற விளையாட்டு மென்பொருளிலே 'பில் கேட்ஸை' ஒரு கேரக்டரா வைச்சிருக்கலாம். அதனாலே, பில் கேட்ஸுக்கு மென்பொருள் டெமோ காட்டுவேன்னு சொல்றதுல்லாம் ரொம்பவே டூ மச்.

---

அப்போ, உங்க மென்பொருளில் உதவி இல்லேன்றீங்களா?

நான் உதவி இல்லேன்னா சொன்னேன், இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்.



---

எப்பேர்ப்பட்ட புதிய வைரஸுக்கும், ஆண்டி வைரஸ் உடனே வந்துடும். அதைத் தேடி நீங்க ஊர் ஊரா அலையவே வேணாம். எந்த கடையில் கேட்டாலும் அந்த ஆண்டி வைரஸ் கிடைக்கும். கவலைப்படாதீங்க.

---

உங்க வேலை கொடுத்த ஆணியை புடுங்கறதுதான். ஆணியை வடிவமைத்தல், சோதித்தல், தரக்கட்டுப்பாடு, பின் ஆய்வு - இதெல்லாம் செய்யறதுக்கு வெவ்வேற ஆட்கள் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க.

---

இன்னிக்குள்ளே இந்த மென்பொருளை முடிச்சிக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கீங்க. எதுக்கு நடு நடுவிலே பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க.


---

நீங்க பண்றதுலேயே உருப்படியான வேலை என்னன்னா, எந்த மென்பொருள் செய்தாலும் அதை தமிழ், இந்தி, தெலுங்கு இப்படி எல்லாரும் புரிஞ்சிண்டு உபயோகப்படுத்தறாமாதிரி செய்றதுதான்.

---


ஒழுங்கா ஒரு இடத்திலே உக்கார்ந்து வேலை பாருங்க. எதுக்கு சம்மந்தமில்லாமே, சென்னையிலிருந்து வாஷிங்டன், ஜப்பான் அங்கேல்லாம் போகணும்றீங்க.

---

இந்த மென்பொருள்லே நீங்க இன்னிக்கு ஒரு சிறு தவறு செஞ்சா, கொஞ்ச நாளைக்குப் பிறகு, அதுவே பெரிய பிரச்சினையா மாறி, உங்க வேலையே போற அளவுக்கு வந்துடும். அதனாலே, கவனம் எடுத்து செய்ங்க. சரியா?..

---
நீங்க செய்திருக்கிறது ஒரு சின்ன 'கால்குலேட்டர்' மென்பொருள். அதை வெளியிடறதுக்கு 'பில் கேட்ஸை' கூப்பிடணும்னு சொல்றதெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

---

25 comments:

வெட்டிப்பயல் June 18, 2008 at 12:36 PM  

//நீங்க செய்திருக்கிறது ஒரு சின்ன 'கால்குலேட்டர்' மென்பொருள். அதை வெளியிடறதுக்கு 'பில் கேட்ஸை' கூப்பிடணும்னு சொல்றதெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.//

சூப்பர் :-)

மங்களூர் சிவா June 18, 2008 at 12:43 PM  

அண்ணாஆஆஆஆஆஆஆஆஆ!!!!

ஜூப்பர் ஜூப்பர்

:))

rapp June 18, 2008 at 1:29 PM  

நான் எழுதின புது பதிவு மோகனோட ப்ளோக்ல வந்திருக்கு பாருங்க.
http://mohankandasami.blogspot.com/

வால்பையன் June 18, 2008 at 1:45 PM  

// 12ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தால் அல்ல...//

இருக்கலாம் அப்பயே கணினி மொழிக்கு யாராவது அடிக்கல் நாட்டியிருக்கலாம்

வால்பையன் June 18, 2008 at 1:45 PM  

//எல்லா எழுத்துருவையும் ஒரே அளவிலே வைங்க. ஏன், ஒரு பக்கத்துலே அந்த எழுத்துரு ரொம்ப பெரிசா இருக்கு, இன்னொண்ணு ரொம்ப சின்னதா இருக்கு. எதையுமே படிக்கமுடியலே.//

அது பின்நவீனத்துவ எழுத்துக்கள் ஐயா

வால்பையன் June 18, 2008 at 1:46 PM  

//சூப்பர் சாப்ட்வேர் எதுன்னு கேட்டதுக்கு 'ஆண்டி' (Aunty) வைரஸ்ன்னு சொல்றார் சார் இவரு.//

நான் இதை வழிமொழிகிறேன்.

வால்பையன் June 18, 2008 at 1:46 PM  

//நான் உதவி இல்லேன்னா சொன்னேன், இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்.//

உண்மையை தானே சொல்றோம். எந்த மென்பொருள்ல ஒழுங்க உதவி இருக்கு.
கடைசியில இது பயன் அளித்ததான்னு ஒரு மொக்க கேள்வி வேற

வால்பையன் June 18, 2008 at 1:46 PM  

// எந்த கடையில் கேட்டாலும் அந்த ஆண்டி வைரஸ் கிடைக்கும்.//

இப்பெல்லாம் யாரும் ஆண்ட்டியை வேலைக்கு வச்சிக்கிறது இல்லிங்க
எல்லாம் பிகருங்க்களா இருக்கு

வால்பையன் June 18, 2008 at 1:46 PM  

//உங்க வேலை கொடுத்த ஆணியை புடுங்கறதுதான். ஆணியை வடிவமைத்தல், சோதித்தல், தரக்கட்டுப்பாடு, பின் ஆய்வு - இதெல்லாம் செய்யறதுக்கு வெவ்வேற ஆட்கள் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க.//

முடியாது, என்னை தவிர இங்கே யாரும் இதை செய்ய லாயக்கில்லை
(தன்னம்பிக்கை, தலைகனம் யுவர் சாய்ஸ்)

வால்பையன் June 18, 2008 at 1:46 PM  

//இன்னிக்குள்ளே இந்த மென்பொருளை முடிச்சிக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கீங்க. எதுக்கு நடு நடுவிலே பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க.//

காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு தரும் நல்ல பாட்டுன்னு
சொல்லி வளத்துட்டாங்க, இனிமே மாத்த முடியாது

வால்பையன் June 18, 2008 at 1:47 PM  

//நீங்க பண்றதுலேயே உருப்படியான வேலை என்னன்னா, எந்த மென்பொருள் செய்தாலும் அதை தமிழ், இந்தி, தெலுங்கு இப்படி எல்லாரும் புரிஞ்சிண்டு உபயோகப்படுத்தறாமாதிரி செய்றதுதான்.//

அய்யயோ, புரியுதா,
எங்கயோ தப்பு நடந்துருக்கு

வால்பையன் June 18, 2008 at 1:47 PM  

//ஒழுங்கா ஒரு இடத்திலே உக்கார்ந்து வேலை பாருங்க. எதுக்கு சம்மந்தமில்லாமே, சென்னையிலிருந்து வாஷிங்டன், ஜப்பான் அங்கேல்லாம் போகணும்றீங்க.//


நான் என்ன வேலை செய்யுறேன்னு அவங்களுக்கு தெரிய வேணாமா

வால்பையன் June 18, 2008 at 1:47 PM  

//இந்த மென்பொருள்லே நீங்க இன்னிக்கு ஒரு சிறு தவறு செஞ்சா, கொஞ்ச நாளைக்குப் பிறகு, அதுவே பெரிய பிரச்சினையா மாறி, உங்க வேலையே போற அளவுக்கு வந்துடும். அதனாலே, கவனம் எடுத்து செய்ங்க. சரியா?..//

தவறே செய்யாட்டியும், டவுசர் அவுக்க நிறைய பேர் இருக்காங்க

வால்பையன் June 18, 2008 at 1:47 PM  

//நீங்க செய்திருக்கிறது ஒரு சின்ன 'கால்குலேட்டர்' மென்பொருள். அதை வெளியிடறதுக்கு 'பில் கேட்ஸை' கூப்பிடணும்னு சொல்றதெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.//

தப்பே கிடையாது
என்ன செஞ்சிருக்கொம்க்கிறது முக்கியமில்ல,
யார கூப்பிடுருக்கொம்கிறது தான் முக்கியம்
எல்லாம் ஒரு விளம்பரம் தான்

Athisha June 18, 2008 at 2:43 PM  

பாவம்யா கமலு ...

விட்ருங்கய்யா

rapp June 18, 2008 at 3:05 PM  

சூப்பருங்க. இதே பாணீல இன்னும் சில கமல்களை பார்க்க விரும்புகிறேன்.

சின்னப் பையன் June 18, 2008 at 5:44 PM  

வாங்க பிரேம்ஜி, வெட்டிப்பயல், சிவா, பிரபு, அதிஷஅ, ராப் -> எல்லோருக்கும் நன்றி..

வாங்க வால்பையன் -> அவ்வ்வ்வ். ஏன் இந்த கொலை வெறி...

வெண்பூ June 19, 2008 at 8:52 AM  

Hi

in my blog I don't get the comments link at all. what setting should I set?

சின்னப் பையன் June 19, 2008 at 9:13 AM  

Hi Venpu,

In your blogger, see Settings -> Comments page. There check for the following:
Comments = Show

Comments Default for Posts = New Posts have comments

Enable comment moderation = Yes

and save the settings.

For further queries, post me your mail id.

வெண்பூ June 19, 2008 at 9:39 AM  

Thanks dude.. I got it. I had it enabled but after publishing the post.
So, I had to enable it for individual posts.
Now it works.

VIKNESHWARAN ADAKKALAM June 19, 2008 at 11:31 AM  

//நான் உதவி இல்லேன்னா சொன்னேன், இருந்திருக்கக் கூடாதான்னுதானே சொன்னேன்.//

இருந்திருந்தா நல்லா இருக்குமேனு தானே சொன்னேன் இப்படி போட்டிருந்தா சூப்பரா இருந்திருக்கும் அண்ணாச்சி...

VIKNESHWARAN ADAKKALAM June 19, 2008 at 11:33 AM  

மன்னா என் பணியை வால் பையன் செய்துவிட்டபடியால் வருத்தத்துடன் இச்சபையை விட்டு வெளியேறுகிறேன்...

சின்னப் பையன் June 19, 2008 at 3:21 PM  

வாங்க விக்னேஸ்வரன் -> வசனத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி...

ஆஆ... இந்த மாதிரி ரெண்டு பேர்தான் இருக்கீங்களா? இன்னும் யாராவது கெளம்பியிருக்காங்களா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP