சூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்!!!
Client கிட்டே போய் ஏன் 'ஓடற மென்பொருள் ஓடாமெ இருக்காது... ஓடாத மென்பொருள் ஓடாது' அப்படின்னீங்க... அவன் என்னைப் புடிச்சி கத்தறான்... மென்பொருள் ஓடுமா அல்லது ஓடாதா. ஒழுங்கா சொல்லுன்றான்...
---
என்னங்க, நாமென்ன தமிழ்மணத்திலே பதிவு போடறதுக்கா பொண்ணு எடுத்தோம், தமிழ் கலாச்சாரமே தெரியலேன்றதுக்கு; Java தெரியுதா பாருங்க அந்த பொண்ணுக்கு, அது போதும்.
---
இரண்டும் (modules) ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. ஒன்றும் (மென்பொருள்) அசையாது நின்று போனதுன்னு சொன்னா போதாது சார். உக்காந்து சரி பண்ணுங்க. அதுக்குதான் உங்களை வேலைக்கு வெச்சிருக்கு.
---
நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.
---
எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.
---
இதோ பாருங்க. நமக்குன்னு சில coding standards இருக்கு. நீங்க 'என் coding, தனி coding' அப்படின்னு தனியா எதுவும் செய்யமுடியாது.
---
Client சொல்றான்... Coding பண்றான்.. அப்படின்னு நீங்க பாட்டுக்கு பண்ணமுடியாது. எதுவாயிருந்தாலும் உங்க குழுத்தலைவர்கிட்டே சொல்லிட்டு பண்ணுங்க.
---
அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.
---
ஏங்க, இவருக்கு மென்பொருள் செய்யத்தெரியலேன்னா பரவாயில்லை.. கோபப்படாதேன்னு சொல்லுங்க.
ஏன், என்ன ஆச்சு?
தினமும் இவர் கோபத்தோட 'விசைப்பலகை'யைப் பார்க்கிறார். அது 'பக்'குன்னு பத்திக்குது. என்னாலே, தினமும் ஒரு புது விசைப்பலகை கொடுக்கமுடியாது.
36 comments:
//எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க.//
:-)))))
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//
இது சூப்பர்....
:-)))))))
இதை எதிர்பாத்துதான் ஓப்பன் பண்ணேன்.. எப்படி மிஸ் பண்ணீங்க??
தோ பாருங்க.. நூறு லைன் Code எழுதணும்னா நூறு லைன் எழுதித்தான் ஆகணும்.. கம்ப்யூட்டருக்கு உங்க ஸ்டைல் எல்லாம் தெரியாது..
வாங்க சுரேஷ் -> உண்மைதான். இந்த வசனத்தை உல்டா பண்ணத்தான் நினைத்தேன்... ஏதோ நினைப்பிலே விட்டுப்போயிடுச்சு... அதனாலென்ன, நீங்க சொல்லிட்டீங்களே... நன்றி...
ஏன் இந்தக் கொடுமை.... :)))
செம செம டக்கரா கீதுங்க. பயங்கரமா ரசிச்சேன். என்னைக்கும் விஜய் படத்துக்கு நீங்க வசனம் எழுதனுங்கர கஷ்டகாலம் உங்களுக்கு வரக்கூடாதுன்னு மனசார வாழ்த்தறேன். அந்த அளவுக்கு இன்னைக்கு கலக்கிட்டீங்க.
வாங்க கிரி, பிரேம்ஜி -> நன்றி..
வாங்க விக்னேஸ்வரன் -> ஆமாங்க. எனக்கே முடியல. ( நாங்க ஏற்கனவே வாரயிறுதி மூடுக்கு வந்தாச்சு... எதையும் யோசிக்கவே முடியல... அதனால்தான் இந்த மாதிரி பதிவு!!!)...
// பினாத்தல் சுரேஷ் said...
இதை எதிர்பாத்துதான் ஓப்பன் பண்ணேன்.. எப்படி மிஸ் பண்ணீங்க??
தோ பாருங்க.. நூறு லைன் Code எழுதணும்னா நூறு லைன் எழுதித்தான் ஆகணும்.. கம்ப்யூட்டருக்கு உங்க ஸ்டைல் எல்லாம் தெரியாது..//
நானும் இதை தான் எதிர்பார்த்தேன்... இன்னும் தளபதி அண்ணாமலை டயலாக் எல்லாம் சேர்த்திருக்கலாம்.
கோடிங்னா என்னனு தெரியுமா? சூர்யானா என்னனு தெரியுமா?
இந்த நாள் உங்க காலெண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ.. என் கோட்ல பக் கண்டுபிடிச்சி நான் டெவலப் பண்ண அப்ளிகேஷனுக்கு எப்படி ஆப்பு வெச்சியோ அதே மாதிரி நீ டெஸ்ட் பண்ண அப்ளிகேஷனை மெயிண்டனஸ் டீம்கிட்ட சொல்லி உனக்கு ஆப்பு வைக்கல. என் பேர் டெவலப்பர் இல்லை...
இந்த மாதிரி ...
இவர்கள் மென்பொருள் நிபுணர் ஆனால் - வரிசையில் உங்க எல்லா இடுகைகளும் நல்லா இருக்கு.
//Client கிட்டே போய் ஏன் 'ஓடற மென்பொருள் ஓடாமெ இருக்காது... ஓடாத மென்பொருள் ஓடாது' அப்படின்னீங்க... அவன் என்னைப் புடிச்சி கத்தறான்... மென்பொருள் ஓடுமா அல்லது ஓடாதா. ஒழுங்கா சொல்லுன்றான்...//
:-)))))
இது கலக்கல் சின்னப்பையா
நான் ஒரு code எழுதினா 100 coding எழுதின மாதிரி
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//
:))))
சூப்பரூ :)
வாங்க ராப் -> நன்றி...
வாங்க வெட்டிப்பயல் -> அவ்வ்வ்.. இன்னும் கொஞ்சம் யோசிச்சி போட்டிருக்கலாம்தான். நேரமாயிடுச்சேன்னு கடகடன்னு அடிச்சி போட்டுட்டேன்.
வாங்க ரவிசங்கர் -> எல்லாத்தையும் படிச்சீங்களா... நன்றிங்க...
வாங்க இவன் -> நன்றி...
வாங்க ஆயில்யன் -> நன்றி...
-)))))
உங்க ஒவ்வொரு பன்ச்சுக்கும் ஒவ்வொரு சிரிப்பான்
Enjoyed everything but this one is too good
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.//
Super ..:-)
//நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.//
இது சூப்பர்
இருந்தாலும் எதுக்கும் உங்க வீட்டு அட்ரஸ் குடுங்க.
ஆட்டோ அந்த ஏரியாவுக்கு வருமானு கேக்கணும்
//எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.
சான்ஸ்'யே இல்லை... :-)
:-) கலக்கல்.
//அதிகமா Requirements கொடுக்கற Clientம், அதைவிட அதிகமா bugs கொடுக்கற மென்பொருள் நிபுணரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்றீங்க. ரொம்ப சரி.
//
//இவர் கோபத்தோட 'விசைப்பலகை'யைப் பார்க்கிறார். அது 'பக்'குன்னு பத்திக்குது. என்னாலே, தினமும் ஒரு புது விசைப்பலகை கொடுக்கமுடியாது.
//
:-)
வெட்டிபயலோட கமென்ட்ஸும் சூப்பர்.. அதையும் பதிவுல சேர்த்துடுங்க.
வாங்க தாரணி பிரியா, வெண்பூ, தியாகராஜன், சரவணகுமரன் -> நன்றி...
வாங்க கிஷோர் -> அவ்வ்வ். என் முகவரிதான் உங்களுக்கே தெரியுமே... No.6.....
வாங்க மனதின் ஓசை -> நன்றிங்க. பதிவை மாத்தி வெளியிட்டதில்லை. எப்படி செய்யணும்னு பாக்கறேன்..
wow wow wow
wonderful!!
கலக்குறீங்க!
Keep it up.
சூப்பர் ச்சின்னப்பையன் சார்
வாங்க சிவா மற்றும் கைலாஷி -> நன்றி...
தப்பா எடுத்தக்கலனா ஒரு சின்ன அட்வைஸ்...
ஒரு ஐடியா வந்தா உடனே பதிவாக்கிடாதிங்க. அதை ஒரு நாள் சிந்திங்க. அடுத்து இந்த மாதிரி பதிவுனா, rajinifans.com, wikipedia, youtube எல்லாத்தையும் ஒரு தடவை பார்த்துடுங்க. பெஸ்டா வரும்.
இப்பவும் சூப்பரா தான் இருக்கு. அப்படி பண்ணா இன்னும் கொஞ்சம் நல்லா வரும்.
பதிவை மாத்த தேவையில்லை.
தப்பா எடுத்துக்கலேங்க வெட்டி... அட்வைஸ்க்கு நன்றி...
கண்டிப்பா அப்படித்தான் செய்றேன். என்னுடைய பதிவு எதுவும் - உடனடியா போடவேண்டிய செய்தி மாதிரி இல்லேங்கறதாலே - நல்லா யோசிச்சித்தான் போடுவேன். (இன்னும் ட்ராஃட்ஸ்லே ரெண்டு மூணு ஐடியாக்கள் ஒரு வாரமாவே இருக்கு).
இந்த பதிவுதான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.....அவ்வ்வ்வ்வ்வ்.....
(உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ.. என்னுடைய முதல் பதிவுக்கு.. முதல் பின்னூட்டம் போட்ட நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான் !!!!)
code eppa ezudhuven eppadi ezudhuvennu solla maaten.
eludha vendiya nerathukku correctaa eludhiduven.
naan oru bug fix panna 100 bug fix panna madhiri.
:)
ஒருவர் விஜயகாந்த் பற்றி(Dhamilnadu) அதே மாதிரி நல்ல காமெடி பதிவு இது. ஆனால் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன். You have the potential for it, I can see that.
நன்றி அனானி மற்றும் கயல்விழி....மீண்டும் வருக...
அட பதிவு தான் சூப்பர்ன்னு நினைச்சேன். பின்னூட்டமும் நல்லா இருக்குதே:)
ச்சின்னப் பையா...
தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...
இது கமல் சீசன்...:-))
ச்சின்னப் பையா...
தலைவர வம்புக்கு இழுக்காதப்பா...
இது கமல் சீசன்...:-))
வாங்க நிஜமா நல்லவன் -> நன்றி...
வாங்க வழிப்போக்கன் -> அப்ப சரி... இவரைப் பத்தி ஒரு பதிவு போட்டால் போச்சு... :-)))
ஹா.ஹா.ஹா. சரியான கலாய்ப்பு!!
சூப்பரப்பு.... :-)
ROTFL :))
\\நல்ல codingலே ஆண்டவன் நிறைய bugsகளை கொடுப்பான். ஆனா productionலே பிரச்சினை வராதுன்னீங்களே.. இப்போ பாருங்க, சுத்தமா படுத்துடுச்சு. users எல்லாம் கத்தறானுங்க. போய் சரி பண்ணுங்க.---
எழுதுனது 10 வரி Code. அதிலே 20 தப்பு. இதுக்கு நடுவிலே 40 தடவ 'இது எப்படி இருக்கு, இது எப்படி இருக்கு'ன்னு சொல்லிட்டீங்க... ம். ஒண்ணும் சரியில்லை.\\
ஹா ஹா ஹா :))
\\இந்த நாள் உங்க காலெண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ.. என் கோட்ல பக் கண்டுபிடிச்சி நான் டெவலப் பண்ண அப்ளிகேஷனுக்கு எப்படி ஆப்பு வெச்சியோ அதே மாதிரி நீ டெஸ்ட் பண்ண அப்ளிகேஷனை மெயிண்டனஸ் டீம்கிட்ட சொல்லி உனக்கு ஆப்பு வைக்கல. என் பேர் டெவலப்பர் இல்லை...\\
வெட்டி அண்ணா கலக்கல்ஸ் :))
எப்படிங்க இப்படி எல்லாம் கலக்கலா எழுதரீங்க??
Post a Comment