சிவாஜி வாயிலே ஜிலேபி - அரை பக்க கதை
ஏங்க, இந்த பெரிய பள்ளியிலேதான் நம்ம பையனை சேக்கணுமா, எனக்கு என்னமோ பயமா இருக்கு...
ச்சீ, என்ன பேச்சு பேசறே? இதிலே பயப்படறதுக்கு என்ன இருக்கு? நம்ம சிவாஜியை இந்த பள்ளியிலே எல்.கே.ஜியில் சேத்துட்டோம்னா, +2 வரைக்கும் கவலையேயில்லை. ஒரே பள்ளியிலே படிச்சிடலாம். அதுவுமில்லாமே, எல்.கே.ஜியில் இவங்க படிப்பெல்லாம் சொல்லித்தர மாட்டாங்க. வெறும் பாட்டும், விளையாட்டும்தான். நம்ம பையன் சூப்பரா செட்டாயிடுவான்.
(பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பறையை கண்டுபிடித்துப் போகிறார்கள்).
வணக்கம். என் பேர் Jill. நாந்தான் இந்த வகுப்பு ஆசிரியை. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க பையன் சிவாஜி ஓரிரு நாட்களில் மற்ற சிறுவர்களுடன் பழகிவிடுவான். இங்கே விளையாடுவதற்கு எல்லா பொருட்களும் இருக்கு.
"சிவாஜி, இங்கே வா. இந்த பிஸ்கட் எடுத்துக்கோ. ஏ,பி,சி,டி எல்லாம் எவ்ளோ அழகா வரிசையா இருக்கு பாரு!!!"
சிவாஜி வாயிலே ஜில் ஏ, பி - என்று வரிசையாக பிஸ்கட்களை போடுகிறார்.
13 comments:
முடியல..... :-))))
WOW.. nice thinking :-))))
அமெரிக்காவுல இப்படி தான் பள்ளிகூடம் நடக்குதா?
வால்பையன்
/
சிவாஜி வாயிலே ஜில் ஏ, பி
/
ம் நடக்கட்டும்!!
:))
எப்டீங்க இப்டியெல்லாம்...:)
வாங்க பிரேம்ஜி -> என்ன முடியல.. கதைதான் முடிஞ்சிடுச்சே!!!
வாங்க யாத்திரீகன் -> நன்றி...
வாங்க வால்பையன் -> எல்.கே.ஜி (இங்கே ப்ரீ கே.ஜி) அப்படித்தான்!!! பசங்க ஜாலியா போயிட்டு விளையாடிட்டு வர்றாங்க!!!
நிஜமாவே நீங்க பயங்கரமா அசத்துறீங்க. நல்ல வித்தியாசமான கதை. இப்டி கதை எழுத விஜய் பட டைரக்டர்கள்கிட்டதானே பயிற்சி எடுத்துக்கிட்டீங்க? ஹி ஹி ஹி
வாங்க சிவா -> நன்றி...
வாங்க புபட்டியன் -> எல்லாம் தன்னாலே வருதுங்க.....:-)))
வாங்க ராப் -> அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அதுக்கு நீங்க என்னை நல்லவன்னே சொல்லியிருக்கலாம்....
ஆஹா... :-))
ஐயோ!!கொல்றாங்களே!!!!
வாங்க விக்னேஸ்வரன் மற்றும் நானானி -> நன்றி மீண்டும் வருக...
ந்நல்லா ய்யிருக்கு ச்சின்னப் பையன்!
நம்ம சமாளிப்பையும் வந்து பாருங்க!
வாங்க ராமலக்ஷ்மி -> நன்றி... கண்டிப்பா வர்றேன்.
Post a Comment