சுத்தி சுத்தி வந்தேங்க!! தசாவதாரம் பாக்கலேங்க!!!
போன வாரம் பாப்பாவிற்கு உடம்பு சரியில்லாததால், போகமுடியாத 'தசாவதாரத்துக்கு' இந்த வாரம் போகலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம்.
NY Fresh Meadows-ல் உள்ள பாம்பே திரையரங்கம். 62மைல்கள் தூரம் உள்ளதால் 2 மணி நேரம் முன்பே - நண்பர் குடும்பத்துடன் சென்றோம். எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. கடைசி 2 மைல்கள் இருக்கும்போது, ஒரு விபத்தினால், மாற்றுப்பாதையில் போகச்சொல்லி 'மாமா' சொன்னதால், வண்டியை திருப்பினோம்.
நல்லவேளை, ஒரு நண்பரிடமிருந்து வாங்கிக்கொண்டு போயிருந்த GPSன் உதவி இருந்ததால் - மாற்றுப்பாதையில் போய், கடுமையான போக்குவரத்தில் மாட்டி, வண்டி நிறுத்துவற்காக சரியான இடம் தேடி - திரையரங்கை அடையும்போது நேரம் 12.30. படம் துவங்கும் நேரம் 12. கடைசி 2 மைல்களைக் கடப்பதற்கு மட்டும் 1 மணி நேரமாயிருக்கிறது.
கொஞ்சம் திரும்பி தங்கமணியை பார்த்தேன். நவரசங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து (அந்த ரசங்கள் உங்கள் கற்பனைக்கே!!!) அவர் முகத்தில் மாத்தி மாத்தி காட்டிக்கொண்டிருந்தார். அந்த ரசங்களைப் பார்த்தபிறகு எனக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. அதனால் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
தசாவதாரம் ஒரு நாளைக்கு ஒரு காட்சிதான் என்பதால் வேறுவழியில்லாமல் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, அங்கிருந்து புறப்பட்டு பக்கத்தில் Jackson Heights என்னுமிடத்தில் இருந்த இந்திய கடைக்குப் போய், அங்கேயே சாப்பிட்டு, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.
காலையில் போகும்போது ஜாலியாக திரைப்படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே போன நான், திரும்பி வரும்போது, தங்கமணியின் மேற்கூறிய ரசங்களின் வெளிப்பாடுகளைக் கேட்டுக்கொண்டே வந்தேன்.
வீட்டிற்கு வந்த பிறகு - ஏம்மா, நாளைக்கு இன்னும் கொஞ்சம் முன்னாடியே கிளம்பிடுவோம். என்ன, அப்போதான் படம் ஆரம்பத்திலிருந்து பாக்கமுடியும். ஓகேவா?... என்று சொல்லி முடிக்கக்கூட இல்லை, அதற்குள் என் முதுகில் ஏதோ விழுந்ததால், நான் கீழே விழுந்தேன்.
கீழே விழுந்தால் என்ன, மீசையில் மண் ஒட்டவில்லை... அது போதும் எனக்கு....
24 comments:
ஹா ஹா ஹா... ஐயோ ஐயோ... சரியா போச்சு போங்க... இப்படி எல்லாம் யாரவது அடி வாங்குறத கேட்டாதான் நிம்மதியா இருக்கு...
ஆமா என்னாதால அடிச்சாங்க... அதை சொன்னால் கொஞ்சம் சந்தோஷம் படுவேன்ல...
ஹா ஹா ஹா ஹா ஹா... என்னால முடியல... ஜீப்பு ஜீப்பா வருது போங்க...
நாளைக்கு டிக்கட் கிடைக்கலனா உங்க நிலமை என்னத்துக்காவரது??
நாராயணா.. நாராயணா....
நான் வருகிறேன்....
மீண்டும் சந்திப்போம்....
ரெம்பக் கஷ்டந்தே போங்க.
பாத்தவியளுக்கு ஒரு மாதிரிக் கஷ்டமுன்னா, பாக்க முடியாமப் போன உங்களுக்கு வேற மாதிரிக் கஷ்டம்.
வாங்க விக்னேஸ்வரன் -> அவ்வ்வ்வ். நல்லா இருங்க... ஒரு திருமணத்தைப் பண்ணிக்குங்க.. அப்போதான் என் நிலைமை உங்களுக்குப் புரியும்..... மறுபடியும் ஒரு அவ்வ்வ்வ்வ்....
சின்ன பையன்.குடும்ப வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.குடும்பஸ்தர் ன்னு சொன்னாலே தியாகிகள் தானே.
:-)))
அடுத்த முயற்சி எப்போ?
//பாத்தவியளுக்கு ஒரு மாதிரிக் கஷ்டமுன்னா, பாக்க முடியாமப் போன உங்களுக்கு வேற மாதிரிக் கஷ்டம்.//
பாத்தவியளுக்கு என்ன கஸ்டம்? நல்லாத்தான இருந்தது?.
(அப்புறம்..ச்சின்னு.. நம்ப கதையோட முடிவை மாத்தீட்டேன். அப்பொ சரியா-ன்னு வந்து பார்த்து சொல்லுங்க)
உங்களுக்கு மீசையே இல்லைங்கறேன் நானு. என்னாங்கறீங்க, சரியா, தப்பா?
நான் நெரிசல் இல்லாம நெடும்ரோட்டில் 140 கி.மீட்டர் வேகத்தில் 5.2 எஞ்சின்(கிராண்ட் சிறுக்கி)யத் துரத்தியும் ரெண்டு நாளாப் படம் பார்க்க முடியவில்லை.தங்கமணி கோவிச்சுகிட்டு வராம ஒரு வாரம் கழித்துதான் பார்க்க முடிந்தது.
வாங்க வேலன் -> ஆமாங்க...:-((
வாங்க பிரேம்ஜி -> சரியா சொன்னீங்க...
அடுத்த முயற்சி - தெரியலீங்க. புயல் ஓய்ந்தப்புறம்தான்....
வாங்க ராப் -> ஹாஹா...அது தப்பு... மேட்டர் என்னன்னா, எங்க வீட்டு ஹால்லே மண் இல்லே...
வாங்க நடராஜன் -> ஓ அப்படியா... அப்படியும் விடாமே பாத்துட்டீங்க... சரிதான்... நன்றி...
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க
தங்கமணிகள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்...
ச்சின்னப்பையன்,
பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி பதிவு போட்டுள்ளேன் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்.
வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்
ஆனாலும் தங்கமணிய, விட்டுக் கொடுக்காம, மறுபடியும் நாளைக்குகு கூட்டிப் போறேன்னு சொன்னீங்க பாருங்க............
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....தங்கமணிக்கு , உங்க நல்ல மனசு லேட்டாப் புரிய வாழ்த்துகள்! படம் பாக்கவும் தான் :)))
//நவரசங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து
ஜூப்பர்....
//ஒரு திருமணத்தைப் பண்ணிக்குங்க.. அப்போதான் என் நிலைமை உங்களுக்குப் புரியும்//
அவ்வ்வ்வ்வ்...உங்களுக்கு ஏன் இந்த கேல வெறி....
ராப் -> கண்டிப்பா வர்றேங்க...
சரியாச் சொன்னீங்க தமிழன்... நன்றி..
வாங்க வெண்பூ -> பாத்துட்டேன்... கமெண்டிட்டேன்...
வாங்க நியூபீ -> ஆமாங்க... வேறே என்ன பண்றது சொல்லுங்க!!!
நன்றி சரவணகுமரன்...
/
VIKNESHWARAN said...
ஹா ஹா ஹா... ஐயோ ஐயோ... சரியா போச்சு போங்க... இப்படி எல்லாம் யாரவது அடி வாங்குறத கேட்டாதான் நிம்மதியா இருக்கு...
/
ரிப்பீட்டு
பாத்தவியளுக்கு ஒரு மாதிரிக் கஷ்டமுன்னா, பாக்க முடியாமப் போன உங்களுக்கு வேற மாதிரிக் கஷ்டம்.
சின்ன பையன்.குடும்ப வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா.குடும்பஸ்தர் ன்னு சொன்னாலே தியாகிகள் தானே.
:-)))
அடுத்த முயற்சி எப்போ?
/
கொஞ்சம் திரும்பி தங்கமணியை பார்த்தேன். நவரசங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து (அந்த ரசங்கள் உங்கள் கற்பனைக்கே!!!) அவர் முகத்தில் மாத்தி மாத்தி காட்டிக்கொண்டிருந்தார்.
/
ROTFL
வாங்க சிவா -> நன்றி..
இத்தனை கஷ்டப்பட்டு தசாவதாரம் பார்கனுமா? (விமர்சனம் எழுதவா?)
அருமையான எழுத்து நடை
//முகத்தில் நவரசம்//
Post a Comment