திடீர் பதிவு போடுவது எப்படி!!!
தேவையான பொருட்கள்: அவ்வளவுதான்.... நான்கே நிமிடத்தில் உங்கள் பதிவு ரெடி... அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உங்கள் வலைப்பூவைத் திறந்து பின்னூட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவும். ஒரு பின்னூட்டம் கூட வரவில்லையென்றாலும் பரவாயில்லை - யாரும் திட்டவில்லையே என்று சந்தோஷப்படவும். அடுத்த திடீர் பதிவில் சற்று (விவ)காரமான கருத்தை வெளியிடவும். பதிவு 'சூடாவதுடன்' பல பின்னூட்டங்களும் கிடைக்கும்.
தினமலர் டாட் காம் - 1 பக்கம்
குமுதம் ரிப்போர்ட்டர் - 1 பக்கம்
சொந்த கருத்து - தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு புதிய இடுகையைத் துவக்கவும்.
தினமலர் அல்லது குமுதத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் போடவும்.
இரண்டு நிமிடம் அதை படிக்கவும்.
நன்றாக புரிந்தபிறகு உங்கள் கருத்தை அதில் போடவும்.
மேலும் இரண்டு நிமிடம் செலவழித்து, சொற்குற்றம் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவும்.
பதிவை வெளியிடவும்.
வெளியிட்ட பிறகு, பதிவு சரியாக வந்திருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
கூடவே முதல் பின்னூட்டத்தை போட்டுவிடவும்.
17 comments:
அடடே என்னங்க இப்படி குட்டை போட்டு உடச்சுட்டீங்க? இனிமே நாங்கெல்லாம் என்னா பண்றது.
ச்சின்னப்பையா...
இதுதான¢ அந்த ஐடியாவா?
பஸ்சுல பக்கத்து சீட்டுகாரர் கிட்ட நடந்த உரையாடலை பதிவாக போடுவது தவறா?
சினிமா டிக்கெட் எடுக்க க்யூல நிக்கிம் போது உலக சினிமா பத்தி அங்க ஒரு கூட்டம் அலசும் அத பத்தி பதிவு போட்டா தவறா
வால்பையன்
பஸ்சுல பக்கத்து சீட்டுகாரர் கிட்ட நடந்த உரையாடலை பதிவாக போடுவது தவறா?
சினிமா டிக்கெட் எடுக்க க்யூல நிக்கிம் போது உலக சினிமா பத்தி அங்க ஒரு கூட்டம் அலசும் அத பத்தி பதிவு போட்டா தவறா
வால்பையன்
//அடுத்த ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை உங்கள் வலைப்பூவைத் திறந்து பின்னூட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவும்.
ஒரு பின்னூட்டம் கூட வரவில்லையென்றாலும் பரவாயில்லை - யாரும் திட்டவில்லையே என்று சந்தோஷப்படவும்
//
:-)))))))))
//நன்றாக புரிந்தபிறகு உங்கள் கருத்தை அதில் போடவும்.//
இதை நான் வன்மையாக கன்னாபின்னாவென்று கொலைவெறியோடு கண்டிக்கின்றேன்.
வாங்க ராப் -> :-))))
வாங்க ஜிம்ஷா -> அவ்வ்வ்வ்வ். இது ஐடியா மாதிரி தெரியலியா????
வாங்க வால்பையன் -> '30 விதமான பொரியல்', '30 விதமான இட்லி' மாதிரி இது ஒரு விதம்தாங்க. நீங்க சொன்னமாதிரி எல்லாம் சேர்த்து போட்டா '30 விதமான திடீர் பதிவுகள்' வந்துடும்....:-))
வாங்க பிரேம்ஜி -> நன்றி..
வாங்க சுரேஷ் -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு... சொந்த கருத்து - தேவைக்கேற்பன்னுதானே போட்டிருக்கேன். (கண்டிக்கிறேன் அப்படின்றத கண்ணடிக்கிறேன்னு படிச்சிட்டேன் ஒரு நிமிஷம்).
//சொந்த கருத்து - தேவைக்கேற்ப//
கலக்கல் ....
அடுத்து உடனடி பின்னூட்டம் போடுவது எப்படி?
அருமையான பதிவு! என் கைல இந்த ஐடியா சிக்கியிருந்ததுன்னா சும்மா நீட்டி முழக்கி எல்லாரையும் மொக்கையடி அடிச்சிருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேனே!
வாங்க களப்பிரர் -> நன்றி..
வாங்க முரளிகண்ணன் -> போட்ருவோம்..
வாங்க பரிசல்காரன் -> நன்றி... அதனாலென்ன... கொஞ்சம் ரீ-மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்ருங்க...
காதல் கண்றாவி கவுஜ எழுதினா தப்பா!?!?
எனக்கு கவுஜ கவுஜயா வருது நான் என்ன பண்ண?????????????
இந்த துக்ளக் , முரசொலி, நமது எம்.ஜி.ஆர் லாம் விட்டுடீங்களே
வாங்க சிவா -> வேணாம். விட்ருங்க... அப்புறம் எனக்கு அளுகை அளுகையா வந்துடும்...
வாங்க அதிஷா -> இதெல்லாம் ஓசியிலே (இணையத்துலே) கிடைக்குதுங்களா?... நாம எப்பவுமே ஓசிதாங்கோ......:-))
இலவச துக்ளக்கு திரு.டோண்டு
இலவச முரசொலி திரு.லக்கி
இலவச நமது MGRக்கும் லக்கிதான்
ஆஆ.. எனக்கு பிரச்சினைகள் போர்வை மாதிரி... ஆனா இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் நான் வரலீங்கோ... என்னை விட்டுடுங்க.....
வலைப்பதிவர்களின் இரகசியங்களை அம்பலப்படுத்தியற்கு உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். ha ha ha ha
Post a Comment