Sunday, June 15, 2008

தசாவதாரம் - என்னால் முடிந்த விமர்சனம்!!!

முன்:
மூணு நாளா தமிழ்மணத்தில் ஒரே தசாவதாரம் மயம்தான். எல்லோரும் பதிவா போட்டுத் தாக்கிக்கிட்டுருக்காங்க. நாமும் ஜோதியிலே கலந்துக்கலேன்னா நல்லாயிருக்காது. அதனாலே இந்த பதிவை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். வந்தது வந்திட்டீங்க, முழுசா படிச்சிட்டு, லேபிளையும் ஒரு தடவை பாத்துடுங்க. இனி விமர்சனம்.

கதை:
மூன்று நாளா அதைத்தானே தமிழ்மணத்தில் படிச்சிட்டுருக்கீங்க... அவங்க சொல்லாதது நான் என்ன சொல்லிடப்போறேன்.

கதை மூலமாக சொல்ல வந்த கருத்து:
அது சஸ்பென்ஸ். நான் என் வாயாலே உங்களுக்கு எப்படி சொல்வேன்.

படத்தில் பாட்டுக்கள்:
படத்தைப் பாத்தவங்களுக்கு நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. படம் பாக்காதவங்க யூட்யூப் பாருங்க. அங்கே போட்டிருப்பாங்க.

க்ராபிக்ஸ்:
அதெல்லாம் பதிவில் எழுதினால் புரியாது. நேரில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

க்ளைமாக்ஸ்:
வழக்கம்போல் அது படத்தில் கடைசியில்தான் வருது.

அசின், மல்லிகா:
இவங்களைப் பத்தி தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நல்லாவே தெரியும். இதிலே நான் தனியா சொல்ல என்ன இருக்குது சொல்லுங்க.

டிஸ்கி:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..இந்த வாரம் படம் பாக்கமுடியலை. அதுக்காக, என்னவெல்லாம் சொல்லி பதிவைத் தேத்தவேண்டியருக்கு பாருங்க...

19 comments:

VIKNESHWARAN June 15, 2008 at 11:51 AM  

//அதனாலே இந்த பதிவை எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். //

ஆமாம், இன்னும் ஒரு வாரத்தில தாசவாதரம் பதிவு போடதவங்க வதிவை தமிழ் மணத்தில் இருந்து நீங்கிடுவாங்களாம்.

VIKNESHWARAN June 15, 2008 at 11:52 AM  

//அவங்க சொல்லாதது நான் என்ன சொல்லிடப்போறேன்.//

ஐய்யய்யோ என்ன இப்படி சொல்லிடிங்க.. ஏகபட்ட மேட்டர் இருக்கு.. கடைசியா ரவிக்குமார் வேசத்துல வர்ரது கமல் தானாம்.

VIKNESHWARAN June 15, 2008 at 11:54 AM  

//அது சஸ்பென்ஸ்.//

என்னத்த சஸ்பேன்ஸ். அதான் தமிழ்மணம் பூர சிரிப்பா சிரிக்குதே...

VIKNESHWARAN June 15, 2008 at 11:55 AM  

//அதெல்லாம் பதிவில் எழுதினால் புரியாது.//

ஆமா ஆமா. புரிச்ஞிகிர வயசு இல்ல..

VIKNESHWARAN June 15, 2008 at 11:56 AM  

//வழக்கம்போல் அது படத்தில் கடைசியில்தான் வருது.//

பார்த்திங்களா தப்பு பன்னிட்டிங்க... அத ஆரம்பத்துலயே காமிக்கிறாங்க...

VIKNESHWARAN June 15, 2008 at 11:57 AM  

//அசின், மல்லிகா//

அதை பத்தி பேச கூடாது...

VIKNESHWARAN June 15, 2008 at 11:59 AM  

//இந்த வாரம் படம் பாக்கமுடியலை. //

இதுக்குலாம் வருத்த படலாமா... இன்னும் ரெண்டி நாளைல தமிழ் டியூபில் வந்துடும்

VIKNESHWARAN June 15, 2008 at 11:59 AM  

நிஜமா நல்லவன் பானியில் ஒரு பின்னூட்ட முயற்சி... எப்படி நான் பாஸா???

ஜே கே | J K June 15, 2008 at 12:04 PM  

ஒய் பிளாட்.

சேம் பிளட்...

ச்சின்னப் பையன் June 15, 2008 at 12:05 PM  

வாங்க பிரேம்ஜி -> நன்றி..

வாங்க விக்னேஸ்வரன் ->
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பின்னூட்ட சூறாவளி பட்டத்துக்கு நிறைய பேர் போட்டி போடறீங்க போலிருக்கே....

இப்படி போடறதுக்காவது பதிவை வரிவரியா படிச்சீங்களே, அந்த பொறுமைக்கு நன்றி....:-)))))

VIKNESHWARAN June 15, 2008 at 12:12 PM  

//ஜே கே | J K said...
ஒய் பிளாட்.

சேம் பிளட்...//

இவரு என்ன சொல்லுறாரு...

ச்சின்னப் பையன் June 15, 2008 at 12:16 PM  

விக்னேஸ்வரன் -> JK சொல்றது என்னன்னா - அவரும் இந்த வாரம் படம் பாக்கலே. அடுத்த வாரம்தான் பாக்கப்போறார்.

(அது ஒரு படத்துலே வடிவேலு சொல்ற வசனம்...)

rapp June 15, 2008 at 5:36 PM  

என்னங்க இது, இப்டி பண்ணிட்டீங்க. நம்ம ரசிகர்மன்றத்தாளுங்கல்லாம் நம்ம தல, ஜெ.கே.ரித்தீஷ் படத்தை மட்டும்தான விமர்சனம் பண்ணுவோம். வேற வழியில்லைங்க, உங்கள மன்றத்துலேருந்து விலக்கி வைக்க சொல்லி தல சொல்லிட்டாப்ல!அதால இனி அவர் படமோ இல்லை மன்றத்துக்கொடியோ இனி நீங்க பயன்படுத்த முடியாது. தண்டனை பெருசுதான், ஆனா என்னப் பண்றது? நாம இருக்கிற லெவலுக்கும், நம்ம தல இருக்கிற இருப்புக்கும் சின்னச் சின்ன நடிகனுங்க படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதினா நம்ம மன்றத்து ரேஞ்ச் என்னாகுறது? இதெல்லாம் ஒரே 'சின்னப்புள்ளத்'தனமால்ல இருக்கு.

பரிசல்காரன் June 15, 2008 at 11:15 PM  

வர வர உங்கள் நகைச்சுவைக்கு அடிமையாகிக் கொண்டே வருகிறேன்!
ஆனால் என் விமர்சனதில்கூட .... வேண்டாம் வந்து பாருங்க..

விக்கி.. ஏல்லாரும் இப்படி கிளம்பீட்டீங்க போல?

ச்சின்னப் பையன் June 16, 2008 at 9:13 AM  

வாங்க ராப் -> அவ்வ்வ்வ்வ்வ். பதிவை படிச்சீங்களா, இல்லையா... நாந்தான் படத்தைப் பாக்கவேயில்லைன்னு சொல்றேனே... நம்ம தல படத்தைத் தவிர நான் கமல் படம் பார்ப்பேன் என்று எப்படி நீங்கள் நினைக்கலாம்.. அப்படியெல்லாம் நடக்காது. அதனால், தயவு செய்து தண்டனையை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாங்க பரிசல்காரன் -> நன்றிங்க.

வால்பையன் June 16, 2008 at 9:27 AM  

என்ன கொடுமை சார் இது!

வால்பையன்

rapp June 16, 2008 at 2:38 PM  

அப்டி இல்லங்க, நீங்க இந்த மாதிரி ரஜினி,கமல்னு சின்ன சின்ன உப்புமாக் கதாநாயகர்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதினா(அதுவும் கற்பனை விமர்சனம்னா, அவங்கள நீங்க உங்க மனக்கண்ணுல வேற பாக்குறீங்க, ஆனா நம்ம தல ஜே.கே.ரித்தீஷ் படத்த மட்டும் இனாமா dvd குடுத்தாக் கூடப் பார்க்க மாட்டேங்கறீங்கலாமே? என்னாங்க விஷயம் தெரிஞ்சிபோச்சேன்னுபாக்கறீங்களா? ஹ,நாங்கெல்லாம் யாரு!) நம்மத் தலயோட கெத்து என்னாகறது? அதான் அவரு நெம்ப டென்ஷன் ஆகிட்டாரு. அப்றம் அவருக்கு நம்மத் தலயோட தொடர்ந்து போட்டிபோட்டுட்டிருக்கிற சாம் டேனியல் படத்தை போட்டதுக்கப்புறம் தான் சமாதானம் ஆனாரு. இனிமே நீங்க பழையபடி நம்ம மன்றத்தொட உறிப்பினராகி எல்லா உரிமையும் பெறுகிறீர்கள். வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் June 16, 2008 at 2:46 PM  

வாங்க வால்பையன் -> நீங்களே பாருங்க.. என்ன கொடுமை இது... நான் படத்தை பாக்கவேயில்லே...

மறுபடி வந்ததுக்கும், என் நிலைமை புரிஞ்சிண்டு மறுபடி என்னை மன்ற உறுப்பினரா ஆக்கினதுக்கும் - ரொம்ப நன்றிங்க ராப்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP