கேள்வி-பதில் - இரண்டாம் பகுதி!!!
முன் -1: போன கேள்வி-பதில் பதிவுக்கு கிடைத்த அமோக ஆதரவும், ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களும்(!!!) அதே மாதிரி இன்னொரு பதிவு போட என்னைத் தூண்டியது. அந்த பதிவைப்போலவே, இந்த பதிவுக்கும் கேள்வி - பதில் இரண்டும் நானே.
முன் -2: சரி..சரி... மறுபடி வேறே ஏதோ நாலு மேட்டர் இருக்கு.. அதை ஒரே பதிவுலே போடறதுக்கு வழிபண்றான்னு நிறைய பேர் கரெக்டா சொல்றது என் காதுக்கு கேட்குது. இனி பதிவு.
-----
கே: பாரதியார் சொன்னா மாதிரி 'அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' செய்திருக்கிறீர்களா?
ப: அச்சச்சோ. அப்படியெல்லாம் செய்ததில்லை. அதற்கு பதிலாக... இதை படியுங்கள்.சென்னையில் இரு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். சரியான மழை. அப்படியே நனைந்து கொண்டே ஒரு ஓரமாக போய் 'புளிச்'சென்று உமிழ்ந்தேன். அடுத்த நொடி என் முகமெல்லாம் என்னுடைய எச்சில். என்னடான்னு பார்த்தால், அன்றுதான் புதிதாக ஒரு 'முகமூடி' வாங்கிப் போட்டிருந்தேன். அதுவரை 'முகமூடி' போட்டு பழக்கமேயில்லாததால், அது போட்டிருந்த நினைவேயில்லாமல் துப்பிவிட்டேன். பிறகென்ன, வழிந்ததை அதே மழையில் கழுவிவிட்டு வீடு போய் சேர்ந்தேன்.
கே: 'சடசட'வென்று பல காவல்துறையினரோ அல்லது பாதுகாவலர்களோ சூழப்பட்டு பயந்திருக்கிறீர்களா?
ப: ஒரு சமயம் அப்படி நடந்திருக்கிறது. நான்கைந்து பாதுகாவலர்கள் சூழ்ந்துவிட்டனர். என்னையல்ல. எங்கள் பாப்பாவை.
இங்கே ஒரு பூங்காவில் ஏதோ ஒரு Ride-ல் நான் மட்டும் உட்காரப்போனேன். தங்கமணியும் பாப்பாவும் கீழேயிருந்து என்னை பார்த்துகொண்டு நின்றனர். என்னை புகைப்படம் எடுக்கவேண்டி தங்கமணி பாப்பாவை விட்டுவிட்டு சிறிது முன்னாடி வந்தார் பாருங்கள் - தபதபவென்று நான்கைந்து பாதுகாவலர்கள் பாப்பாவை சூழ்ந்துகொண்டுவிட்டனர்.
தங்கமணியும் என்னமோ ஏதோவென்று பயந்து பாப்பா பக்கத்திலே போனால், ஒருவர் 'இப்படி பாப்பாவை தனியாக விட்டுவிட்டு போகக்கூடாது' என்று எச்சரித்துவிட்டுப் போனார்.
கே: 'வீட்லே சொல்லிட்டு வந்துட்டியா?' என்று யாராவது உங்களை 'அன்பாக' சொல்லியிருக்கிறார்களா?
ப: ஆம். ஆனால் அப்படி கேட்டவர் என் வண்டியில் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்.
புதரகம் வர்றதுக்காக கார் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் பயிற்சியாளர். அன்று அவர் சொந்த வண்டியையே எடுத்து வந்திருந்தார். ஒரு இடத்தில், வலது பக்கம் திரும்ப வேண்டும். எதிர் வரும் போக்குவரத்திற்காக நிறுத்த வேண்டும். ஆனால், நான் நிறுத்தாமல், மூன்றாவது கியரில் இருந்தபோது அப்படியே சடாரென்று திரும்பிவிட்டேன்.
வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அந்த உரிமையாளர் "வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? யார்கூடவாவது மோதறதுக்கு என் வண்டிதான் கிடைச்சுதா? என்று ஆரம்பித்து - வடிவேலுவிடம் பார்த்திபன் "உன் மச்சான் உன்னை எப்படியெல்லாம் திட்டினான்...#$###$#" என்று சொல்வாரே, அந்தளவுக்கு திட்டித் தீர்த்தார்.
கே: ஒருவருக்கு புறையேறினால், வேறு யாரோ அவர்களை நினைப்பதால்தான் அப்படி ஆகிறது - என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
ப: அப்படி ஒரு நம்பிக்கை தங்கமணிக்கு இருக்கிறது. எனக்கு எப்போது புறையேறினாலும் - உங்கள் அம்மா இந்தியாவில் உங்களை நினைக்கிறார் போல என்று கூறுவார். எனக்கு அதில் நம்பிக்கையில்லை.
ஆனால், தங்கமணியின் நம்பிக்கையை நான் பாழாக்க விரும்பவில்லை. அதனால், வாரயிறுதியில் வீட்டில் இருக்கும்போது, மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!
22 comments:
//மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!//
சத்தம் போட்டு சிரித்தேன்...
சூப்பரோ சூப்பர் :-)
101வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
:)
//அந்தளவுக்கு திட்டித் தீர்த்தார்.//
அந்தகவுக்கு தானே... அந்த மாதிரி இல்லையே.. :)))))
உங்க மூஞ்சியில நீங்களே துப்பிகிட்டதுக்கு எதுக்கு தல பாரதியாரயெல்லாம் இழுக்குறீங்க? :)))
//நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!
//
உங்க நல்ல மனசைப் பாத்து நெஜமாவே பூரிச்சிப் போயிட்டேன்
//அதனால், வாரயிறுதியில் வீட்டில் இருக்கும்போது, மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!//
:-)))))))
அடப்பாவிகளா
//அப்படியே நனைந்து கொண்டே ஒரு ஓரமாக போய் 'புளிச்'சென்று உமிழ்ந்தேன். அடுத்த நொடி என் முகமெல்லாம் என்னுடைய எச்சில். என்னடான்னு பார்த்தால், அன்றுதான் புதிதாக ஒரு 'முகமூடி' வாங்கிப் போட்டிருந்தேன். அதுவரை 'முகமூடி' போட்டு பழக்கமேயில்லாததால், அது போட்டிருந்த நினைவேயில்லாமல் துப்பிவிட்டேன்//
இது சூப்பர்
இது 104 இல்லையா???
/
வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு, அந்த உரிமையாளர் "வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா? யார்கூடவாவது மோதறதுக்கு என் வண்டிதான் கிடைச்சுதா? என்று ஆரம்பித்து - வடிவேலுவிடம் பார்த்திபன் "உன் மச்சான் உன்னை எப்படியெல்லாம் திட்டினான்...#$###$#" என்று சொல்வாரே, அந்தளவுக்கு திட்டித் தீர்த்தார்.
/
:)))))))))))
//மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!//
உங்க நல்ல மனசைப் பாத்து நெஜமாவே பூரிச்சிப் போயிட்டேன்
வாங்க வெட்டிப்பயல் -> ரசித்ததற்கு ரொம்ப நன்றி...
வாங்க அதிஷா -> அவ்வ்வ்.. 101 இல்லீங்க... அதையும் தாண்டி... விக்னேஸ்வரன் சொல்லிட்டாரு பாருங்க...
வாங்க விக்னேஸ்வரன் -> அந்த படத்திலே பார்த்திபன் பேசும்போது நமக்கு சரியா கேக்காததாலே, அதேதானான்னு என்னாலே சொல்லமுடியல... அவ்வ்வ்..
வாங்க வெண்பூ -> ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்... மன்னிச்சிடுங்க... பூரிச்சதற்கு நன்றி..
வாங்க பிரேம்ஜி -> நன்றி...
வாங்க விக்னேஸ்வரன் -> எண்ணி எண்ணி சொன்னதற்கு மிக்க நன்றி...
//
அதனால், வாரயிறுதியில் வீட்டில் இருக்கும்போது, மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது!!!
//
உங்க அராஜகம் தாங்க முடியலியே ஐயா..............
சத்தம் போட்டு சிரித்ததில் பக்கத்தில் உள்ள டேமேஜர் எட்டி பார்க்கிறான்.
என் வேலைக்கு வேட்டு வைத்தால் மாமனாருக்கு அமெரிக்கா வருவதற்கு டிக்கட் ஏற்பாடு செய்து தரப்படும் என்று எச்சரிக்கிறேன்.
ஆஹா என்னமா யோசிச்சு வில்லத்தனம் பண்றீங்க. எனக்கொரு சின்ன உதவி பண்ணுங்களேன், கனெச்டிகட்டுக்கும் பாரீசுக்கும் எத்தன மணிநேர வித்தியாசம்னு சொல்லுங்களேன்.
வாங்க சத்யபிரியன் -> டென்சன் பண்ணாதீங்க... உங்களுக்கு 1000 பின்னூட்டம் வேணுமா, சொல்லுங்க போட்டுடுவோம்... இந்த டிக்கெட் புக் பண்ற வேலையெல்லாம் வேணாம்... அவ்வ்வ்...
வாங்க ராப் -> அவ்வ்வ்வ். ஏன், அப்புறம் விடியற்காலையிலே நான் தூங்கும்போது ( நீங்க முன்னாடியே எழுந்திருச்சிருப்பீங்க...) என்னை நினைக்கறதுக்கா... வேணாம்... விட்டுடுங்க...
:):):)
சும்மா கலக்குறீங்க!!!
அன்புடன் அருணா
புது பதிவு போட்டிருக்கேன், உங்களுக்கு நேரம் கிடைக்கறப்போ வந்து பாருங்க.
சின்னப்பையன் தானே. உங்களை திட்டினா பரவாயில்லை
சூப்பர் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
வாங்க அருணா, அருவை பாஸ்கர் -> நன்றி...
வாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன் -> அவ்வ்வ்வ்வ்....
வாங்க ராப் -> கண்டிப்பா.. அலுவலகம் போனதுமே தமிழ்மணம் தானே....:-))))
//மாலை சுமார் 3 மணியளவில் (இந்தியாவில் நள்ளிரவு) - நான் 'மாமனார், மாமனார்' என்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு கூறிக்கொண்டே இருப்பேன். ஏதோ என்னால் முடிந்தது//
ரொம்ப நல்ல மனசு!!! :)
கூடவே எங்களுக்கு வருங்கால டிப்ஸும் கிடைத்தது.
வாங்க கயல்விழி -> அவ்வ்வ்வ்...
//உங்கள் அம்மா இந்தியாவில் உங்களை நினைக்கிறார் போல என்று கூறுவார். எனக்கு அதில் நம்பிக்கையில்லை.//
ஹையா!கண்டுபுடுச்சுட்டேன்..நீங்க வெளிநாட்ல இருக்கீங்க...
Post a Comment