Tuesday, December 8, 2009

பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

பெண்களைப் பற்றிய செய்திகளில் நாம் பார்ப்பதுதான் இந்த வாக்கியம் - "சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயர்/வயது மாற்றப்பட்டுள்ளது). பேரு மட்டும்தான் மாத்தணுமா, அந்த செய்தியிலே இன்னும் எதையெல்லாம் மாத்தலாம்னு யோசிச்சப்போ உதிச்சதுதான்(!!) இந்த இடுகை. படிச்சிட்டு உதைக்க வராதீங்க.

*****

நேற்று காலை சுமார் 8 மணியிருக்கும் (நேரம் மாற்றப்பட்டுள்ளது).

திருவல்லிக்கேணியில் பெரிய தெரு (தெரு மாற்றப்பட்டுள்ளது).

தன் வீட்டில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"ஏண்டி, இது என்ன கெட்டி சட்னியா? இந்த இட்லியை மனுசன் சாப்பிடுவானா?" என்று மனைவியை பார்த்து கத்தினார். (சத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது).

"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"நீ இங்கே வாடி முதல்லே." (மரியாதை குறைக்கப்பட்டுள்ளது).

"நான் வர்றது இருக்கட்டும். முதல்லே இதுக்கு பதில் சொல்லுங்க." உள்ளேயிருந்து ஒரு ஸ்பூன் பறந்து வந்தது. (ஆயுதம் சைஸ்/எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

சுரேஷ் அதை தடுக்கும்முன் அந்த ஸ்பூன் அவர் தலையில் பட்டு, ச்சின்ன காயம் உண்டானது. (காய அளவு குறைக்கப்பட்டுள்ளது).

அந்த காயத்தைப் பார்த்த அவர் மனைவி, உள்ளேயே மெல்ல சிரிக்கும் ஓசை கேட்டது. (சிரிப்பொலி குறைக்கப்பட்டது).

சுரேஷ் வலிதாங்க முடியாமல் "ஆ" என்ற ஒரு எழுத்தையே நீளமாக சொன்னார். (டெசிபல் குறைக்கப்பட்டது).

"சாரிம்மா. இனிமே நான் இப்படி சொல்ல மாட்டேன். என்னை மன்னிச்சிடு" - சுரேஷ் தழுதழுத்தார். ( அழுகை குறைக்கப்பட்டது).

"சரி பரவாயில்லை விடுங்க. ஆனா, இப்போ என்னை திட்டினதுக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித் தந்தே ஆகணும்". (புடவை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).

"அதுக்கு நீ என்னை இன்னும் நல்லாவே அடிச்சிருக்கலாம்" - மனதில் பேசினார் சுரேஷ் (குரலோசை குறைக்கப்பட்து).

"அப்போ இந்தாங்க." உள்ளேயிருந்து ஒரு குச்சி வெளிப்பட்டு சுரேஷை தட்டியது. (ஆயுதம் / எஃபெக்ட் குறைக்கப்பட்டது).

"ஐயய்யோ.. என்னை விட்டுடு". சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார். (ஓட்டம் குறைக்கப்பட்டது).

*****

பின்குறிப்பு : இது என் டயரியில் எழுதவேண்டியது. (இடம் மாற்றப்பட்டுள்ளது).

40 comments:

Prabhu December 8, 2009 at 12:43 PM  

யப்பா என்ன க்ரியேட்டிவிட்டி.

Anonymous,  December 8, 2009 at 12:45 PM  

செம்ம மொக்கை.. (பின்னூட்டம் மாற்றப்பட்டுள்ளதுனு நினைக்காதீங்க)

Toto December 8, 2009 at 12:49 PM  

ஹா..ஹா.. [ சிரிப்பு ச‌த்த‌ம் குறைக்க‌ப்பட்டுள்ளது ]. ரொம்ப‌ ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌..

-Toto
www.pixmonk.com

எம்.எம்.அப்துல்லா December 8, 2009 at 1:12 PM  

இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது???

(யோசிக்கிறது குறைக்கப்பட்டுள்ளது)

:))

Chitra December 8, 2009 at 2:04 PM  

என்னா நக்கலு உங்களுக்கு? ரெண்டு வாட்டி படிச்சு சிரிச்சேன். (எண்ணிக்கை குறைக்க பட்டிருக்கிறது) super original sarakku.

ILA (a) இளா December 8, 2009 at 2:15 PM  

வெளுத்து கட்டிடீங்க (சர்ஃப் எக்ஸல் குறைக்கப்பட்டுள்ளது)

சின்னப் பையன் December 8, 2009 at 7:57 PM  

வாங்க அனானி, பப்பு, இன்னொரு அனானி, டோடோ -> அனைவருக்கும் நன்றி..

வாங்க அப்துல்லா அண்ணே, சித்ரா, இளா அண்ணே -> ஹாஹா... சூப்பர் கமெண்ட்ஸ்... நன்றி...

உங்கள் தோழி கிருத்திகா December 8, 2009 at 8:05 PM  

ஏங்க இப்புடி???(கொலைவெறி ஏற்றப்பட்டுள்ளது)
நாடு தாங்காதுங்க (பொய் கோபம் குறைக்கப்பட்டுள்ளது)

பூங்குன்றன்.வே December 8, 2009 at 9:24 PM  

என்ன ஒரு கற்பனை உங்களுக்கு.சரி..சரி..இதெல்லாம் வீட்ல நடக்கறதுதானே !!!

ஜெகதீசன் December 8, 2009 at 9:29 PM  

:))))
//
இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
//
சாப்பாடு ஏன் மாற்றப்படவில்லை...
:P

நசரேயன் December 8, 2009 at 9:32 PM  

சிரிப்பு இடம் மாறலை

சரவணகுமரன் December 8, 2009 at 9:36 PM  

லைட்டாக சிரித்தேன். (சிரிப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது)

S.Muruganandam December 8, 2009 at 9:58 PM  

வயிறு வலிக்க சிரித்தேன்( வலி குறைக்கப்பட்டுள்ளது)

Anonymous,  December 8, 2009 at 11:21 PM  

இது அப்படியே ரங்கமணிக்கு பார்வர்ட் செய்யப்பட்டது...( பயம் குறையாமல் இருக்க எழுதினது நானாக மாற்றப்பட்டது )
:)))

hiuhiuw December 9, 2009 at 12:48 AM  

கொஞ்சம் வெந்நீர் கொடுங்க !( வெறி ஏற்றப் பட்டுள்ளது )

Thamira December 9, 2009 at 1:01 AM  

Guru.. you rocking.. :-))

வால்பையன் December 9, 2009 at 1:53 AM  

அருமையான பதிவு(மொக்கை மாற்றப்பட்டுள்ளது)

கலையரசன் December 9, 2009 at 3:21 AM  

நல்லாயிருக்கு தல.. (பின்னூட்டம் இடப்பட்ட இடம் மாற்றம்செய்யப்பட்டுள்ளது!)

THANGA MANI December 9, 2009 at 4:13 AM  

நன்று.(உண்மையான கருத்துதான்.எதுவும் மாற்றப்படவில்லை)

creativemani December 9, 2009 at 4:59 AM  

அருமை.. (உண்மை அப்படியே தரப்பட்டுள்ளது..)

சின்னப் பையன் December 9, 2009 at 7:12 AM  

பதிலிட்ட அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி... அதே ஃபார்மெட்டில் எல்லா கமெண்ட்ஸும் படு சூப்பர்... நன்றி... :-)))))

Unknown December 9, 2009 at 12:04 PM  

யப்பா... எப்படித்தான் உங்களுக்கு இது எல்லாம் தோணுதோ!!! நல்லா சிரிச்சேன்!!

unmaivirumpi,  December 9, 2009 at 12:20 PM  

எப்படி இப்படி எல்லாம், ரூம் போட்டு (office conference ) யேசிபீங்களோ !!! simply super ... (dont mind my tamil mistake)

முத்துலெட்சுமி/muthuletchumi December 9, 2009 at 12:21 PM  

pappu said...
யப்பா என்ன க்ரியேட்டிவிட்டி.

LA(@)இளா said...
வெளுத்து கட்டிடீங்க (சர்ஃப் எக்ஸல் குறைக்கப்பட்டுள்ளது)//

இவ்விரண்டையும் பயங்கரமா மறுமொழிகிறேன். ( இரண்டு கமெண்ட் ந்க்கறது எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது )

:))

Unknown December 9, 2009 at 12:34 PM  

.... letter kuraikkapatullathu

Anonymous,  December 9, 2009 at 4:29 PM  

இது ஒரு பதிவா? நம்முடைய போதாத காலம் - இதையெல்லாம் படித்து தொலைக்க வேண்டியிருக்கு (பின்னூட்டம் சுருக்கப்பட்டுள்ளது)

மணல்கயிறு December 10, 2009 at 5:50 AM  

//இட்லி, கெட்டி சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.// இட்லி குறைக்கப்படவில்லை.

சம்பவத்தன்று சுரேஷ் என்ன ட்ரெஸ் போட்டிருந்தார் (மாற்றப்பட்ட)என்று சொல்லவேயில்லியே அய்யா.

படித்ததினால வயித்துவலி (காட்டப்படவில்லை). நீங்க உண்மையிலேயே சிறந்த படைப்பாளி. விஜய் டிவியில ட்ரை பண்ணி திரைக்கதை எழுதுங்க..

RAMYA December 10, 2009 at 7:49 AM  

ஐயோ நக்கல் கொஞ்சம் ஓவரா இல்லே (புரிந்தது புரியாமல் நடிக்கப்பட்டுள்ளது).

ஆமாம் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க (உண்மையை அதிகரிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது).

சினிமாவிற்கு ட்ரை பண்ணலாம் (உண்மையை உண்மையாக எழுதப் பட்டுள்ளது :)

Unknown December 11, 2009 at 2:19 AM  

என்ன ஒரு புத்திசாலி தனம்..,

Arun Natesan December 11, 2009 at 2:12 PM  

appadiyea ungalukku veetla adi vilandhadhai alaga eludhirukeenga

அறிவிலி December 12, 2009 at 2:42 AM  

:)))))))))))))
(ப்ராக்கெட்டுகளின் உபயோகம் மாற்றப்பட்டுள்ளது)

ஊர்சுற்றி December 14, 2009 at 1:30 PM  

//"ஏங்க. இதுக்கென்ன குறைச்சல்". உள்ளே ஒரே ஒரு பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. (பாத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது).//

ஹாஹாஹா... அருமை அண்ணே!

Anonymous,  December 14, 2009 at 2:26 PM  

கொஞ்சம் கூடப் பிடிக்கலை! (உண்மை மறைக்கப்பட்டுள்ளது)

MSK / Saravana December 14, 2009 at 4:06 PM  

பிரிச்சி மேஞ்சிட்டீங்க.. (பிரித்ததும் மேய்ந்ததும் குறைக்கப்பட்டுள்ளது)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP