Wednesday, December 2, 2009

Fetna-2010 மற்றும் நொறுக்ஸ்...

குளிர் காலம் ஆரம்பிச்சிடுச்சு இங்கே. தங்ஸாலெ சஹானாவை பள்ளிக்கு நடத்தி கூட்டிட்டு போகமுடியல. காலையில் 9 மணிக்கு நாந்தான் போய் விடவேண்டியிருக்கு. அதுக்காக மேனேஜர்கிட்டே இனிமே காலையில் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும்னு சொல்லப் போனேன்.

மேனேஜர்: லேட்டுன்னா, எப்போ வருவே?

நான்: கரெக்டா 9.10க்கு தினமும் வந்துடுவேன்.

மேனேஜர்: ம்? (கோபத்தோடு என்னைப் பார்க்க...)

நான்: (பின்மண்டையை சொறிந்தவாறே) : கோபப்படாதீங்க. தினமும் சரியா 9.10க்கு வந்துடுவேன். வேலையை சரியா செய்துடறேன். பாவம் தங்ஸ் குளிர்லே நடக்க முடியல. அதனால்தான்...

மேனேஜர்: இவ்ளோ நாளா எத்தனை மணிக்கு ஆபீஸ் வந்துட்டிருந்தே?

நான்: அது வந்து.. அது வந்து..

மேனேஜர்: நான் சொல்றேன்... 9.30.. எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டிருந்தியா?... @#$%% @#%@@

(இன்னும் அங்கேயே நின்னுக்கிட்டிருக்க நான் என்ன லூஸா... எஸ்கேப்....)

***********

போன வாரம் இங்கே நன்றி சொல்லும் நாள். அதாங்க Thanksgiving day. அன்னிக்கு ஒரு நாளு தொலைக்காட்சிப் பெட்டி முதல் சாம்பார் கரண்டி வரை எல்லாம் விலை குறைப்பு (அப்படின்னு சொல்லி) செய்து விப்பாய்ங்க.

வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு விடியற்காலையில் சொர்க்க வாசல் திறக்கறதுக்கு முன்னாடி கோயில்லே மக்கள் கூடறா மாதிரி, இங்கேயும் எல்லா கடைகளுக்கு முன்னாடி கும்பல் சேந்துடுவாங்க. பொருட்களை வாங்க வர்றவங்களுக்கு நடுவே - வாங்கறவங்களை பாக்க வர்றவங்கன்னு சரியா கும்பல்.

நாங்களும் வருஷம் தவறாமே காலையில் 4.30 மணிக்கு குளிர்லே நண்பர்களோட எல்லா கடைகளுக்கும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.
அப்படி இந்த வருடம் வாங்கின பொருட்கள்.

ஒரு 42” வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
ஒரு மைக்ரோவேவ் பெட்டி
ஆப்பிளின் பாட்டு கேட்கும் குட்டி பெட்டி
நாலைஞ்சு எலிக்குட்டி, விசைப் பலகை
மற்றும் பல பொருட்கள்.

இவ்வளவையும்... வெயிட் வெயிட்... நான் வாங்கலை. என் கூட வந்த நண்பன் வாங்கினான். அவன்கிட்டேந்து வாங்கி நான் கார்லே வைச்சேன். அவ்வளவுதான்...

**********

வட அமெரிக்கப் பேரவையின் 2010ஆம் ஆண்டுக்கான விழாவின் ஆரம்பம் வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. இடம், நேரம் மற்றும் விவரங்கள் கீழே.

அண்ணன் பழமைபேசி ஏற்கனவே விவரமா இடுகை இட்டுட்டாரு. ஒருக்கா படிச்சிக்கோங்க.

கூட்டத்திற்கு நான் போகலாம்னு இருக்கேன். மக்கள் யாராவது வர்றீங்கன்னா சொல்லுங்க. அட தப்பிச்சி போகறதுக்கு இல்லீங்க. பாக்கறதுக்கு வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன்.

December 12 th, 2009

4.30 p.m

Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

***********

இந்த சிச்சுவேஷனை உன்னிப்பா கவனிங்க..

இரவு சுமார் 8 மணி இருக்கும்.
அன்று முழு நிலவு நாள்.
நிலவு வெள்ளையா பிரகாசமா மேலே.
நல்ல இலையுதிர் காலம். எல்லா மரமும் மொட்டையா இருக்கு.
மொட்டையா இருக்குற மரக்கிளைகளுக்கு நடுவே நிலவின் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
முன்னே ஒத்தையடிப் பாதை.
காரில் நானும் தங்ஸும் தனியே போயிட்டிருக்கோம்.
பாதையில் எங்க காரைத் தவிர வேறு வண்டிகளே இல்லை.

இந்த சிச்சுவேஷன்லே உங்களுக்கு என்ன பாட்டு தோணும்?

எனக்கு...

ஒரு பழைய படத்துலே... சிவக்குமார் & சரிதா..சரிதாவுக்கு ஏதோ பிரச்சினை. சிவக்குமார் ஒரு பாட்டு பாடி அவங்களை தூங்க வைப்பாரு.அப்போ ஒரு வெள்ளையம்மா - மொட்டை மரங்களுக்கு நடுவே - சர்சர்ருன்னு சுத்தி வந்து ஆடுவாங்க.

ஒரு தடவை பக்கத்துலே உக்காந்திருந்த தங்ஸை திரும்பி பாத்தேன்.

அதுக்கப்புறம் வீடு வந்து சேர்றவரைக்கும் அவங்களை பாக்கலை...

***********

8 comments:

Anonymous,  December 2, 2009 at 11:29 PM  

//முன்னே ஒத்தையடிப் பாதை.
காரில் நானும் தங்ஸும் தனியே போயிட்டிருக்கோம்.//

ஒத்தையடிப்பாதைல போற கார் கண்டுபிடிச்சதும் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாம்னு இருக்கேன். :)

எம்.எம்.அப்துல்லா December 2, 2009 at 11:41 PM  

அண்ணே மனசத் தேத்திக்கிட்டு தெகிரியமா இருங்க. ஃபெட்னாவுக்கு புரோகிராம் பண்ண நான் வர்றேன்.

:)

Mahesh December 3, 2009 at 12:49 AM  

//நாலைஞ்சு எலிக்குட்டி, விசைப் பலகை//

அவர் பெரிய்ய்ய்ய கவிஞ்சரோ?? :))

Raghav December 3, 2009 at 12:54 AM  

தலை.. கடைசி வரி படிச்சு பார்த்து அப்புடியே கற்பனையும் செஞ்சேன்.. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..

Unknown December 3, 2009 at 6:46 AM  

//ஒரு பழைய படத்துலே... சிவக்குமார் & சரிதா..சரிதாவுக்கு ஏதோ பிரச்சினை. சிவக்குமார் ஒரு பாட்டு பாடி அவங்களை தூங்க வைப்பாரு.அப்போ ஒரு வெள்ளையம்மா - மொட்டை மரங்களுக்கு நடுவே - சர்சர்ருன்னு சுத்தி வந்து ஆடுவாங்க.//

ஆப்பிஸ்ங்கறதையும் மறந்து சிரிச்சேன்.. :)))))))))))

ஹுஸைனம்மா December 6, 2009 at 4:05 AM  

//ஒரு தடவை பக்கத்துலே உக்காந்திருந்த தங்ஸை திரும்பி பாத்தேன்.//

நீங்க ஒருதடவையாவது பாத்தீங்க. உங்க தங்ஸ் அதுகூடப் பாத்திருக்கமாட்டாங்களே?

Thamira December 6, 2009 at 1:12 PM  

8.30 மணி ஆபீஸுக்கு 9 மணிக்குதான் டெய்லி போவேன், டேமேஜர் கண்ணுல படாத படிக்கு ரூமுக்கு ஓடிடுவேன்.

என்னிக்காவது 8.40 க்கு போறப்ப பாத்துட்டாருன்னா.. ஹிஹி.. இன்னிக்கு கொஞ்சம் அவசர வேலை லேட்டாயிருச்சுன்னு சமாளிப்பேன். தலையெழுத்து.!

அப்புறம் தலைப்பை முதலில் படிக்கச்சொல்லொ Fanta 2010 ன்னு படிச்சுட்டேன். ஏதா புது ஃப்ளேவர் விடுறாங்களோனு நினைச்சுட்டேன். ஹிஹி..

சிங்கை நாதன்/SingaiNathan December 10, 2009 at 6:24 AM  

//Admission: Free for donors//

Is one $ or less than that donation accepted ? Then i can save 19$ :)

Anputan
Singai Nathan

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP