Sunday, December 13, 2009

FeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...

நேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.



FeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.



விழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




மேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.


திரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.


முனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.

இதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்!), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.

குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.


*****


(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)


(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).


(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).



(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).



18 comments:

Chitra December 13, 2009 at 4:11 PM  
This comment has been removed by the author.
Chitra December 13, 2009 at 4:12 PM  

Hurray! Best wishes for the success of FeTNA 2010!

Unknown December 13, 2009 at 6:48 PM  

உங்களுக்கு வாழ்த்துக்கள் எங்களுடன் இந்த நிகழ்ச்சியை பதிவு செய்ததுக்கு. ஜூலை மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறோம்!!!

இவன் December 13, 2009 at 9:28 PM  

வெறும் 50 பதிவு எழுதின எங்களை எல்லாம் பதிவர்னு ஒத்துக்கமாட்டீங்களா. ؟

சின்னப் பையன் December 13, 2009 at 9:57 PM  

ஆஹா... 'இவன்' வந்துட்டீங்களா...

ஆமா. நீங்க பதிவரில்லைதான்... ஆனா.. நீங்க ‘மூஊஊஊத்த' பதிவர். ஹிஹி... இது எப்படி இருக்கு?????????

:-)))))))))))))

Unknown December 13, 2009 at 11:20 PM  

தமிழ் சங்கம் இப்படி எத்தனை பிரிவு வைத்திருக்கிறார்கள்?

ரவிசங்கர் எதற்கு?

கஞ்சா கருப்பு? பாவம் அமெரிக்க தமிழர்கள்!

எம்.எம்.அப்துல்லா December 14, 2009 at 2:25 AM  

யாமும் வருகின்றோம்

:)

சின்னப் பையன் December 14, 2009 at 5:38 AM  

வாங்க வினிதா -> ஃபெட்னான்றது ஒரு தமிழ் சங்கத்தோட பிரிவு இல்லீங்க. வட அமெரிக்காவிலிருக்கும் சுமார் 25+ (பட்டியல் www.fetna.org தளத்திலுள்ளது) தமிழ் சங்கத்தின் கூட்டமைப்பு (umbrella unit).

தற்போது கனெக்டிகட் மாநிலத்தில் நடைபெறுகிறதுன்னா, கனெக்டிகட்டில் இருக்கும் தமிழ் சங்கம் இந்த விழாவிற்கு பொறுப்பேற்பதுடன், மற்ற அனைத்து தமிழ் சங்கங்களும் நிறைய உதவிகள் செய்கின்றன.

****

தமிழர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் யாரா இருந்தாலும், பேரவைக்கு அழைக்கப்படலாம். இந்த வருடம் 'கூத்து' நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறுவதாக இருக்கிறது. அதனால், அவங்க எதுக்குன்னு சொல்லிடுவீங்களா?

நன்றி..

Thamira December 14, 2009 at 12:03 PM  

எனக்கு இது பொது அறிவுத்தகவல்.

குப்பன்.யாஹூ December 14, 2009 at 12:33 PM  

here again cinema people, vivek, vadivelu,

If educated people are behaving like this then what else we can expect from our voters.

Then why to blame Azagiri or Rithish or Sonia

RAMYA December 14, 2009 at 1:31 PM  

பகிர்வுக்கு நன்றி அண்ணா!
வாழ்த்துக்களும்....

எம்.எம்.அப்துல்லா December 14, 2009 at 1:40 PM  

பகிர்வுக்கு நன்றி அண்ணா //

யக்கா நான் உங்க ரெண்டு பேரையும் நேரில் பாத்துருக்கேன். அவர் உங்களுக்கு தம்பி :)

அருமையான எருமை December 14, 2009 at 5:00 PM  

சில காலமாக உங்கள் பதிவுகளைப் படித்து விட்டு இப்பொழுது உங்கள் follower ஆகவும் மாறிவிட்டேன். 2010 Fetna விழா நம்ம ஊருக்குப் பக்கத்துல தான். (Buffalo வில் இருந்து சில மணி car பயணம் தான்). ஏற்கனவே இங்கே இருந்து ஒரு நண்பர் கூட்டம் உங்க ஊர் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். விழா அருகில் வரும்போது மீண்டும் தொடர்பு கொள்கிறேன்!

சின்னப் பையன் December 14, 2009 at 6:24 PM  

அருமையான எருமை (அவ்வ்வ்!!) -> அற்புதம்... மிகவும் சந்தோஷம். இடுகைகளை தொடர்ந்து படித்து வாங்க. விவரங்களை தெரிஞ்சிக்கோங்க. கண்டிப்பா வாங்க. நேரில் சந்திப்போம்... நன்றி...

Anonymous,  December 14, 2009 at 6:54 PM  

இந்தத் தடவை பங்குபற்ற விருப்பமுள்ளவர்கள் முதலிலேயே பதிவு செய்து கொள்ளுங்கள். போனதடவை (2009 ஜூலை) வழமை போலவே இருக்கும் என நினைத்து கடைசி நாள் அனுமதிச்சீட்டுக்கு ஆலாய் பறந்தும் கிடைக்காமல் போன அனுவத்தில் சொல்கிறேன்:(

சின்னப் பையன் December 14, 2009 at 8:06 PM  

வாங்க அனானி -> அப்படியா.. ஓ. மத்தவங்க சொல்லித்தான் நான் அதை கேள்விப்பட்டேன். நானும் இந்த தடவைதான் முதல்முறையாக இந்த விழாவிற்கு போகப் போகிறேன்... நன்றி...

பழமைபேசி December 14, 2009 at 10:51 PM  

வாழ்த்துகளும் நன்றியும்!

விஜயசாரதி December 15, 2009 at 10:29 AM  

//குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.// உங்க மேல சத்தியமா சொன்னாலும் நீங்க ச்சின்னைப்பையன்னு பேரு வெச்சிக்கிட்டு எழுதற மேட்டர் எல்லாம் பார்த்த நம்ப முடியலையே....

நல்லா யோசிச்சு சொல்லுங்க...நிஜமாவா? நிஜமாவா குடிக்கல?

ஆனா வீட்டு மேட்டர் சொன்னதுனால கொஞ்சம் நம்ப முடியுது...ரொம்ப அடிபட்டா மாதிரி இருக்கே...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP