ஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் சில...
மறுபயனாகு கூறுகள் - மென்பொருள் துறையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் இது. ஆங்கிலத்தில் - Reusable Components.
ஒரே மாதிரி வடிவமைப்போ, மென்பொருள் ஆணைகளோ பலமுறை பயன்படுத்தும் நிலை வருமாயின், முன்னால் செய்து வைத்த வேலையிலேயே மிகச்சிறிய அளவுக்கு நகாசு வேலை செய்து - அப்படியே
பயன்படுத்துவதற்குப் பெயர்தான் மறுபயனாகு கூறுகள்.
புதிதாக ஒன்றை உருவாக்கும் நேரம், உழைப்பு அதற்காக ஆகும் செலவு இவை அனைத்தும் மிச்சமாகையால், இந்த மாதிரியான மறுபயனுக்கான வேலைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பல நிறுவனங்களில் சிறப்பு
பரிசுகளைக் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.
இப்படி ஒரு துறையில் ஊக்கப்படுத்தும் ஒரு வேலையை, இன்னொரு துறையில் ஒருவர் பயன்படுத்தினால் - அவரை இந்த உலகம் தூற்றுகிறது. வாருகிறது. சேற்றை அள்ளி பூசுகிறது.
யார் அவர்? அது என்ன துறை? விடை இடுகையில்.
*****
ஈரோடு சங்கமம் தொடர்பான இடுகைகளை படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு மிக நல்ல ஆராக்கியமான கூட்டத்தை நடத்திய ஈரோடு மற்றும் தமிழக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நம் கடமை. நீண்ட நாள் நிலைத்து நிற்கும்படியான சிறுசிறு ப்ராஜெக்டுகளை கண்டுபிடித்தால் - உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
********
குளிர் இங்கே வாட்ட ஆரம்பித்துவிட்டது. போன வாரயிறுதியில் 10"க்கு பனி வேறு.
வெளியில் போகும்போது அடுக்கடுக்கா ஆடைகளை போட்டுக் கொண்டு, கொலை செய்யப் போவதைப் போல், முகத்தை மூடும் மங்கி குல்லா (அதுக்கு சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்கன்னு வீட்லே சொல்றாங்க!), கையுறை இதையெல்லாம் மாட்டிக் கொண்டு - மறுபடி வீட்டுக்கு வந்து இதையெல்லாம் (எல்லாத்தையும்னா, எல்லாத்தையும் இல்லேப்பா!!!) கழட்றதுக்கே நேரம் சரியா போயிடுது. இதுலே எங்கே பதிவு, இடுகை, பின்னூட்டமெல்லாம்!!!.
குளிரினால் பெரிய உபயோகம் என்னன்னா (இதெல்லாம் போன வருடமே சொன்னேன்னு நினைக்குறேன்!!!) - சட்டையை நெருப்புப் பெட்டியில் தேய்க்க வேண்டாம், அங்கங்கே கிழிஞ்சி இருந்தாலும் பரவாயில்லே, சொல்லப் போனா சட்டையே வேண்டாம் - அட. மேலேதான் குளிராடை (ஸ்வெட்டர்) போட்டிருப்போமே!!!.
*****
ஃபெட்னா-2010னுக்கான (FeTNA-2010) திட்டமிடும் பணிகள் துவக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு திட்டக்குழுக்களில் உதவிட தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர். இங்கிருக்கும் நண்பர்கள் - உதவிட
நினைத்தால் சொல்லுங்கள். (ஃபெட்னா பற்றிய விவரங்களுக்கு www.fetna.org பார்க்கவும்).
*****
மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னேரம் விடையை கண்டுபிடிச்சிருப்பீங்க. அது டாக்டர் விஜய். வேணும்னா முதல் பத்தியை மறுபடி படிச்சிக்கோங்க. நான் இங்கே அதை விளக்கவில்லை.
*****
வீட்டில் காபி என்று கொடுத்த டிகாக்ஷன்
காலை அலுவலகத்துக்கு புறப்படும் டென்ஷன்
முன்னால் செல்லும் வண்டியின் புகை
சடாரென்று கடக்கும் பாதசாரியின் கண்ணில் தெரியும் பகை
சரியாக நாம் வரும்போது மாறும் சிவப்பு
மேலே கூறிய எல்லாவற்றாலும் சரியான கடுப்பு
இவற்றிற்கெல்லாம் இருக்கு உங்ககிட்டே மாத்திரை
இந்த இடுகைக்கு நீங்க போடும் ஓட்டு முத்திரை
ஓட்டு போடுவோம்! பயன் பெறுவோம்!!!
(நான் என்னைச் சொன்னேன்!!!)
******
19 comments:
// ஓட்டு போடுவோம்! பயன் பெறுவோம்!!!
(நான் என்னைச் சொன்னேன்!!!) //
ஓட்டுப் போட்டாச்சு... இது கூட செய்யவில்லை என்றால் அப்புறம் நைஜிரியாவில் உட்கார்ந்துகிட்டு என்ன கிழிக்கிறீங்கன்னு யாராவது கேட்கப்பிடாது இல்லையா?
// மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னேரம் விடையை கண்டுபிடிச்சிருப்பீங்க. அது டாக்டர் விஜய். வேணும்னா முதல் பத்தியை மறுபடி படிச்சிக்கோங்க. நான் இங்கே அதை விளக்கவில்லை. //
அதானே ஒரே விஷயத்தை எத்தனை தடவை விளக்குவது.
//மறுபயனாகு கூறுகள்./
இதை நாம ஊக்கு விக்கணும் பாஸ் :)
ஈரோடு சந்திப்பு குறித்தான உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தல!
அன்பின் ச்சின்னப்பையன்
நல்ல இடுகை - படித்தேன் - ரசித்தேன் -
நல்வாழ்த்துகள்
நீண்ட நாள் நிலைத்து நிற்கும்படியான சிறுசிறு ப்ராஜெக்டுகளை கண்டுபிடித்தால் - உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.............. இது சின்ன பைய்யன் பார்வை இல்லைங்க. பெரிய மனிதரின் பார்வையில். நல்ல கருத்து.
//வீட்டில் காபி என்று கொடுத்த டிகாக்ஷன்
காலை அலுவலகத்துக்கு புறப்படும் டென்ஷன்
முன்னால் செல்லும் வண்டியின் புகை
சடாரென்று கடக்கும் பாதசாரியின் கண்ணில் தெரியும் பகை
சரியாக நாம் வரும்போது மாறும் சிவப்பு
மேலே கூறிய எல்லாவற்றாலும் சரியான கடுப்பு //
ஆஹா!பிரம்மாதம்!
கவித!கவித!
:)
ஈரோடு பதிவர் சந்திப்பு குறித்த உங்கள் இடுகைக்கும்.அன்பிற்கும் நன்றி
மன்னிக்கனும் நான் அந்த விடை ச்சின்னப்பையன்னு நினைச்சிட்டேன்.. :)
இங்கே இருக்கிற கொஞ்சம் குளிரேலேயே தட்டச்செல்லாம் தப்பாதப்பா வருது.. நான் பதிவு போடாததற்கு அதயே காரணம் காட்டிட்டிருக்கேன். :)
கவித கவித.
கவித ஆச்சர்யக்குறி
கவித ஆச்சர்யக்குறி ஆச்சர்யக்குறி
என்னே உங்கள் கவி எழுதும் திறமை..!!! தங்களுக்கு கற்காசுகள் கொரியரில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.. தவறாமல் பெற்றுக்கொள்ளவும்
//உடலால் உதவிட முடியாத வெளிநாட்டிலிருக்கும் என் போன்றவர்கள் கண்டிப்பாக பொருளுதவி செய்வோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.//
உங்களது எண்ணம் நெகிழவைக்கிறது. ஈரோடு சந்திப்பினைப்பற்றியும் இடுகையில் குறிப்பிட்டமைக்கு நன்றிகள்...
மிக்க மகிழ்ச்சி தலைவா....
நான் ஈரோடுலயும் இருந்தேன்... FeTNAலயும் இருப்பனே! இஃகிஃகி!!
சைலண்டா ஒரு கேள்வி கேட்டுட்டு..அதுக்கு பதில கேள்விக்கு மேலேயே கொடுத்துட்டு...இப்படி கொஞ்சம் திரும்புங்க...ஹலோ..ஹல்..இருங்க அந்த மங்கி கேப்ப கழட்டாதிங்க....ஆஆஹ்ஹ்..இது கேள்வி பதிலுக்கு கரெக்டா பொருந்துது...
10 டிகிரி குளிருல துளிர் விட்டுப்போய்..சுளீர்..சுளீர்னு யாருக்கோ சவுக்கடி...
அடிக்கடி கடி கடின்னு கடிச்சு துப்பறீங்களே...அம்பூட்டு பசியா...மக்கா....
ஆங்..அப்புறம் அண்ணே ஓட்ட போட்டுட்டுட்டேன்...விரலை வேணும்னா கட் பண்ணி கொரியர்ல அனுப்பி வைக்கிறேன்...
வழக்கமான சுவாரசியம்.
நல்ல பதிவு..FeTNA விழாவிற்கு இங்கிருந்து (Buffalo, NY) ஏதாவது செய்ய முடியுமென்றால் கண்டிப்பாக பங்குபெற விரும்புகிறேன். உங்க ஊருல போன வாரம் அடிச்ச பனி இந்த வாரம் இங்க..இருந்தாலும் 4-5" தான் இதுவரை..அள்ளிப் போட வேண்டாமே!!!!!!!!
Post a Comment