கைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யுங்கள்!
1. ஆபீஸுக்குத்தான் பைக்குலே / கார்லே போயிட்டிருக்கேன். இன்னும் அரை மணி நேரம் ஆகும். பேசலாம். சொல்லுங்க.
2. இப்பத்தான் ரயிலிலிருந்து இறங்கினேன். தண்டவாளம் கடக்கறதுக்காக நிக்குறேன்.
3. வீட்டுக்குத்தான் வந்துட்டிருந்தேன். இப்போ பெட்ரோல் பங்க்லே பெட்ரோல் போட்டிட்டிருக்கேன்.
4. பஸ்லே / ரயில்லே போயிட்டிருக்கேன்.
5. பேங்க்லே / மருத்துவமனைலே இருக்கேன்.
*****
நண்பர்கள் யாரையாவது கைப்பேசியில் கூப்பிட்டால் நான் கேட்கும் முதல் கேள்வி - பிஸியாயிருக்கீங்களா?. அப்போ அவங்க மேற்கூறிய பதில்களில் ஏதாவது ஒன்றை கூறினால், மேற்கொண்டு பேசாமல் உடனடியாக அழைப்பை துண்டித்து விடுவேன்.
அதே போல், நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கூப்பிட்டாலும் அதை எடுக்காமலும், அப்படியே எடுக்க வேண்டியிருந்தால் வண்டியை ஓரத்தில் நிறுத்தியே அந்த அழைப்பை எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.
ஓட்டுனர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது எல்லாருக்கும் தெரியும். அதில் அந்த ஓட்டுனரது தவறு 50% என்றால் மீதி மறுமுனையில் பேசுபவரதாகும்.
வண்டி ஓட்டிட்டிருக்காரே, நாம் இப்போது பேசினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதுன்னு தெரிஞ்சி அழைப்பை துண்டித்தாலே, விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதுன்றது என் கருத்து.
*****
மேலே சொன்ன பதில்களில் முதல் இரண்டு - இவ்வகையானதே.
பேசுபவருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் பிரச்சினை வரக்கூடும் என்ற உணர்வு இருந்தால், அழைப்பவர் கண்டிப்பாக அழைப்பை துண்டித்து விடுவார். அது எத்தகைய விஷயமாக இருந்தாலும், அவர் வீடோ / அலுவலகமோ போய் சேரும் சிறிது நேரம் காத்திருத்தலில் ஒன்றும் குடி முழுகிப்
போய்விடாது என்று உணர வேண்டும்.
மூன்றாவது பதில் இன்னும் அபாயமானது. எல்லா பெட்ரோல் பங்கிலும் - கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள் என்று போட்டிருப்பார்கள். இங்கேயும் கவனமாக இருத்தல் அவசியம்.
கடைசி இரு பதில்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இல்லையென்றாலும், அந்தப் பக்கம் பேசுபவரால் மற்றவர்களுக்கு எவ்வளவு தொந்தரவு ஏற்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
*****
தண்டனைகள் கடுமையானாத்தான் குற்றங்கள் குறையும்னு விவேக் சொன்னது போல், கைப்பேசியில் பேசிக்கொண்டே விபத்து ஏற்படக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அப்படியே, அழைப்பின் அந்தப்பக்கம் பேசியவருக்கும் தண்டனை தந்தா இன்னும் நல்லா இருக்கும். அழைப்பை ‘கட்' செய்யாத குற்றத்திற்காக, அவரது மேட்டரை ‘கட்' செய்துவிட்டால், மறுபடி வேறு யாராவது வண்டி ஓட்டும்போது அழைத்து பேசமாட்டார் என நம்பலாம்.
*****
7 comments:
"ஓட்டுனர் கைப்பேசியில் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது எல்லாருக்கும் தெரியும். அதில் அந்த ஓட்டுனரது தவறு 50% என்றால் மீதி மறுமுனையில் பேசுபவரதாகும்." ...... சரியா சொன்னீங்க. மறுமுனையில் இருப்பவருக்கும் சம அளவு பொறுப்பு உண்டுதான்..
அவசியமானதும் எச்சரிக்கையானதுமான பதிவு இது.
தண்டவாளத்தின் அருகே நின்றபடி செல்பேசியில் பேசியதாலேயே நண்பர் ஒருவருடைய உயிர் பறிபோனது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
//அதே போல், நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது யாராவது கூப்பிட்டாலும் அதை எடுக்காமலும், அப்படியே எடுக்க வேண்டியிருந்தால் வண்டியை ஓரத்தில் நிறுத்தியே அந்த அழைப்பை எடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.//
நான் கூட
விதின்னு ஒன்னு இருக்கு கேள்விப்பட்டு இருக்கீங்களா?
என்னைப் பொறுத்த வரையிலும் உங்கள் கருத்துதான் எனக்கும். வண்டி ஓட்டுவது அல்லது கைபேசியில் பேசுவது இதில் எதாவது ஒன்று மட்டும் தான் ஒரு சமயத்தில் முக்கியமாக இருக்கக் கூடும். மிக முக்கியமான தவிர்க்க முடியாத அழைப்பென்றால் வண்டியை ஓரம் கட்டி பின் பேசுவதும், சாதாரண அழைப்பென்றால் கட் செய்து விட்டு , அல்லது கட் செய்யாமல் பயணம் முடிந்த பிறகு அழைத்துப் பேசுவதும், தான் சாலச் சிறந்தது.
இரு சக்கர வாகனத்தில் ஒரு கையால் ஹான்டில் பிடித்து, மறு கையால் செல்போன் பிடித்து .. தலையை ஒரு பக்கம் சாய்த்து.. பேசிக்கொண்டே வண்டி ஓட்டினால் . .. உங்கள் அழைப்பு .. பயணம் .. இரண்டையுமே .. முடிக்காமல் போகலாம் ..
Super பதிவு ..
அவசியமான பதிவு. நானும் நீங்கள் கூறிய தருணங்களில் போன் அட்டெண்ட் செய்வதில்லை.
ரொம்ப நல்ல உபயோகமான தகவல்...
கருத்துள்ள நடை.. மற்றும் விதம்..
நன்றி....
Post a Comment