Saturday, March 3, 2012

ட்விட்டர் லிஸ்ட் எப்படி உருவாக்கலாம்?




முக்கியமான டிஸ்கி : இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. ஏன்னா, இதில் நானே சில பிரிவுகளில் வருவேன்!! அதனால், படிச்சிட்டு, டென்சனாகாமே மறந்துடுங்க. (லேபிளையும் ஒரு முறை பார்த்து விடவும்!)


***

ட்விட்டர் TL-ஐ லிஸ்ட் போட்டு பிரித்து வைத்தால், அனைத்து டிவிட்டுகளும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனா, அந்த லிஸ்ட்களை எப்படி உருவாக்குவது? கீழ்க்கண்டவாறு செய்தால், பலன் இருக்குமான்னு பாத்து சொல்லுங்க.

லிஸ்ட்களின் லிஸ்ட் :


1. இசை-ராசா

2. இசை-ரகுமான்


3. கிரிக்கெட்-சச்சின்

4. கிரிக்கெட்-அசச்சின்


5. கர்நாடக இசை

5a.கர்நாடக இசை-TMK மட்டும்


6. பண்பலையில் பாட்டு போடுபவர்கள் / கேட்பவர்கள் / பாட்டு போடச் சொல்லி கேட்பவர்கள்.

7. இணையத்தில் / யூட்யூபில் பாட்டு கேட்பதை அறிவிப்பவர்கள்.


8. யாஹூ chat (ரெண்டு பேர் மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பர்.)

9. ரயில் வண்டி (ஒரு ஐந்தாறு பேர் தொடர்ந்து பேசுவர். வண்டி பெரியதாகிவிட்டால் twitlongerல் பேசுவர்).


10. போஸ்டர் பாய்ஸ் - புது பதிவு போட்டால் மட்டும் இங்கு வரும் விளம்பரம் ஒட்டுபவர்கள்.

11. Drupal - இதற்கு விளக்கம் தேவையில்லை.


12. தத்துவவாதிகள். (தத்ஸ் எண் போட்டு தொடர்ந்து தாக்குபவர்கள்).

13. இலக்கியவாதிகள் - ஒண்ணும் சொல்றதுக்கில்லை.


இது ஒரு சாம்பிள் பட்டியல்தான். மல்லாக்க விட்டத்தைப் பார்த்து யோசிச்சா இன்னும் பல லிஸ்ட்கள் தோன்றும். பிறகென்ன, அவற்றை உருவாக்கி, அனைத்தையும் படித்து ஜென்ம சாபல்யம் பெறுங்க. அஷ்டே.



***



4 comments:

natbas March 3, 2012 at 9:24 PM  

#சார் டவுட்.

இந்த லிஸ்ட்லாம் அவாய்ட் பண்றதுக்கா?

சின்னப் பையன் March 4, 2012 at 8:52 AM  

அவ்வ்வ். இல்லை. லிஸ்ட் எனப்படுவது யாதெனின், ஒரு ட்வீட்டும் விட்டுப் போகாதபடி படித்தல். ஸ்பெஷல் ஆளுங்களுக்காகதான் அது. :-))

Anonymous,  March 5, 2012 at 11:49 AM  

That List No 5a, you are very sly fellow :P

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP