Friday, March 9, 2012

மென்பொருள் செயல்முறை பற்றி தெரிந்துகொள்ள ஒரு புதிய தளம்!


மென்பொருள் Process சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்லலாம்னு ஒரு #365 தளம் துவக்கியிருக்கேன். தளத்தின் முகவரி: http://365process.blogspot.com. தினம் ஒரு பதிவாக 365 நாட்களுக்கு தொடர்ந்து எழுதலாம்னு ஒரு
எண்ணம். இதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதை இந்த முதல் பதிவு சொல்கிறது.

http://365process.blogspot.com/#!/2012/02/365process.html

பார்த்து, தொடர்ந்து படித்து, ஆதரவு தருக. நன்றி.

***

டிவிட்டரின் பயன் மற்றொரு முறை தெரிய வந்தது. ஒரு நல்ல technical ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி சொல்லுங்கன்னு

கேட்டேன். படபடவென வந்து விழுந்தன விடைகள். அவை இங்கே. இவை தவிர வேறேதும் இருந்தால், அதையும் சொல்லவும்.

http://dictionary.tamilcube.com/index.aspx

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.htm

http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

**

எப்படி துவங்கியதுன்னு தெரியல. ஆனா பின்வரும் ட்வீட்ஸ் போலவே பலரும் இன்று டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் பங்கு இங்கே.

சவுரி. #இழுத்ததில் வந்தது.

கங்குலி சட்டை. #கழட்டியதில் பிடித்தது.

இளவட்டக் கல். #தூக்கியதில் பிடித்தது.

திட்டு. #உடைத்ததில் கிடைத்தது

தவளை. #பிடித்ததில் கடித்தது

மாங்காய் பத்தை. #கடித்ததில் பிடித்தது

***

2 comments:

புதுகை.அப்துல்லா April 5, 2012 at 3:39 AM  

அண்ணே, மறுக்காவும் தொடர்ந்து பதிவெழுத ஆரமிச்சிட்டீங்களா!! வாழ்துகள்.

இடி முழக்கம் August 23, 2012 at 12:14 PM  

நல்ல முயற்சி தொடருங்கள்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP