விளையும் இலக்கியவாதியை...
விளையும் இலக்கியவாதியை...
அக்கம்பக்கம் பேசியதிலிருந்து
ட்விட் போடுவேன்...
இருபது ட்விட் ஆனபிறகு அதை வைத்து
இடுகை போடுவேன்...
பல இடுகைகள் போட்டபிறகு அதை வைத்து
புத்தகம் போடுவேன்...
ஓரிரு புத்தகங்கள் போட்டபிறகு அதை வைத்து
ஒரு தொகுப்பு போடுவேன்..
பல தொகுப்புகள் போட்டபிறகு..
போட்டபிறகு...
உள்ளேயிருந்து குரல் கேட்டது...
அதைத் தூக்கி பரண் மேலே போடுங்க.
இப்போதைக்கு இந்த தோசையை வாயிலே போடுங்க..
வயிறாவது ரொம்பும்..
விளையும் இலக்கியவாதியை
முளையிலே கிள்ளிட்டாங்க!
**********
இது கண்டிப்பா நான் இல்லை!!!
கஷ்டப்பட்டு யோசித்து(!!)
ஒரு இடுகையை வெளியிட்டேன்...
இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும்
இணைத்தேன்...
புது இடுகைன்னு டிவிட்டரிலும், பஸ்சிலும்
புலம்பினேன்...
ஆர்குட்டிலும், முகநூலிலும்
அலறினேன்.
நெருங்கிய நண்பர்களுக்கு
தொலைபேசி கூறினேன்.
தூரத்து சொந்தங்களுக்கு எஸ்.எம்.எஸ்
தூது அனுப்பினேன்..
யாஹூ, கூகிள் குழுமங்களுக்கு
யாராவது பாருங்கப்பான்னு மின்னஞ்சல் செய்தேன்..
மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடும்போது
மறக்காமல் இடுகையின் உரலையும் கொடுத்தேன்...
இவ்வளவும் செய்த பிறகு,
இருபதே நிமிடத்தில் என்
இடுகையை தூக்கிவிட்டேன்...
யாராவது screenshot எடுத்து
போடமாட்டாங்களான்னு பார்க்கிறேன்.
அப்படியாவது bigshot
ஆகமுடியுதான்னு யோசிக்கிறேன்.
*****
19 comments:
super..........
சூப்பரு.. கலக்கிட்டீங்க தல..:)
ஹி ஹி... :D
தோசைய வாயில போடுங்கனு சொன்னதை சொல்லிடீங்க, ஆனா அதோடு தோசைய போட்டவங்க ரெண்டு போடு போட்டதை சொல்லலையே ??
இடுகை போட்டீங்க சரி. கண்டெண்ட் சர்ச்சைக்குரியதா போட்டீங்களா:))
அண்ணே நீங்க எங்கே போயிட்டீங்க
பிக்சாட் ஐடியா சூப்பர்... கவிதை கலக்குகிறது... வாழ்த்துக்கள்
இரண்டாவது, கோர்வையா நல்லா வந்திருக்கு....
//நசரேயன் said...
அண்ணே நீங்க எங்கே போயிட்டீங்க
//
சொல்லாதீங்க... அங்கயும் வந்திடுவாரு இவரு...
சொன்னாலும் சொல்லாடியும் நீங்க பிக்ஷாட் தான்!
superrrrrrrrrrr :)
super.....
super....
pazhamipesi comment on Nasareyan is good :)
கமெண்ட்டுக்கே எப்படி கமெண்ட் கொடுக்கறதுனு தெரியலியே...
:)
ஹி ஹி ஹி
தங்கமணியின் சேவை எந்நாட்டுக்கும் தேவை.... ஹா... ஹா...
ஹிஹி.. முதல் பகுதி செமை. தோசையையும் வாயில் போட்டுவிட்டு திரும்பவும் ஆரம்பிக்கணும் தல..
அதானே.... விடுங்க சத்யா... எலாருக்கும் பொறாமை :(
Post a Comment