எந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்?
புயல், மழைக்காலங்களில் அவசியமான பொருட்களை முன்னாடியே வாங்கி வெச்சிக்கற மாதிரி, எந்திரன் வர்ற தேதி தெரிஞ்ச இந்த காலக்கட்டத்தில் நாம முன்னெச்சரிக்கையா என்னென்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணுமா? நீங்க சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க.
*****
எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய படிச்சி நல்ல server administrator ஆயிடணும்...
விமர்சனம் அடிச்சி அடிச்சி நிறைய servers தொங்கிடப் போகுதே..
எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மூச்சுக் காற்றை உள்ளே சேமிச்சி வைக்கணும்...
தாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்!!) நிறைய பெருமூச்சு விடவேண்டியிருக்குமே...
எந்திரன் வர்றதுக்குள்ளே... புது சொம்பு வாங்கி பஞ்சாயத்து பண்ண கத்துக்கணும்...
நல்லாயிருக்கு / இல்லே அப்படின்னு எல்லாருக்கும் அடிச்சிக்கும்போது உதவுமே...
எந்திரன் வர்றதுக்குள்ளே... ஒரு இலக்கியவாதியாயிடணும்...
அப்போதானே பின்னவீனத்துவ / முன்னவீனத்துவ விமர்சனம் எழுதமுடியும்...
எந்திரன் வர்றதுக்குள்ளே... உலக திரைப்படமெல்லாம் பாத்துடணும்...
அப்போதானே எங்கேயிருந்தெல்லாம் சுட்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்...
எந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மாடுகளை வாங்கணும்...
பால் அபிஷேகம் செய்றதுக்கு எக்கச்சக்க பால் வாங்குவாங்களே...
எந்திரன் வர்றதுக்குள்ளே... இமயமலை போயிட்டு வந்துடணும்...
அப்புறம் அங்கே விகடன், குமுதம் நிருபர்களெல்லாம் வந்துடுவாங்களே...
எந்திரன் வர்றதுக்குள்ளே.. உலக இசையை கரைச்சிக் குடிக்கணும்...
அப்போதான் ‘இசை ஆய்வாளர்கள்’ எழுதறதை புரிஞ்சிக்க முடியும்...
எந்திரன் வர்றதுக்குள்ளே.. ஒரு பெரிய்ய்ய புது ஃப்ரிட்ஜ் (fridge) வாங்கணும்...
சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகாமே இருக்கணுமா இல்லையா?
*****
பிகு: இந்த மாதிரி இடுகைக்கு பிகு போட்டாலே என்ன சொல்லுவாங்கன்னு உங்களுக்கே தெரியுமே? நானும் அவரோட ரசிகந்தான். அவர் படம் முதல் நாளே போய் பாத்துடுவேன். அப்படி இப்படி.. ஹிஹி.. நான் மட்டும் அதை சொல்லக்கூடாதா என்ன?
*****
9 comments:
அட சை நீங்க லும் சதி சிட்டேன்க
எந்திரனில் ஒரு டிஸ்க்ளைமர் - இளகிய மனம் படைத்தோர் இப்படத்தை பார்க்க வேண்டாம், காரணம் தாத்தா போடும் ஆட்டம், தாத்தா இன்னும் காதல் காட்சிகளில், தாத்தா இன்னும் இளமையாக (காண்பிக்க முயற்சி செய்வது) இருப்பது போன்ற பயங்கர காட்சிகள் இப்படத்தில் உண்டு
innikku hollywood hero ellamey grand fathers dan sankar terminatora copy adikkar matri apokalipta va copy adicca nalla irukkum hero kamal eppudi
வட போச்சே.....
NJ ல எனக்கும் ஒரு டிக்கெட் போட்டு வையுங்க...
:)))
\\தாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்!!) \\
ஐஸ் பாட்டின்னுல்ல வந்திருக்கனும். ஹி ஹி ஹி.
இசையைக் கரைச்சி குடிக்கும் போது எத்தனை ஸ்பூன் சர்க்கரை போடணும்னு சொல்ல மறந்துட்டீங்க பாருங்க..
வித்யாவின்..
ஐஸ் பாட்டி.! :-))))))))
http://bit.ly/ai8Y0a
Enthiran Result from Preview Show
Great Info about the songs, but movie not so encouraging.
Post a Comment