அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை!!!
ஒரு சின்ன கொசுவத்தி.
மதியம் 3 மணி. தலைவர் எங்க குழுவினரை கூப்பிட்டு பேசுறார்.
"நாளைக்கு காலையில் க்ளையண்டுக்கு இந்த வேலையை முடிச்சி குடுக்குறதா சொல்லியிருக்கேன். நீங்க எல்லோரும் இன்னிக்கு எவ்ளோ நேரமானாலும் வேலை செய்து முடிச்சிட்டுத்தான் போறீங்க. சாப்பாடு சொல்லிடறேன். நம்ம ஆபீஸ் வண்டியிலேயே எல்லாரையும் வீட்டில் விட சொல்லிடறேன்".
சொல்லிட்டு அவர் கிளம்பி போயிட்டார்.
4 மணி.
அவங்க வர்றாங்க.
சத்யா (நான்தான் குழுத்தலைவன்) - "என் புருஷனுக்கு உடம்பு சரியில்லை. நான் போய்த்தான் பாத்துக்கணும். என் பங்கை நான் காலங்கார்த்தாலே வந்து முடிச்சு கொடுத்துடறேன். பிரச்சனை எதுவுமேயில்லை".
நான் - "என்னம்மா, தலைவர் அப்படி சொல்லிட்டு போயிருக்காரே?"
அவங்க - "நான் போயே ஆகணும். நான்தான் நாளைக்கு வந்து வேலை செய்யறேன்னு சொல்றேன்லே. கண்டிப்பா என்னால் இந்த டெலிவரி நிக்காது".
நான் - "சரி, பாத்து செய்ங்க".
அவ்ளோதான். கிளம்பி போயிட்டாங்க.
அடுத்த நாள் காலை 11 மணி. இன்னொரு கூட்டம்.
அவங்க வேலை இன்னும் முடியல.
தலைவர் கேக்குறாரு - "ஏன்?"
அவங்க சொல்றாங்க - "நேத்து சாயங்காலம் சும்மா வெளியே போனா நல்லாயிருக்குமேன்னு நான் சொன்னேன். சத்யாதான் சரி, போயிட்டு வா. நாளைக்கு வேலை செய்தா போதும். ஒண்ணும் பிரச்சினையில்லேன்னு என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாரு. இல்லேன்னா நான் ராத்திரி முழுக்க உக்காந்து இந்த வேலையை முடிச்சிருப்பேன்".
நினைச்சி பாருங்க. என் நிலைமை எப்படியிருக்கும்னு. தலைவர் அந்த கூட்டத்தில் எதுவுமே கேக்கலை. அதற்குப் பிறகும். கேள்வி கேட்டிருந்தால் பதில் சொல்லிட்டு நிம்மதியாயிருப்பேன் - அதைக் கேட்காததினால், அடுத்த ஒரு வாரம் வரைக்கும் தேவையில்லாத மனக்கஷ்டம். அந்த நிறுவனத்திலிருந்து கிளம்பறத்துக்கு அந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய காரணம்.
அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. (இப்படி சொன்னா, கொசுவத்தி முடிஞ்சி நிகழ்காலத்துக்கு வந்துட்டோம்னு அர்த்தம்).
********
இந்தியாவில் எங்க அலுவலகத்தில், ஆளெடுக்கும் பணியிலிருக்கும் ஒருவர் என்னிடம் -
"சத்யா, உங்க குழுவுக்கு ஆள் ரெண்டு பேர் வேணும்னு கேட்டிருக்கீங்க. யார், எப்படிப்பட்ட ஆள் வேணும்?"
நான் - " வேலையே செய்யத் தெரியலேன்னாக்கூட பரவாயில்லை. எனக்கு ஆம்பளைங்கதான் வேணும். பொண்ணுங்களே வேணாம்."
அவர் - "ஏன், பொண்ணுங்க மேலே அவ்ளோ வெறுப்பா?"
நான் - "உங்களுக்கு தமிழ் தெரியாது. தெரிஞ்சிருந்தா நாளைக்கு பூச்சாண்டியை படிங்கன்னு சொல்லியிருப்பேன்".
******
9 comments:
same blood...
மனசிலே வச்சிக்கிறேன்
ம்ம்ம்........
அண்ணே : எல்லாரையும் அப்படி சொல்ல முடியாதுள்ள....
பெரும்பாலும் அப்படித் தாங்க. பெண்மணி தலைவருங்கிட்ட பேசுறது கூட கடினமுங்க
கருத்து சொல்லாம எஸ்கேப் ஆகிக்கிறேன் ச்சின்னப்பையன்.. :)))
டாய்.. இங்க ஒருத்தம் பொம்பிளைகளை குற சொல்லிட்டான்.. உடாதீங்க.. ஓடியாங்க ஓடியாங்க..
(நல்லவேளை இப்போல்லாம் உங்க கடைக்கு கூட்டம் அவ்வளவா வர்றதில்லை. :-)))))
kuthunga ejaman kuthunga intha ponugaley ippadi thaaan....same blodddddddddddddd
:)
Post a Comment