Thursday, September 2, 2010

ஒரே ஒரு நிமிடம் ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்காக ஒதுக்கமுடியுமா?

ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களே சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி. அவர்கள் கஷ்டமே எங்கள் கஷ்டம். ஊரில், வீட்டினருக்கு தெரியாத எங்களுடைய கஷ்ட நஷ்டங்கள், இங்கிருப்பவர்களுக்கு தெரியும்.


பக்கத்தில் இருக்கும் ஒரு சகோதரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதயத்தில் சிறு பிரச்சினை. ஒரு வருடத்தில் அந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறினாலும், அவ்வப்போது அக்குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பல்வேறு பரிசோதனைக்கு ஆளாக்குகிறார்கள்.


வயதானவர்களுக்கே அடிக்கடி மருத்துவமனை, பரிசோதனை என்றால் வேதனையாக இருக்கும். இதுவோ சின்னஞ்சிறு குழந்தை. வெளியில் சிரித்துக் கொண்டு பேசினாலும், அந்தக் குழந்தையின் பெற்றோர் மனதுக்குள் படும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மருத்துவ ரீதியாகவோ பண ரீதியாகவோ இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. உணர்வு ரீதியாக ஆதரவு தர மட்டும் எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம்.


ஒரு முறை எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்தபோதும் சரி, அதற்குப் பிறகும் எப்போது கோயிலுக்குப் போனாலும், கடவுளிடம் எதுவும் கேட்காமல், சும்மா அவரை வேடிக்கை பார்த்துவிட்டு வருவது என் வழக்கம். இப்போது இந்த சின்னஞ்சிறு குழந்தையின் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.


அதே நோக்கத்துடன் உங்களுக்கும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடிந்தால், இந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.


எல்லோரும் (அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்சவங்க!) இன்புற்று இருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

மிக்க நன்றி.

16 comments:

Unmaivirumpi September 2, 2010 at 2:35 PM  

கேள்விபட்டது முதல் மனதில் ஒரு இறுக்கம், கவலையும் கூட, நல்ல மனம் படைத்த அந்த பெற்றோர்களுக்காக, ஆண்டவன் கண்டிப்பாக சீக்கிரமே அந்த குழந்தைக்கு பூரண குணமளிப்பான், இதுவே என் பிராத்தனையும் கூட

azhagan,  September 2, 2010 at 2:59 PM  

Our prayers for the child and the family. I don't know where they are, but please tell them to consult either Madras medical mission or Frontier lifeline-- Dr.K.M.Cherian both hospitals are in mogappair, chennai, both are reputed in paediatric cardiology. Dr.Cherian has done over 10,000 cardiac surgeries(years ago).

Anonymous,  September 2, 2010 at 3:03 PM  

Our prayers for a speedy recovery. T

பரிசல்காரன் September 2, 2010 at 3:09 PM  

எனது ப்ரார்த்தனைகள் சத்யா.

விரைவில் குணமடைந்து உங்கள் மடியில் உட்கார்ந்து விளையாடும் அந்தக் குழந்தை.

sriram September 2, 2010 at 4:47 PM  

கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் - இங்க நல்ல Medical Care இருக்கு, Medical Insurance இருப்பதினால் செலவும் கட்டுக்குள் இருக்கும், அனைத்துக்கும் மேல பிரார்த்தனை பண்ண நாமெல்லாம் இருக்கோம். வேறென்ன வேணும் சத்யா - எல்லாம் சரியாகிடும். இந்த மாதிரி நேரத்திலதான் - M S அம்மாவின் குறை ஒன்றும் இல்லை கண்ணா பாடல் ரொம்ப துணையா இருக்கும். கேளுங்க.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Vadamally September 3, 2010 at 12:06 AM  

I will pray for this child to get well soon

முத்துலெட்சுமி/muthuletchumi September 3, 2010 at 2:54 AM  

பிராத்தனை செய்கிறேன்.
வாழ்க வளமுடன்

வித்யா September 3, 2010 at 4:51 AM  

கண்டிப்பாக.

ச்சின்னப் பையன் September 3, 2010 at 8:03 AM  

அனைவருக்கும் மிக்க நன்றி.
அழகன் -> நாங்க இருப்பது அமெரிக்காவில்.

ஆர்.கே.சதீஷ்குமார் September 3, 2010 at 8:46 AM  

பூஜா மேட்டரோன்னு நினைச்சேன்.அந்த குழந்தைக்கு நிச்சயம் கடவுள் ஆசி கிட்டும்

Mahesh September 3, 2010 at 10:25 AM  

எனது / எமது பிரார்த்தனைகளும்...

அறிவிலி September 3, 2010 at 10:53 AM  

குழநதை நிச்சயம் விரைவில் குணமாகி சஹானாவுடன் விளையாடும். மேலும் பல்லாண்டு காலம் எல்லா வளங்களும் பெற்று வாழும்.இதற்காகவே நிச்சயம் ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன் அருணா September 5, 2010 at 8:26 AM  

என் பிரர்த்தனைகளும்.

Anonymous,  September 7, 2010 at 1:37 PM  

குழந்தை விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்

raja - chennai

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP