Monday, August 23, 2010

ரொம்ப நாள் கழிச்சி ஒரு நொறுக்ஸ்!


நான் வீட்டுலே இருக்கும்போது, எப்போதும் ஐபாட்லே பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். அதனால் எந்த வேலை செய்வதற்கும் எவ்ளோ நேரமாகும்னு சொல்லாமே, எவ்ளோ பாட்டு ஆகும்னு சொல்லலாம். அதாவது:



ஓய்வறைக்கு - 3 பாட்டு (+25 பக்கங்கள்)


குளிப்பதற்கு - 3 பாட்டு


சாப்பிடும்போது - 2 பாட்டு


அலுவலகம் போவதற்கு - 2 பாட்டு


வீட்டுக்கு வருவதற்கு - 1 பாட்டு



இனிமேதான் கவனமா படிக்கணும்.

தங்கமணி பேச ஆரம்பித்தால் - 150 பாட்டு


நான் பேசணும்னா - ஒரு பாட்டு முடிஞ்சி அடுத்த பாட்டு ஆரம்பிப்பதற்குள்.

*****

நம்ம சென்னையில் தனியார் GPS தயாரிக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்னு ஒரு ச்சின்ன கற்பனை.



முதல்லே ‘அவர்’ தயாரிக்கிறாரு. ‘அவர்’ யாருன்னு இதை படிச்சாலே உங்களுக்கு தெரிஞ்சிடும். மத்தவங்க தயாரிப்பு அடுத்தடுத்த இடுகைகளில் வரும்.



1. இந்த தெரு எங்கே போகும்னு நான் இப்ப சொல்லமாட்டேன். சொன்னா உங்களுக்கு இப்பவே தெரிஞ்சிடும்.



2. இந்த தெருவுலே மொத்தம் 500 வீடு. மொத்த ஆட்கள் 300 பேர் ஆண்கள். 200 பேர் பெண்கள். அதில் என்னோட மாமா பொண்ணும் ஒண்ணு. ம்க்கும்.



3. இந்த தெருவுலே கும்பலா இருக்கும். நமக்கு யார் கூடவும் போக பிடிக்காது. தனியாத்தான் போகணும். அதனால் அந்த தெருவுலே போவோம். பத்தாயிரம் செலவானாலும் பரவாயில்லை.



4. இந்த தெருவுலே போறதா அந்த தெருவுலே போறதான்னு எனக்கு தெரியல. நடுலே நில்லுங்க. யாரு எந்தப்பக்கம் கூப்பிடறாங்களோ, அந்த பக்கம் போகலாம்.



5. பாரிமுனையிலிருந்து தாம்பரம் செல்லும்போது வழியில் சம்மந்தமில்லாமே கோயம்பேடு ஏன் வர்றோம்னு பாக்குறீங்களா? இதோ இடது பக்கம் தெரியுதே, அந்த கல்யாண மண்டபத்தைதான் படுபாவிப் பசங்க இடிக்க இருந்தாங்க. இதைப் பாக்கத்தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்.



6. இங்லிஷ்லே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - ஒன் வே. நீங்க தைரியமா இதே தெருவிலே போங்க. யாரு என்ன சொல்றாங்கன்னு பாத்துடலாம்.



*****



தாய்மொழியைப் போலவே ஆங்கிலத்திலும் சரளமாய் பேசிய சஹானா, சில நாட்களாய் (ஆங்கிலத்தில்) தட்டுத் தடுமாறி பேச ஆரம்பித்தார். என்னடா இது, Danburyக்கு வந்த சோதனைன்னு அவங்ககிட்டேயே அதற்கான காரணத்தை கேட்டோம். பிறகு, ஏண்டா அப்படி கேட்டோம்னு நொந்தோம்.



அவங்க சொன்னது இதுதான்.



நான் பள்ளியில் பேசறமாதிரி வீட்டிலேயும் ஆங்கிலத்தில் பேசினா, உங்களுக்கு புரியறதில்லை. அதனால், உங்களுக்கு புரியற மாதிரி யோசித்து பேசவேண்டியிருக்கு. அதுக்கு நேரமாகுது. அவ்ளோதான். ஓகேவா?



அவ்வ்வ்... எனக்கு ஆங்கிலம் தகராறுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சி போச்சு...



*****



என் தலையில் இருக்கிற ஆயிரக்கணக்கான முடிகளில் எந்த முடி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா, நான் எப்படி சொல்வேன்? அதே மாதிரிதான், என் ட்வீட்களும். இருந்தாலும் உங்களுக்காக சில இங்கே.



ரோஜா ரோஜா பாடலில் எவ்வளவு ரோஜான்னு எண்ணுகையில், வழியில் குறுக்கிட்ட ஒரு இரு-கால் ரோஜாவைப் பார்த்து எண்ணிக்கையை தவறவிட்டேன்



கூட்டத்திலே கோயில் புறா. யாரை இங்கு தேடுதம்மா" - கொய்யாலே. எங்கக்காவை யார்ரா அடிச்சி சாப்பிட்டது?..



தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி பேசினால், அவனவன் அலறி அடிச்சிக்கிட்டு ஓடுறான் - மூக்கைப் பொத்திக்கிட்டு. ஏன்னு தெரியல



நாளை மாலை 6 மணிக்கு 'நொந்திரன்' க்ளைமாக்ஸ் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழாவின் உருவான விழா! காணத் தவறாதீர்கள்!



*****



12 comments:

ILA (a) இளா August 23, 2010 at 9:43 PM  

இந்த வாரத்தோடு தூவானமும் நின்றுவிடும் என்று நம்புகிறேன்//
இன்னுமா விடலை...?

a August 23, 2010 at 10:08 PM  

வாங்க......... எங்க கொஞ்ச நாளா ஆள கானோம்.

Prathap Kumar S. August 23, 2010 at 11:52 PM  

//நான் பள்ளியில் பேசறமாதிரி வீட்டிலேயும் ஆங்கிலத்தில் பேசினா, உங்களுக்கு புரியறதில்லை. //

இது தேவையா உங்களுக்கு...:))

டவிட்டர் எல்லாமே கலக்கல் வாத்யாரே...

இந்த நொறுக்ஸ் என்ற தலைப்பை நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என் தளம் பேட்டன்ட் வாங்கி வச்சிருக்கு அதை அனுமதி மீறி உபயோகித்ததால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கம்
:))

Mahesh August 24, 2010 at 1:08 AM  

எல்லாப் பாட்டும் தங்கமணி பாடின பாட்டுகதானே ??? :)

Jackiesekar August 24, 2010 at 3:11 AM  

பிரிலியன்ட் சஹானா...

hubbalibalu August 24, 2010 at 3:55 AM  

நல்லா இருந்துச்சு நொறுக்ஸ். இதை இழுத்த அரைப் பாட்டு

Anonymous,  August 24, 2010 at 12:35 PM  

இதுவரை தங்கமணிகிட்ட பாட்டு வாங்குனீங்க.இப்ப சஹானாகிட்ட பல்பு வாங்குறிங்க.

பேஷ் பேஷ் நல்ல முன்னேற்றம்.

Thamira September 13, 2010 at 7:32 AM  

என் தலையில் இருக்கிற ஆயிரக்கணக்கான முடிகளில் எந்த முடி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு
//

இந்த மாதிரில்லாம் உதாரணம் சொல்ல உன்னாலதான் முடியும் தல..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP