நான் ரொம்ம்ம்ம்ப பிஸி!!!
முகு: இடுகையில் எங்கேயுமே முழுப்புள்ளியே கிடையாது. அதனால் நீங்களும் - மூச்சு விடாமே எஸ்.பி.பி பாட்டு பாடறா மாதிரி - முழு இடுகையையும் படிச்சிடுங்க.
*****
காலங்கார்த்தாலே எழுந்ததும்
என்னோட யாஹூவில்
மனைவியோட யாஹூவில்
எங்களோட ஹாட்மெயிலில்
மனைவிக்குத் தெரியாத என் ஜிமெயிலில்
எங்கள் நிறுவன மெயிலில்
வேலை பார்க்கும் க்ளையண்ட் மெயிலில்
இப்படி எல்லாத்துலேயும் ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பாத்துட்டு
செய்திகளுக்காக
தட்ஸ்தமிழ்
தினமலர்
தினமணி
யாஹூ தமிழ்
மைக்ரோசாஃப்ட் தமிழ்
சி என் என்
இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் பாத்துட்டு
அலுவலகம் வந்தபிறகு
இந்தியாவில் எங்கள் வீடு
மாமியார் வீடு
யாராவது நண்பர்கள் வீடு
ஏதாவது ஒரு ராங் நம்பர்
இப்படி எல்லோருக்கும் தொலைபேசி எல்லார் நலனையும் விசாரிச்சிட்டு
ரீடரில் இருக்கோ இல்லையோ ஒரு தடவை
இட்லிவடை
சாரு
ஜெயமோகன்
பாரா
எஸ்ரா
லக்கிலுக்
இங்கேயெல்லாம் ஒரு தடவை போய் தரிசனம் செய்துட்டு
நண்பர்களைத் தேடி
முதல் மாடி
ரெண்டாவது மாடி
மூணாவது மாடி
நாலாவது மாடி
ஆக மாடிமாடியா ஏறி இறங்கி மொக்கை போட்டுட்டு
இருக்கையில் வந்து உக்காந்தவுடன்,
சுடோகு
சதுரங்கம்
கோல்ஃப்
சாலிடைய்ர் (solitaire)
ஃப்ரீசெல் (freecell)
ப்ரிக் ப்ரேக் (brick break)
ஆகிய விளையாட்டுக்களை கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு
நடுநடுவே
தண்ணி
காபி
தண்ணி காபி
டீ
இதெல்லாம் குடிச்சிட்டு
சாயங்காலமா வீட்லே எல்லாரையும் கூட்டிட்டு
வால்மார்ட்
டார்கெட்
மால்
இந்திய மளிகைக் கடை
இப்படி எல்லா கடைகளுக்கும் போய் எதுவுமே வாங்காமே வெறும்னே பாத்துட்டு
வீட்டுக்கு வந்து சஹானாவுடன்
டோரா
பார்னி
எல்மோ
டாம் அண்ட் ஜெர்ரி
மேக்ஸ் அண்ட் ரூபி
ஆகிய எல்லாத்தையும் பாத்துட்டு
அக்கடான்னு படுத்தா போதும்னு இருக்கும்போது, புது இடுகைக்காக யோசிக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு?
*****
27 comments:
அதான?!
:-)))
அதான், நான் அன்னைக்கே கேட்டேன்லே ?
இவ்வளவு பிசியா நீங்க இருந்தும் நீங்க இடுகை இடும் தொண்டை நிப்பாட்டம இருக்கிறதுக்கு... ரொம்ப நன்றி
இப்ப நாங்ககளும் உங்கள பார்த்து எப்படி ரொம்ப பிசியாகிறதுன்னு தெரிஞ்சு கிட்டோமும்..ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
:-)))))))))
நல்லா இருக்கு பாஸ்.
இவ்ளோ பிஸி ஒரு மனுசனுக்கு ஆகாதுப்பா :-)
ஹி ஹி ஹி
உண்மைலேயே பிஸியா இருப்பவன் இவ்ளோ தெளிவா ஒரு பதிவு போட முடியுமா??? :-)
நீங்க பிஸி இல்ல... புஸி..
உண்மைலேயே பிஸியா இருந்தா அது பிஸி...
இந்த மாதிரி பண்ணா அது புஸி... :-)
இப்பிடி ஒரு இடுகை போடனும்னு நான் நெனச்சு இருந்தேன்..
வாழ்த்துக்கள்
எப்படி இப்புடில்லாம் :))
ங்கொய்யால.. சான்ஸே இல்ல.. திருவிளையாடல் தனுஷ் மாதிரி மூச்சு விடாம படிச்சிட்டேன்
அட்டகாசம். நம்மக் கவலையையும் இப்படி அழகாச் சொல்ல முடியுமா?
அனுஜன்யா
ஒரு நாளைக்கு இம்புட்டு வேலை செய்றதுக்கே உங்களைப் பாராட்டணும்:)
ஜே.கே.ரீத்திஸை ஒரு நிமிசம் கூட நினைக்காமலா இவ்ளோ பிசியா நீங்க இருக்கீங்க?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்ம்ம்ம்.. அப்படியா
ஆஹா கவிதை கவிதை..
Ooooooooo.....then we are sitting ideallaa? why we are expecting you to write more...all for your good only...next to PARA...we are expecting you to enter into tamil film...tamil film looking for writer like you...(appaaaaaaaaa........)
வாங்க பழமைபேசி -> அதேதான்...
வாங்க ராகி ஐயா -> நன்றி...
வாங்க ஒரு காசு -> அதுக்குதான் இந்த பதிலு!!!!
வாங்க தமிழ்வாணன் -> ஹிஹி... நன்றிங்க...
வாங்க பிரேம்ஜி, சகோதரி வித்யா, டக்ளஸ், சரவணகுமரன், கிரி -> நன்றி...
வாங்க கடைக்குட்டி -> அவ்வ்வ்...
வாங்க சென்ஷி -> ஹாஹா.. முடியலியா???
வாங்க கார்க்கி -> நன்றி சகா...
வாங்க அனுஜன்யா, ராஜ நடராஜன், நசரேயன் -> நன்றி...
வாங்க ஆயில்ஸ் -> அவ்வ்வ்... தலய மறந்தாதானே நினைக்கறதுக்கு!!!
வாங்க ஆதி -> அவ்வ்வ். கவிதைன்னு நான் சொல்லவேயில்லையே!!!!
வாங்க ராஜ்குமார் -> அடடா... அடடா.. ரொம்ப புகழறீங்க.. எனக்கு கூச்சமாயிருக்கு... :-)))
ME THE 100TH FOLLOWER!
ME THE FIRST 100TH FOLLOWER
வாங்க xxxxxx -> நூறாவது போடணும்னே அந்த மாதிரி பேர் வெச்சிருக்கீங்களா???? மிக்க நன்றிண்ணே... :-)))
வாங்க xxxxxx -> நூறாவது போடணும்னே அந்த மாதிரி பேர் வெச்சிருக்கீங்களா???? மிக்க நன்றிண்ணே... :-)))
நூறாவது Followerக்கு என்னமோ பரிசு கிரிசுன்னு சொன்னமாதிரி நியாபகம்...
கவிதை அருமையாக வந்திருக்கிறது :-)
:)
Post a Comment