Tuesday, June 23, 2009

பதவி உயர்வு - அரை பக்கக் கதை

"இங்கே பாருங்க சுரேஷ். இது ஒரு மென்பொருள் நிறுவனம். இங்கே தொழிற்சங்கமெல்லாம் கிடையாது. நீங்களும் சங்கத் தலைவர் மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்க".

"இது என்ன சார் அநியாயமா இருக்கு. கூட வேலை பாக்குறவங்களுக்காக குரல் கொடுத்தா தலைவர்னு சொல்லிடறதா? அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? நம்ம குழுவில் இருக்கிற மாலா தன் திருமண நாளுக்காக லீவ் கேட்டப்போ, அதை நீங்க மறுத்துட்டீங்க. நானும் நம்ம வாராந்திர மீட்டிங்கில் எல்லார் எதிரிலேயும் அதை தட்டிக் கேட்டு - அவங்களுக்கு விடுப்பு வாங்கிக் கொடுத்தேன். அது தப்பா"?

"அந்த சமயத்தில் நம்ம ப்ராஜெக்ட் என்ன நிலைமையில் இருந்துதுன்னு உங்களுக்குத் தெரியும். டெலிவரி ரெண்டு நாள் தள்ளிப் போனாக்கூட, க்ளையண்ட் நம்மை குதறிடுவான்னும் உங்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும்கூட நீங்க அவங்களுக்காக பரிஞ்சு பேசினது நல்லாயில்லே".

"எனக்கு என் நண்பர்கள்தான் முக்கியம். அவங்களுக்காக நான் யாரை வேணா எதிர்த்துக் கேள்வி கேப்பேன். நீங்க என்னை தடுக்க முடியாது".

"சரி. அதைக்கூட மன்னிச்சி விட்டுடலாம். ஆனா நீங்களே அடிக்கடி சொல்லாமே மட்டம் போட்டுடறீங்க. அதுக்கு என்ன சொல்றீங்க"?

"இருக்கற லீவைத்தானே எடுக்கறேன்? அடுத்த நாள் வந்து எல்லா வேலைகளையும் விரைவா முடிச்சி கொடுத்திருக்கேனே"?

"உங்க வேலைத் திறமையை பார்த்து, உங்களையே இந்த ப்ராஜெக்டின் மேனேஜராக பதவி உயர்வு செய்யணும்னு இப்பத்தான் நம்ம கம்பெனி தலைவரை பாத்து சொல்லிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா, இப்படி பேசறீங்க"...

*****

"ஏம்மா மாலா. நாளைக்கு வெறும் உங்க பிறந்த நாள்தானே? நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய் மறுபடி ஒருதடவை பொறக்கப் போறதில்லையே? அப்புறம் எதுக்கு லீவ்? ஒரு மணி நேரம் பர்மிஷன் தர்றேன். கோயிலுக்கு போணும்னா போயிட்டு, நேரா ஆபீசுக்கு வந்துடுங்க. நிறைய வேலை இருக்கு".

மேனேஜர் சுரேஷின் காட்டுக் கத்தல், மூடப்பட்ட அவரது அறையிலிருந்து தெளிவாக கேட்கிறது.

*****

22 comments:

நர்சிம் June 23, 2009 at 10:28 PM  

கலக்கல் ச்ப்பையா.

Mahesh June 24, 2009 at 12:12 AM  

அது சரி....

விஜய் ஆனந்த் June 24, 2009 at 12:23 AM  

:-)))...

வாழ்க்கை ஒரு வட்டம்...

வால்பையன் June 24, 2009 at 1:11 AM  

நீங்களும் ஒருநாள் சுரேஷாக போறிங்க!

வால்பையன் June 24, 2009 at 1:16 AM  

நர்சிம் said...
கலக்கல் ச்ப்பையா.//

வண்டி ஏன் ஒரே ட்ராக்கிலேயே போகுது!

மங்களூர் சிவா June 24, 2009 at 3:19 AM  

திருமணமும் பிறந்தநாளும் முக்கியத்துவத்தில் ஒன்றில்லையே.???

மங்களூர் சிவா June 24, 2009 at 3:21 AM  

திருமண நாளா ஓக்கே ஓக்கே
:)))))))))))))))

வெண்பூ June 24, 2009 at 7:01 AM  

அருமையான கதை ச்சின்னப்பையன்.. உண்மையை அப்படியே எழுதி இருக்கீங்க..

Thamira June 24, 2009 at 7:38 AM  

ஒங்க கதை மாதிரியே இருக்குது..

கடைக்குட்டி June 24, 2009 at 9:54 AM  

ச்சே..

இத இத..

இந்த மாதிரி கடைசி வரியில அதிர்வு ஏற்படுத்துறா மாதிரி நாலு குட்டிக் கத போட்டாலும் இந்த ரேஞ்சுல இல்லயே..

பொறாமைய இருக்குதுங்கோவ்..

(என் குட்டிக் கதைகளை நேரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒரு வாரத்துக்குள் படித்து விட்டு சொல்லவும் :-)

சின்னப் பையன் June 24, 2009 at 11:09 AM  

வாங்க நர்சிம், பரிசல், சிபி, மகேஷ், விஜய், ரமேஷ் -> ஆஹா... பெரிய்ய தலைகள்லாம் ஒண்ணா வந்திருக்கீக.. நன்றி...

வாங்க சகோ வித்யா, வால், சிவா, வெண்பூ, ஆதி -> ஹிஹி.. இது நானில்லைங்கோ....

வாங்க கடைக்குட்டி, சிவக்குமரன், ராகி ஐயா, நசரேயன் -> நன்றி...

Unknown June 24, 2009 at 11:10 AM  

it is not looking like story....this looks like your part of autobiography.

mayavi June 24, 2009 at 11:16 AM  

நல்ல கதை.. எல்லா எடத்துலயும் இது தான் நடக்குது

Unknown June 24, 2009 at 6:34 PM  

நல்ல கதை..

வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல..

ஊர்சுற்றி July 5, 2009 at 12:01 PM  

நல்லாயிருக்கு!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP