Monday, June 8, 2009

கணவனிடம் மனைவி அன்பா பேசினா????

மனைவி: என்னங்க, எப்ப பாத்தாலும் ஆபீஸ் வேலையாவே இருக்கீங்க. இன்னிக்கு ஒரு நாள், கொஞ்ச நேரம் என்கிட்டே பேசுங்களேன். நாம ரெண்டு பேரும் உக்காந்து பேசியே எவ்வளவு நாளாயிடுச்சு?

கணவன்: பேசறதுக்கு விஷயம் ஒண்ணுமேயில்லையே. நான் கொஞ்சம் வேலையா இருக்கேம்மா.

மனைவி: எப்ப கேட்டாலும் இப்படியே சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் ஃபோன் பண்ணி என்கிட்டே பேசிக்கிட்டேயிருப்பீங்க. இப்ப அந்த மாதிரியெல்லாம் இல்லே. ஒரு தடவை நான் ஆபீஸுக்கு ஃபோன் போட்டபோது - ராங் நம்பர்னு சொல்லி வெச்சிட்டீங்க.

கணவன்: அது ஆபீஸ் டென்ஷன்லே சொன்னதும்மா. சரி சொல்லு. என்ன பேசணும் இப்போ.

மனைவி: நம்ம பக்கத்து வீட்டுலே அந்தம்மா என்ன பண்ணாங்கன்னு தெரியுமா... அது....

கணவன்: இரு இரு... எனக்கு இந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு வம்பெல்லாம் வேணாம். வேற ஏதாவது பேசு.

மனைவி: சரி. புதுசா வந்திருக்கிற விஷால் படம் இணையத்துலே பாத்தேன். அதோட கதை என்னன்னா...

கணவன்: வெயிட். தமிழ் படத்துக் கதையெல்லாம் சொல்லி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. அதெல்லாம் ஒரே டெம்ப்ளேட் கதைதான். வேறே ஏதாவது இருக்கா பேசறதுக்கு?

மனைவி: நாளைக்கு என்ன சமைக்கட்டும்? பிஸி பேளா பாத் பண்ணி ரொம்ப நாளாச்சே, அது பண்ணட்டுமா?

கணவன்: சமையலைப் பத்தி என்கிட்டே கேக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லியிருக்கேன்? நெக்ஸ்ட்.. நெக்ஸ்ட்...

மனைவி: அடுத்த தடவை விஜயகாந்த் வந்தா, தமிழகத்துக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

கணவன்: அரசியல் பத்தி ஒண்ணுமே தெரியாத உன்கிட்டே நான் என்னத்த பேசறது? ஒரு நாள் உக்காந்து உனக்கு அரசியல் பாடம் எடுத்தாதான் சரியாயிருக்கும்.

மனைவி: சரி விடுங்க. உங்க ஆபீஸ்லே நடந்த ஏதாவது ஒரு தமாஷ் விஷயத்தைப் பத்தி சொல்லுங்களேன்.

கணவன்: என் ஆபீஸ் விஷயத்துலே தலையிடாதேன்னு சொன்னா கேக்கமாட்டியா? அதை விட்டுடு.

மனைவி: கோலங்கள் சீரியல்லே என்ன அநியாயம் பாத்தீங்களா? அவ...

கணவன்: அம்மா சாமி. ஆள விடு. சீரியல் கதை சொல்லி என்னை கொல்லாதே. சுவாரசியமா எதுவுமே பேசமாட்டியா?

மனைவி: சரி. நேத்து நான் தொலைபேசும்போது உங்கம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?

கணவன்: இதோ பாரு. யாரைப் பத்தி வேணா பேசு. எங்கம்மா பத்தி மட்டும் நீ பேச வேணாம். புரியுதா?

மனைவி: எதைப்பத்தியும் பேசாதே, பேசாதேன்னா நான் என்னதான் பேசறது? உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் அவங்க போடற மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே உக்காந்திருக்கீங்க. நான் பேசினா மட்டும் வந்துடுமே கோபம்...

கணவன்: @#%@%@

மனைவி: @$#@%%@###@@

26 comments:

Mahesh June 8, 2009 at 9:27 PM  

பேச்சு பேச்சா இருக்கற வரைக்கும் சரி :)

கோவி.கண்ணன் June 8, 2009 at 10:20 PM  

//மனைவி: எதைப்பத்தியும் பேசாதே, பேசாதேன்னா நான் என்னதான் பேசறது? உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் அவங்க போடற மொக்கையெல்லாம் தாங்கிக்கிட்டு சிரிச்சிக்கிட்டே உக்காந்திருக்கீங்க. நான் பேசினா மட்டும் வந்துடுமே கோபம்...//

திடிரென்று அணி மாறிய ச்சின்ன பையனுக்கு ஆண் வர்க்கத்தின் சார்பாக முதல் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
:)

வெட்டிப்பயல் June 8, 2009 at 10:33 PM  

டெம்ப்ளேட் நல்லா இருக்கு தல :)

சென்ஷி June 8, 2009 at 11:52 PM  

// Mahesh said...

பேச்சு பேச்சா இருக்கற வரைக்கும் சரி :)//

ரிப்பீட்டே :))

டெம்ப்ளேட் அழகு!

வெண்பூ June 9, 2009 at 12:07 AM  

//
"கணவனிடம் மனைவி அன்பா பேசினா????"
//

வாய்ப்பே இல்லாத விசயமாச்சேன்னு நெனச்சேன், ஹி..ஹி.. படிச்சப்புறம்தான் புரிஞ்சது.. சூப்பரு...

முரளிகண்ணன் June 9, 2009 at 12:15 AM  

ஃபாலோயர் நூறுக்கு வாழ்த்துக்கள்.

அதனால 200ன்னு மேல சேஞ் பண்ணிடுங்க

கடைக்குட்டி June 9, 2009 at 2:25 AM  

100 க்கு வாழ்த்துக்கள்...

இதெல்லமே உண்மைக் கதையா தல???

Eswari June 9, 2009 at 4:58 AM  

After marriage ipadi than irukuma?????

Rajkumar June 9, 2009 at 5:33 AM  

ஃபாலோயர் நூறுக்கு வாழ்த்துக்கள்.

Rajkumar June 9, 2009 at 5:34 AM  

வாழ்த்துக்கள்! FOR நூறுக்கு ஃபாலோயர்S (APPA VERY DIFFICULT TO CUT AND PASTE)

Rajkumar June 9, 2009 at 5:36 AM  

REGARDING THE "கணவனிடம் மனைவி அன்பா பேசினா????" ACHOOOOOO SAME FEELING

Rajkumar June 9, 2009 at 5:39 AM  

அப்படியா?

ஒரு லட்சம் ஹிட்களையும், more than நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ச்சின்னப் பையன் June 9, 2009 at 9:12 AM  

வாங்க மகேஷ்ஜி -> ஆமா ஆமா... நீங்க சொல்றது எனக்கு புரியுது.. புரியவேண்டியவங்களுக்கு புரியணுமே... :-)))

வாங்க கல்கி -> நன்றி...

வாங்க கோவிஜி -> அவ்வ்வ்... ப்பெரிய ப்பெரிய ஆளுங்க மட்டும் அணி மாறலாம்... ச்சின்னவன் நான் மாறக்கூடாதா???? ஆஆஆஆ...

வாங்க வெட்டி -> சரி சரி... புரியுது....

வாங்க அத்திரி, சென்ஷி, வெண்பூ -> நன்றி...

ச்சின்னப் பையன் June 9, 2009 at 9:14 AM  

வாங்க முரளிகண்ணன் அண்ணே, கடைக்குட்டி, ராஜ்குமார் -> நல்ல ஐடியா.. அதை 200ன்னு மாத்திடறேன்...

வாங்க ஈஸ்வரி -> அடடா... இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க... நூத்துலே நூத்திப்பத்து வீட்டுலே இப்படிதான் இருக்கும்.... :-)))

எம்.எம்.அப்துல்லா June 9, 2009 at 11:01 AM  

அண்ணே உங்களூக்கு 100 வந்துருச்சு, எனக்குதான் இன்னும் தேரல

:))

கலையரசன் June 9, 2009 at 11:43 AM  

சின்னப்பையன் பேர வச்சிகிட்டு, பெரிய விஷயத்தை காமெடியாக எழுதுறீங்க?
சூப்பருங்க.. நிஜமாகவே அப்படிதான் பேசுவேன் நானு!

மருதநாயகம் June 9, 2009 at 11:57 AM  

அல்டிமேட் தலைவா

நசரேயன் June 9, 2009 at 1:03 PM  

சர வெடியா இருக்கு

மங்களூர் சிவா June 13, 2009 at 3:14 AM  

/
கோவி.கண்ணன் said...

திடிரென்று அணி மாறிய ச்சின்ன பையனுக்கு ஆண் வர்க்கத்தின் சார்பாக முதல் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
:)
/

மறுக்கா கூவிக்கிறேன்!
:)

cheena (சீனா) June 14, 2009 at 9:53 PM  

எங்க வூட்ல நடக்கறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது ..... தங்கமணீயக் கூப்பிட்டுக் காமிச்சுட்டேன்

ஷாகுல் June 17, 2009 at 7:26 AM  

/மனைவி: எப்ப கேட்டாலும் இப்படியே சொல்லுங்க. கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் ஃபோன் பண்ணி என்கிட்டே பேசிக்கிட்டேயிருப்பீங்க. இப்ப அந்த மாதிரியெல்லாம் இல்லே. ஒரு தடவை நான் ஆபீஸுக்கு ஃபோன் போட்டபோது - ராங் நம்பர்னு சொல்லி வெச்சிட்டீங்க.//

கணவன் (மனதிற்க்குள்) : அப்போ உன் தங்கச்சி இன்னொரு லைன்ல இருந்தா

ஜெஸ்வந்தி June 19, 2009 at 4:32 AM  

பலவீட்டுக் கதையை அழகாச் சொல்லியிருக்கிறீர்கள்.

துளசி கோபால் June 24, 2009 at 10:10 AM  

ஹைய்யோ ஹைய்யோ:-)))))))))

பட்டிக்காட்டான்.. June 24, 2009 at 6:38 PM  

உங்க அரைப்பக்க கதை எதுவும் கதை மாதிரி தெரியலையே..
உண்மை சம்பவத்த கதைனு கத வுடுரிங்கலா..?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP