காலங்கார்த்தாலே எவ்ளோ டென்சன்?
காலங்கார்த்தாலே எழுந்து தயாராகி, போக்குவரத்தில் மாட்டி, அலுவலகத்திற்கு போய் அன்றைய வேலையை துவக்குறது எவ்ளோ கஷ்டம்னு வேலைக்குப் போற எல்லோருக்கும் தெரியும்.
இந்த அரைபக்கக் கதையிலேயும் ஒருத்தரு அலுவலகத்திற்கு போறாரு. என்ன பண்றாரு, எப்படி போறாருன்னு பாப்போம்.
சும்மா ஒரு ஜாலிக்காக - இங்கே அவரு பேசறத மட்டும் பாப்போம். மத்தவங்க பேசறதெல்லாம் உங்க கற்பனைக்கே.
*****
கார்த்தாலே சீக்கிரமா எழுப்பச் சொன்னேனே... ஏன் எழுப்பலே...
@#$@
ஏம்மா, சரியா 9 மணிக்கு ஆபீஸ்லே இருக்கணும்னு சொன்னேனே... என்னோட சாக்ஸ் எங்கே போச்சு??
@#$
இவ பால் குடிக்கலேன்னா பரவாயில்லே. முதல்லே ப்ரெட்டை கொடு. சாப்பிடட்டும்.
#$$$
வழியில் ஆயிரத்தெட்டு சிக்னல் வேறே. நான் வர்றேன்னு அவனுக்கு எப்படி தெரியுமோ? சரியா ரெட் போட்டுடுவான்.
@#%%
மீட்டிங்லே 5 நிமிஷம் லேட்டாச்சுன்னா, பிடிச்சு குதறிடுவாங்க. சாப்பாடு கட்ட லேட்டாச்சுன்னா விட்டுடு. நான் வெளியிலேயே சாப்பிட்டுக்கறேன்.
#%%@
இன்னிக்கு கார்த்தாலே சீட்டை விட்டு அங்கே இங்கே நகர முடியாது. அதனால் பக்கத்து பாங்க்லே இந்த செக்கை போட்டுடு.
@#%@
சொல்லிட்டே இருக்கேன்ல. நடுவிலே வெளியே வரமுடியாதுன்னு. மழை வந்தா என்ன, குடை பிடிச்சிண்டு போய் இவளை ஸ்கூல்லேந்து கூட்டிட்டு வா. முடியாதுன்னா இவ இன்னிக்கு ஸ்கூலுக்கு போகவே வேணாம்.
@#%@
நடுநடுலே ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ணாதே. மீட்டிங்லே பிஸியா இருப்பேன்.
(அலுவலகம் போகும் வழியில்)
சார்... முன்னாடி பாருங்க.. பச்சை போட்டு மூணு செகண்டாயிடுச்சு. வண்டிய எடுங்க... பப்பரப்பான்னு வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே...
@#$
ஏண்டா டேய். சொல்லிட்டு வந்துட்டியா வீட்லே?
(அலுவலகத்தில் - மணி 9.05)
அடேங்கப்பா.. காலையிலே வீட்லேந்து ஒருவழியா கிளம்பி ஆபீஸ் வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. இதுலே அஞ்சு நிமிஷம் லேட்டு வேறே. மக்கள்லாம் என்னை ஆளைக் காணோம்னு தேடறதுக்குள்ளே, வேலையை ஆரம்பிச்சிடுவோம்.
www.thamizmanam.com
*****
15 comments:
NIRAIYA EXPERIENCE POLA....
காலங்கார்த்தாலே எழுந்து தயாராகி, போக்குவரத்தில் மாட்டி, அலுவலகத்திற்கு போய் அன்றைய வேலையை துவக்குறது எவ்ளோ கஷ்டம்னு வேலைக்குப் போற எல்லோருக்கும் தெரியும்.
//
காலங்கார்த்தாலே எழுந்து தயாராகி, போக்குவரத்தில் மாட்டி, அலுவலகத்திற்கு போய் அன்றைய தமிழ்மணம் படிக்கத் துவக்குறது எவ்ளோ கஷ்டம்னு வேலைக்குப் போற எல்லோருக்கும் தெரியும்.
:)
ஹி..ஹி.. நீங்களும் நம்ம கேஸா?
வாங்கய்யா தோஸ்த்து நம்ம கஸ்டம் நமக்குதான் தெரியும்
புள்ளை ஸ்கூல் போலைனா என்ன ப்ளாகாம் இருக்க முடியுமா?
:))
@!#$%^&* )(*&^ %^& )(*&*%B )*%$%$ )(&^& $%#@$#$#$ !!!!
அது சரி....அடுத்தவங்க வீட்டுக்குள்ள நடக்குற அத்தனை விசயத்தையும் பின்னிப் பிளிந்திருக்கீங்க இல்லையா???
(இது சத்தியமா பக்கத்து வீட்டு மாட்டர் தானா???? அல்லது.........வேண்டாம்........... வேண்டாம்.........நமக்குள் இருக்கட்டும்.....)
நம்ம ஏரியாவுக்கும் ஒருக்க வந்துட்டு போங்க.......
www.safrasvfm.blogspot.com
:)
:)
:-)))
ஓகே.. ரைட்
WOW really nice story !!!! I really enjoyed reading !!!
எது தவறினும் எம் முதல் கடன் மொக்கை போட்டுக் கிடத்தலே.. சரிதானே குரு?
WE ARE EXPECTING MORE...FROM YOU
நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/
இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.
என்னண்ணே, இது தினமும் உங்க வீட்டுலதான் நடக்குதுன்னு அண்ணி சொல்லுறாங்க... உண்மையா?? :-)
Post a Comment