Tuesday, June 9, 2009

நொறுக்ஸ் - செவ்வாய் - 06/09/09

பின்தொடர்பவர்கள்

ரெண்டு நாளைக்கு முன்னாடி 90ஆ இருந்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை, திடீர்னு சரசரன்னு ஏறி இன்னிக்கு 102க்கு வந்துடுச்சு. நாம வழக்கமா போடற மொக்கையத்தானே போடறோம். அப்படியிருந்தும் எப்படி இப்படின்னு ராத்திரியெல்லாம் ஒரே சந்தேகம்.

எது எப்படியோ இருந்துட்டு போகட்டும், வந்தவங்களுக்கு நன்றி சொல்லலாம்னு முடிவு செய்து... பின்தொடரும் முதல் நண்பரிலிருந்து 102வது நண்பர் வரை அனைவருக்கும் - நன்றி நன்றி நன்றி. (மூணு தடவைதான் சொல்லியிருக்கேன். எல்லாரும் பி(ரி)ச்சி எடுத்துக்குங்கப்பா!).


*****

அலுவலகம்

ஒரு பாழடைஞ்ச கட்டிடத்தில் ஒரு ஓரத்தில் சும்மா(!!) உக்காந்திருந்தவனை, இன்னொரு பிஸியான கட்டிடத்துக்கு மாத்தினதோடில்லாமே, போற வர்றவங்க எல்லாரும் பாக்கறா மாதிரி நட்ட நடுவில் உக்கார வெச்சி, வேலையும் பாக்கச் சொன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு ஒரு பதினைஞ்சு நாளுக்கு முன்னால்தான் எனக்கு தெரிஞ்சுது. யாராச்சும் சொன்னாங்களான்னு கேக்காதீங்க. அப்படி உக்காந்தவன் நாந்தான்.


பள்ளியில் படிக்கும்போது பாடப்புத்தகத்தில் குமுதத்தை மறைச்சி வெச்சி படிச்சா மாதிரி, இப்போ அவுட்லுக்குக்கு பின்னாடி, தமிழ்மணத்தை திறந்து வெச்சி படிக்கவும், பூச்சாண்டி/ ப்ளாக்கரை திறந்து வெச்சி தட்டச்சவும் வேண்டியிருக்கு.


எதையாவது கிறுக்கணும்ற இந்த ஆர்வம் எப்போ குறையும்னு சொல்ல முடியாது. அப்படி குறையற வரைக்கும் கிறுக்கித்தான் பாப்போமேன்னு நானும் விசைப்பலகையை தட்டிக்கிட்டிருக்கேன். பாப்போம் எவ்ளோ தூரம் போகுதுன்னு.


*****

மென்பொருள் நிறுவனங்களில் மந்த நிலை எப்போ தீரும்னு தெரியல. போன மாசம் எங்க நிறுவனத்தில் (உலகம் முழுவதும்) 5% ஊதிய குறைப்பு செய்தவங்க, இந்த மாசம் முதல் (இந்தியாவில்) ஊழியர்களுக்கு அலுவலக வளாகத்தில் வண்டியை நிறுத்த கட்டணம் (பார்க்கிங் சார்ஜ்) வசூலிக்கிறார்களாம்.

இன்னும் கணிணியில் உட்கார்ந்து வலைமேய்வதற்கு, ப்ரௌசிங் செண்டர் போல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கேக்காமே இருந்தா சரின்னு பேசிக்கிட்டிருந்தபோது - இன்னிக்கு டி.சி.எஸ் (TCS) உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வு பற்றிய செய்தியை பார்த்தோம். என்னத்த சொல்ல?

இதுக்குத்தான் நான் அப்பவே நேரடியா ‘டைரக்டர்' (சினிமா டைரக்டர் இல்லே!!) ஆயிடறேன்னு சொன்னேன். வீட்லே கேக்க மாட்டேன்றாங்க.

*****

அந்த மூணு வார்த்தைகள் - ஒரு சிறிய கதை

என் மனதை கவர்ந்த அவகிட்டே கொடுப்பதற்காக ஒரு கடிதத்தை எழுதி வெச்சிக்கிட்டு, ஒரு வாரமா முயற்சி பண்றேன். எப்பவும் வீட்லே யாராவது ஒருத்தர் அவகூடவே இருக்கறதால், அவளை தனியா சந்திக்கவே முடியல. அதிசயமா ஒரு தடவை அப்படி அவ தனியா வந்தப்போ, இந்த கடிதத்தைக் கொடுக்க எனக்கு தைரியம் வரலை.

மனசுலே இருக்கறதை அப்படியே பக்கம்பக்கமா கொட்டிடலாம்னுதான் முதல்லே நினைச்சேன். ஆனா, எல்லோரும் சொல்லும் அந்த மூணு வார்த்தைகளை மட்டும் சொன்னால் போதும் - அதுவே 'நச்'சுன்னு இருக்கும்னு முடிவு பண்ணி - கூடுதல் எஃபெக்டுக்காக மேலும் ஒரு வார்த்தையைக் கூட்டி கடிதத்தை எழுதி முடிச்சிட்டேன்.

கடிதத்தை பார்த்தபிறகு அவ என்ன சொல்வாளோன்னு பயமா இருந்தாலும், அதை கொடுக்காமே இருந்தா என் நிம்மதி போயிடும்ற நிலை வந்ததால் இன்னிக்கு எப்படியாவது கொடுத்திடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

அதோ அங்கே அவ தனியா வர்றா. இதைவிட்டா நல்லா சான்ஸ் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. சுத்திமுத்தி யாராவது இருக்காங்களான்னு ஒரு தடவை பாக்குறேன். நல்லவேளை யாருமில்லை.

எதுக்கும் ஒரு தடவை என் கடிதத்தை எடுத்து ஏதாவது எழுத்துப்பிழை இருக்கான்னு பாக்கறேன். கடித மேட்டரை ஒரு தடவை சொல்லி பாத்துக்கறேன்.

"ங்கொய்யாலே. வரவர சாப்பாடே சரியில்லே".


*****

19 comments:

பழமைபேசி June 9, 2009 at 9:36 PM  

//இன்னிக்கு 102க்கு வந்துடுச்சு.//

இதைப் பொய்யாக்குறேம் பாருங்க சித்த நேரத்துல...

Mahesh June 9, 2009 at 9:41 PM  

ங்கொய்யால... வரவர உங்க ரவுசு தாங்கலை.. :)))))))))))))

கோவி.கண்ணன் June 9, 2009 at 9:53 PM  

//இதுக்குத்தான் நான் அப்பவே நேரடியா ‘டைரக்டர்' (சினிமா டைரக்டர் இல்லே!!) ஆயிடறேன்னு சொன்னேன். வீட்லே கேக்க மாட்டேன்றாங்க.
//

:)

//Mahesh said...
ங்கொய்யால... வரவர உங்க ரவுசு தாங்கலை.. :)))))))))))))
//

ரிப்பீட்ட்டே......

Venkatesh Kumaravel June 9, 2009 at 11:57 PM  

Congrats-nga.. 104 now! :)
Keep up the great work! :D

வால்பையன் June 10, 2009 at 12:27 AM  

கதை எனக்கு புரியல!

Unknown June 10, 2009 at 1:10 AM  

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

கடைக்குட்டி June 10, 2009 at 7:07 AM  

104 .. வாழ்த்துக்கள்..

ரெசஷன்ற பேர்ல இவனுங்க பண்ர அடாவடி.. யப்பா...

அந்த நேரத்துல ஃப்ரெஷ்ஷரா வெளில வர்ற நாங்க வடிவேல் ஸ்டைல்ல சொன்னா

“ரொம்ப பாவம்ல”

சின்னப் பையன் June 10, 2009 at 9:21 AM  

வாங்க பழமைபேசி அண்ணே, மகேஷ்ஜி, கண்ணன் அண்ணே, வெங்கிராஜா -> நன்றி...

வாங்க வால் -> அவ்வ். இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கணுமோ....

காதலியிடம் ஐ லவ் யூ லெட்டர் கொடுக்கறா மாதிரி இருக்கும் ஆனா அவரு கடிதத்தை கொடுப்பதோ மனைவியிடம்...

வாங்க தமிழினி -> பாக்குறேன்...

வாங்க கடைக்குட்டி -> ரொம்ப கஷ்டம்தாங்க நமக்கு...

Thamira June 10, 2009 at 1:06 PM  

குட்டிக்கதை கலக்கல் குரு.! (கொஞ்சம் ஓவராத்தான் பெண்டு நிமித்திட்டாங்களோ ஆப்பிஸ்ல.. ஆளயே காணோமே)

அப்புறம்.. ஆனாலும் என்னோட ஃபாலோயர் மீட்டர் ரொம்ப ஸ்பீடு தல.. ஆமை, நத்தையை விட ஸ்பீடுன்னா பாத்துக்கங்களேன்.!

நசரேயன் June 10, 2009 at 1:50 PM  

//"ங்கொய்யாலே. வரவர சாப்பாடே சரியில்லே".//
உங்க கஷ்டம் எனக்கு புரியுது, நான் வெளிய சொல்லலை நீங்க சொல்லிட்டீங்க

Unknown June 11, 2009 at 8:41 AM  

1st :-)
2nd :-(
3rd :-) :-) :-) :-)

Unknown June 11, 2009 at 8:51 AM  

comment test...comment test 123

வெண்பூ June 11, 2009 at 11:36 AM  

கர கர மொறு மொறு நொறுக்ஸ்.. கலக்கல் ச்சின்னப்பையன்

மங்களூர் சிவா June 13, 2009 at 2:37 AM  

ஆபீஸ் விசயத்துக்கு
:((

/
"ங்கொய்யாலே. வரவர சாப்பாடே சரியில்லே".
/

ROTFL
:))))))))

cheena (சீனா) June 14, 2009 at 9:50 PM  

நொற்ங்கத் தின்னால் நூறு வயது வாழலாம் - அருமையான நொறுக்ஸ் - வாழ்க ச்ச்சின்னப்பையன்

நானு தொடர்கிறேனா - இல்லன்னா - தொடர்ந்துடறேன்

எம்.எம்.அப்துல்லா June 14, 2009 at 10:16 PM  

ங்கொய்யால நல்லாத்தாண்ணே எழுதுற

:)))

VIKNESHWARAN ADAKKALAM June 15, 2009 at 6:57 AM  

சாப்பாடு நல்லா இல்லைனு சொல்றதுக்கும், மனைவியிடம் லெட்டர் கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு... புரியலையே

மந்திரன் June 24, 2009 at 9:55 AM  

starting எல்லாம் நல்லத்தான் இருக்கு . ஆனால் finishing ரொம்ப குழப்பமா இருக்கு ..
எதோ சொல்ல வரீங்க ...புரியுது அனல் புரியல

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP