Monday, June 22, 2009

கடையோட மாப்பிள்ளை - இறுதிப் பகுதி!!!

முன்குறிப்பு : ரொம்ப நாளாயிடுச்சு போன பகுதி போட்டு. அதனால, இந்த நாடகத்தை மறந்தவங்க, 'நாடகம் மாதிரி'ன்ற லேபிளை புடிச்சு - முன்னாடி போட்ட பகுதிகளை படிச்சிடுங்க.

******

மா.அப்பா: மாது, உங்கம்மா எப்போ கோயிலுக்கு வந்தாலும் அந்த மண்டபத்துலேதான் உக்காந்திருப்பா. வா. அங்கே போய் பாக்கலாம்... டேய். அங்கே பாரு அந்த தூணுக்குப் பக்கத்திலே... அது உங்க அம்மாதானே?

மாது : அப்பா. அது கோயில் தூண். அதுக்குப் பக்கத்துலே இருக்கறது கல் யானை. உனக்கு யானைக்கும் அம்மாவுக்கும் வித்தியாசமே தெரியல.

மா.அப்பா: டேய். யானை எந்த காலத்துலேடா புடவை கட்டிச்சு? அது உங்கம்மாவேதான்... வா போய் பக்கத்துலே பாக்கலாம்.

மாது : பக்கத்துலே நீ போய் பாத்துட்டு, அவங்க அம்மாவாயிருந்தா என்னைக் கூப்பிடு. அது அம்மாவா மட்டும் இல்லேன்னா, அவங்களே போலீஸைக் கூப்பிட்டு உன்னை ஈவ்டீஸிங்லே உள்ளே போட்டுடுவாங்க.

(பக்கத்தில் போகிறார்கள்)

மாது : அம்மா. என்னம்மா இங்கே வந்து உக்காந்திருக்கே. வா வீட்டுக்குப் போகலாம்.

மா.அம்மா : முடியாது. நீதான் ஜானகிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னியே. என்கூட பேசாதே.

மாது : நாந்தான் அப்புறமா ஓகே சொல்லிட்டேனே. இப்போ அவதானே என்னை வேணாம்னுட்டா. நியாயமா பாத்தா, அவங்கம்மாதான் ஓடிப்போயிருக்கணும். நீ தப்பா ஓடி வந்துட்டே.

மா.அம்மா : சரி. இப்ப கேக்கறேன். உனக்கு இந்த கல்யாணத்துலே இஷ்டமா? ஜானகியை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.

மாது : என்னை வேணாம்னு சொன்னவ கிட்டே, எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு மறுபடி போய் கேப்பேன்?

மா.அம்மா : அதுக்காக எந்த மூஞ்சியையும் தேடவேண்டாம். இதே மூஞ்சியை வெச்சிக்கிட்டு கேட்டாலே போதும். கொஞ்சம் அந்தப்பக்கம் திரும்பிக்கிட்டு சத்தம் போட்டு - என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேளு. என்ன நடக்குதுன்னு பாரு.

மாது : அம்மா. இதுக்குதான் அதிகமா தொலைக்காட்சி பாக்காதேன்னு சொன்னேன். இப்ப பாரு. கிழக்கு பக்கம் பாத்து நில்லு. சத்தமா கத்தி பேசுன்னு தத்துப்பித்துன்னு உளர்றே. அப்பா. வீட்டுக்குப் போனவுடனே, அம்மாவை நல்ல டாக்டர்கிட்டே காட்டணும்.

மா.அம்மா : டாக்டர்லாம் வேணாம்டா. அம்மா சொல்றத கேளுடா மாது. தயவு செஞ்சி ஒரு தடவை நான் சொன்னதை கத்தி சொல்லு.

மாது : சரி. கல்யாணம் ஆறவரைக்கும் எல்லா ஆம்பளைகளும் அம்மா சொல்றத கேட்டுத்தானே நடக்கறாங்க.

மா.அம்மா : டேய். அப்போ கல்யாணம் ஆனப்பிறகு என் பேச்சை கேக்கமாட்டியா?

மாது : என்னம்மா இப்படி சொல்லிட்டே.. உன் பேச்சை கேக்காமே என்னாலே இருக்க முடியுமா?

மா.அம்மா : அதானே பாத்தேன்.

மாது : ஆனா - உன் பேச்சைக் கேக்கறதுக்கு முன்னாடி - அப்படி கேக்கலாமான்னு ஜானகிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுவேன்.

மா.அம்மா : சரி என்னமோ பண்ணித் தொலை. இப்போதைக்கு நான் சொன்னதை சொல்லப்போறியா இல்லையா?

மாது : ஐயயோ சொல்லிடறேம்மா.. அப்போ வீட்டை விட்டுட்டு ஓடினமாதிரி இப்போ கோயிலை விட்டுட்டு ஓடிடாதே. என்னாலே கோயில் கோயிலா ஒவ்வொரு தூணுக்குப் பின்னாடியும் உன்னை தேடமுடியாது. பாக்கறவங்கல்லாம் இப்பவே என்னை தப்பா நினைக்கறாங்க.

மா.அம்மா : இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ்டா மாது...

மாது : சரி சரி... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ஜானகி...

ஜானகி: கண்டிப்பா பண்ணிக்கிறேன் அத்தான்...

(ஜானகி பக்கத்து தூண் மறைவிலிருந்து வெளியே வருகிறார்).

மாது : அட... நீயும்.. நீங்களும்... இங்கேதான் இருந்தீங்களா? எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு. அம்மா இப்படி கத்தல்லாம் சொல்ல மாட்டாங்களேன்னு.

ஜானகி: பரவாயில்லை. என்னை நீங்க நீன்னே கூப்பிடலாம். இதெல்லாம் உங்க அம்மாவோட ப்ளான் தான். என்னை சம்மதிக்க வெச்சதும் அவங்கதான்.

மாது : சரி. இன்னும் 20 - 30 தூண் இருக்கே. யாரெல்லாம் ஒளிஞ்சிருக்காங்க. எல்லாரையும் ஒரே தடவையில் வெளியே வந்துடச் சொல்லும்மா. என்னாலே திரும்பத் திரும்ப கத்த முடியாது.

மா.அம்மா : அவ்ளோ பேரெல்லாம் கிடையாதுடா. எல்லாம் ஜானகியோட அப்பா, அம்மா அப்புறம் நம்ம ஜோசியர் அவ்ளோதான்.

(எல்லோரும் வெளியே வருகின்றனர்).

மாது : அப்படா இவ்ளோ பேர்தானா? நான் கூட இந்த வாத்தியக்காரங்க, கல்யாணம் பண்ணி வைக்கிற ஐயரு இப்படி எல்லாரும் ஒளிஞ்சிருந்திருப்பாங்கன்னு நினைச்சேன்.

ஜா.அப்பா: மாப்ளே, இப்ப சொல்லுங்க. ஜானகிய கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதம்தானே?

ஜானகி: அப்பா, மறுபடி மறுபடி அவரை தொந்தரவு பண்ணாதீங்க. அவர்தான் அப்பவே சரி சொல்லிட்டாரே. ஒரு நல்ல முஹூர்த்தம் பாருங்க. சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடலாம்.

ஜா.அப்பா: இரும்மா. இன்னும் அந்த கண்டிஷனுக்கு மாப்பிள்ளை ஓகே சொல்லவேயில்லையே?

மாது : அது என்ன கண்டிஷன்?

ஜா.அப்பா: கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதமா மாதுவுக்கு?

மாது : இது என்ன புது கண்டிஷன்? இதுக்கெல்லாம் என்னாலே ஒத்துக்க முடியாது.

மா.அம்மா : மாது.. என்னடா இப்படி சொல்லிட்டே?

மாது : அம்மா. வீட்டோட மாப்பிள்ளையால்லாம் என்னாலே இருக்க முடியாது. வேணும்னா...

மா.அம்மா : வேணும்னா..

மாது : கடையோட மாப்பிள்ளையா இருந்துட்டு போறேன்.

ஹாஹாஹா...

(அனைவரும் சிரித்துக் கொண்டே கடவுளை வேண்டுவதற்கு கோயிலுக்குள் போகின்றனர்).

*******சுபம்*************

9 comments:

Mahesh June 22, 2009 at 11:40 PM  

மாஸ்டர்... ஒரு வயித்து வலி மாத்திரை பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்......

:)))))))))))))))))))))))))))))

Prabhu June 23, 2009 at 1:20 AM  

கிரேஸி மோகனுக்கு வேலை இல்லாமபோயிரும் போல இருக்கே.

கார்க்கிபவா June 23, 2009 at 7:23 AM  

மற்ற பகுதிகளை படிக்கவில்லை என்பதால்

சூப்பர் சகா

சின்னப் பையன் June 23, 2009 at 10:16 AM  

வாங்க மகேஷ்ஜி, சகோதரி வித்யா, பப்பு, ட்ரூத் -> பொறுமையா படிச்சதற்கு நன்றி...

வாங்க சகா -> அவ்வ்வ்...

Unknown June 23, 2009 at 12:46 PM  

really good...i enjoyed lot.

ஆயில்யன் June 23, 2009 at 10:50 PM  

//பக்கத்துலே நீ போய் பாத்துட்டு, அவங்க அம்மாவாயிருந்தா என்னைக் கூப்பிடு. அது அம்மாவா மட்டும் இல்லேன்னா, அவங்களே போலீஸைக் கூப்பிட்டு உன்னை ஈவ்டீஸிங்லே உள்ளே போட்டுடுவாங்க//

//ஆனா - உன் பேச்சைக் கேக்கறதுக்கு முன்னாடி - அப்படி கேக்கலாமான்னு ஜானகிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடுவேன்.
//

:))))))

karishna June 25, 2009 at 1:39 AM  

ரொம்ப நல்லா இருக்கு....பழய பகுதிகளை தேடி படிச்சேன் ..super..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP