Sunday, June 14, 2009

அடுத்த 32 கேள்விகள் என்னவாக இருக்கும்?

சமீப காலமாக, இணையத்தில் தொடர் விளையாட்டாக உலவிக் கொண்டிருப்பது - 32 கேள்வி பதில்கள்.


அந்த கேள்விகளை தயாரிச்சவரு அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்திருப்பார்னு நினைச்சிப் பார்த்தபோது, என் உடல் பயங்கரமாக சிலிர்த்தது. அப்புறம் பாத்தா, அது வேறே ஒண்ணுமில்லே - வீட்டு ஜன்னலிலிருந்து சாரல் அடிச்சிண்டிருந்தது. உடனே எல்லாத்தையும் மூடிட்டு, என் சொந்தக்கண் மற்றும் அறிவுக்கண்ணை மட்டும் திறந்து வெச்சிண்டு - கணிணியைப் பார்த்தேன்.


நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள மிகவும் முக்கியமான கேள்விகள் அந்த 32ல் பல இருந்தன. நம் நண்பர்கள் பலர் படு சீரியஸாக அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லியிருப்பதால், நான் அந்த கேள்விகளை அடையாளம் காட்டப்போவதில்லை. ஆனா, அதே மாதிரி கேள்விகள் பலவற்றை அதன் தயாரிப்பாளர் விட்டுட்டார்னு மட்டும் புரிஞ்சுது. அதனால், நானும் - மல்லாக்க, பக்கவாட்டில், தலைகுப்புற - எப்படியெல்லாமோ படுத்து யோசிச்சி, அடுத்த 32 கேள்விகளை தயார் செய்யலாம்னு பாத்தேன். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் எனக்கு தோணினது வெறும் பத்து மட்டுமே.


இவற்றையும் யாராவது தொடராக எண்ணிக்கொண்டு பதிலளிக்க ஆரம்பித்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

சரி.. கேள்விகளுக்குப் போகலாமா?

*****

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?

*****

24 comments:

cheena (சீனா) June 14, 2009 at 9:46 PM  

அறிவு பூர்வமான கேள்விகள் - அசட்டுத்தனமான பதில்கள் எதிர்பார்க்கலாம். தொடராக மாற்றும் எண்ணம் இல்லையாம் - பூச்சாண்டி காட்டும் சின்னப்பயலுகள இடுகைக்கெல்லாம் மறு மொழி போடுபவர்களில் அதிகம் மறுமொழி போட்டவர் - போடுபவர் - போடப்பொகிறவர் யார் ????????

SUREஷ் (பழனியிலிருந்து) June 14, 2009 at 10:11 PM  

தல.., மொக்கை கேள்விகள் கூட சிறந்த பதில்களைப் பெறுவதுண்டு.

சிறந்த கேள்விகள் கூட கேவலமான பதிலால் அவமானப் படுத்தப் பட்டதுண்டு. அதனால் அறிவுப் பூர்வமான, அசட்டுத்தனமான என்று தனியாக ஒன்றும் கிடையாது என்றே நான் நினைக்கிறேன்

Mahesh June 14, 2009 at 10:34 PM  

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

கோவி.கண்ணன் June 14, 2009 at 10:40 PM  

//சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?//

குளிக்க விருப்பமா குளிகாமல் இருக்க விருப்பமா ? என்று இருக்க வேண்டும், அதையும் பெண்களிடம் கேட்டால் விவகாரமாகிவிடும் !
:)

ஆயில்யன் June 14, 2009 at 10:48 PM  

//படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?///

நான் ரெண்டு ரெண்டு படியா தாவி தாவி ப்போவேன் அப்படின்னு பதிலை மட்டும் சொல்லி ஒரு பிட்ட போட்டா, நீங்களே என்னிய அடுத்து இந்த கேள்வி பதில்களை தொடரு சொல்லுவீங்கதானே...?
:))))))))))))))

விஜய் ஆனந்த் June 14, 2009 at 11:11 PM  

:-)))))))))))))).....

முடியல....

வெட்டிப்பயல் June 14, 2009 at 11:19 PM  

இதுக்கு பதில் பதிவு போட்டாச்சு தல...

இங்கே சொடுக்கவும்

சென்ஷி June 14, 2009 at 11:35 PM  

அய்யய்யோ! ஏங்க இப்படி பயமுறுத்துறீங்க :))))

வெட்டி வேற இதுக்கு பதில் கொடுத்துருக்காரு :)

சரவணகுமரன் June 15, 2009 at 12:19 AM  

நான் அப்பாலிக்கா வந்து இத பினிஷ் பண்ணுறேன்...

வெண்பூ June 15, 2009 at 12:59 AM  

எப்படி இப்படியெல்லாம்... வாரத்தை சிரிப்போட ஆரம்பிச்சதுக்கு நன்றி..

வடகரை வேலன் June 15, 2009 at 1:22 AM  

உங்க கேள்விகளும் நல்லா இருக்கு. அதுக்கு பாலாஜியோட பதில்களும் நல்லா இருக்கு.

மங்களூர் சிவா June 15, 2009 at 2:22 AM  

அருமை!
:)))

வெட்டி பதில்களும் மிக அருமை.

என் இதயம் பேசுகிறது June 15, 2009 at 5:08 AM  

\\அந்த கேள்விகளை தயாரிச்சவரு அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு யோசித்திருப்பார்னு நினைச்சிப் பார்த்தபோது\\

கேள்விய மட்டும் கேட்டா எப்புடி ? யார் பதில் சொல்லப்போறாரு, எப்படி பதில் சொன்னருங்கரதையும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்

ச்சின்னப் பையன் June 15, 2009 at 6:38 AM  

வாங்க சீனா ஐயா -> அவ்வ்வ்... பதிவு போட்ட சில மணித்துளிகளிலேயே நம்ம வெட்டி பதில்களை சொல்லிட்டாரு பாருங்க....

வாங்க சுரேஷ்ஜி -> நீங்க சொல்றது மிகச்சரி. நான் கேக்க வந்தது அந்த மாதிரி கேள்விகளால் ஏதாவது பயன் இருக்கான்னுதான்...

வாங்க மகேஷ்ஜி -> நன்றி..

வாங்க கண்ணன் அண்ணா -> அவ்வ்வ்... நான் வரலே இந்த விளையாட்டுக்கு.... :-)))

வாங்க ஆயில்ஸ் -> கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே!!!!!!

வாங்க விஜய் -> இதுக்கே முடியலேன்றீங்களே.... பின்னாடி ஒருத்தரு பதில் பதிவே போட்டுட்டாரு பாருங்க.... :-))

ச்சின்னப் பையன் June 15, 2009 at 6:42 AM  

வாங்க வெட்டி -> அவ்வ்வ்... என்னாலே முடியல...

வாங்க சென்ஷி -> யாருடா கேள்வி கேப்பாங்கன்னு ரெடியா இருந்தாருன்னு நினைக்கறேன் நம்ம வெட்டி!!!!!!!!!

வாங்க சரவணகுமரன் -> இத பார்றா... பதில் சொல்ல இன்னொருத்தரும் கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு....:-))))))))))0

வாங்க வெண்பூ, சகோதரி வித்யா, அண்ணாச்சி, சிவாஜி, சகா -> எல்லோருக்கும் நன்றி..

வாங்க என் இதயம் பேசுகிறது -> நம்ம வெட்டிதம்பி பதில் சொல்லிட்டாரு பாருங்க.... உரலும் மேலேயே இருக்கு....

கலையரசன் June 15, 2009 at 8:15 AM  

அடங்கமாட்டீங்க போல..
அந்த 32 கேள்வி பதில்
போயிடுச்சு.. அத வச்சி
காமெடி பன்னறத ஆரம்பிச்சிடாங்கையா!!

xxxxxx June 15, 2009 at 9:47 AM  

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?
YES - THAT IS MY IDENTITY.

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?
NEGATIVE THOUGHT PEOPLES

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?
ACHOOO...YESTERDAY ONLY I COUNTED TO PROVE THAT I REMOVED MY WISDOM TEETH
(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?
WHEN EVER I AM READING YOUR BLOG (ICEEEEEEEEEEEEEEEEEEE)

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?
50-50 MIXTURE

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?
WHEN I AM IN JOLLY MOOD TWO STEPS OTHER WISE SINGAM SINGLE STEP THAAN

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).
IDLI PODI


மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?
IT WILL KEEP ON MOVING FROM ONE FINGER TO OTHER

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?

LEFT SIDE....HMMMM FORM THAT SIDE ONLY I CAN CONTROL MY HAIR....OTHER WISE ALL WILL STAND IN 90 DEGREE

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
NILE BITTING IS VERY BAD HABIT. ONCE MY CLASS MISS BROKE MY FINGER FOR THAT. SINCE THEN I STOPPED DOING SO.


NAANGALUM SERIOUSAA ANSWER PANNUVOUM ILLA......

xxxxxx June 15, 2009 at 9:50 AM  

by the way...i am not xxxxxx...I am the 100th follower..aiya CP..why the name "100th follower" is not coming...though..I changed my name in all the place...PLEAZE HELP!

ஆதிமூலகிருஷ்ணன் June 15, 2009 at 10:49 AM  

அதான் 100 ஃபாலோயர்ஸ் ஆயாச்சுல்ல.. விளம்பரத்த மாத்துறது..

நசரேயன் June 15, 2009 at 11:35 AM  

கண்டிப்பா வரும் பதில்

வால்பையன் June 15, 2009 at 11:39 AM  

கேள்விகள் குறைவா இருக்கே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP