நொறுக்ஸ் - வியாழன் - 6/25/09
போன வாரம் ஒரு நாள் எங்க ஊர் மாலில் சஹானாவை விளையாட விட்டுட்டு, சும்மா வேடிக்கை பாத்துட்டு உக்காந்திருந்தோம். திடீரென்று பின்னாலிருந்து ஒரு ஆள் வந்து என்னைக் கட்டி பிடித்து உலுக்கினார். திடுக்கிட்டு திரும்பி பார்த்தால், அது எங்க அலுவலக மேனேஜர்களில் ஒருவர் - சீனர்.
சிறிது நேரம் பேசிப் போனபிறகு, தங்ஸ் என்னிடம் - அது யாருங்க? உங்களுக்கு கட்டிங் (முடி திருத்துபவர்) பண்றவரான்னாங்க.
நல்லவேளை அவருக்கு தமிழ் தெரியாது.. தெரிஞ்சிருந்தா, முடியை இல்லே, என் தலையையே எடுத்திருப்பாரு. முடியிழையிலே தப்பிச்சேன் அன்னிக்கு....
********
போன வருடம் கூட வேலை பார்க்கும் நண்பரிடம் விளையாட்டாக பேசிக்கொண்டிருந்தபோது, ஊதிய உயர்வு கிடைத்த விஷயத்தை சொன்னேன். அவரோ, நேராக எங்க தலயிடம் போய் - ஒருத்தருக்கு மட்டும் உயர்வு கொடுத்துட்டு மத்தவங்களுக்கெல்லாம் கொடுக்காமே விட்டுட்டீங்களே? - அப்படின்னுட்டாரு.
நானும் ஒரு வருடமாக அந்த தலயை பார்த்தும் பார்க்காமலும் ஓடிக் கொண்டிருந்தபோது, இப்போ அவர் பக்கத்திலேயே எனக்கும் சீட் போட்டு உக்கார வெச்சிட்டாங்க.
உன் சம்பளத்தை எப்படி மத்தவங்ககிட்டே பகிர்ந்துக்கலாம்னு அவரும் கேட்டுடப்போறாருன்னு நான் பயந்து கொண்டிருக்க, அவரோ அதைப் பத்தி மட்டும் பேசாமல் மத்த விஷயங்களைப் பத்தியே பேசறாரு.
கேள்வி கேட்டு பதில் வாங்கறதை விட, கேள்வி கேக்காமலேயே தவிக்க விடுறதுன்றது நல்ல டெக்னிக்தான் - இது நாம எந்த பக்கத்தில் இருக்கோம்றத பொறுத்து... என்ன சொல்றீங்க?
********
ரொம்ப டென்சனா இருக்கும்போதெல்லாம், யூட்யூபில் சார்லி சாப்ளின் படங்களைப் பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும்போது, 1977ல் அவருக்கு கௌரவ ஆஸ்கர் பட்டம் வழங்கிய இந்த வீடியோவை பார்த்தேன். நிறைய பேர் ஏற்கனவே பார்த்திருப்பீங்க. பாக்காதவங்க ஒரு தடவை பாத்துடுங்க.
http://www.youtube.com/watch?v=J3Pl-qvA1X8
(யூட்யூப் வீடியோவை இங்கே இணைக்க முடியல... அதனால் உரலைப் பிடிச்சி அங்கேயே போய் பாத்துடுங்க!).
கிட்டத்தட்ட நூறு வருஷமா கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லிக்கு, அரங்கிலிருப்பவர்கள் ஒரு ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக கைத்தட்டி உற்சாகப் படுத்துவதும், அதுக்கு அவர் காட்டும் பாவனைகளும், யாரையும் மெய் மறந்து உணர்ச்சி வசப்படுத்தும்.
எப்படி என் தந்தை எனக்கு சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி இவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாரோ, அதே மாதிரி நானும் சஹானாவுக்கு இப்போது சார்லியை அறிமுகப் படுத்தியிருக்கிறேன். நகைச்சுவை உணர்வு இல்லாமல் யாராவது உயிர் வாழ முடியுமா என்ன?
வாழ்க சார்லி சாப்ளின்...
*******
இன்னும் ரெண்டு மூணு இடுகைகள் போட்டா, பூச்சாண்டியின் ஹிட்ஸ் 1 லட்சத்தை தொட்டு விடும்னு தங்ஸிடம் சொன்னேன்.
அவங்கதான் ஏதாவது முக்கிய நாள், milestone இப்படியெல்லாம் வராதா, ஏதாவது நகைகள் வாங்க மாட்டோமான்னு காத்திருக்காங்களே?. உங்க கிறுக்கல்களையும் லட்சம் தடவை யாரோ படிச்சிருக்காங்க. மரியாதையா எனக்கு ஒரு தங்க வளையல் வாங்கிக் கொடுத்துடுங்கன்னுட்டாங்க.
என்னம்மா, அவங்கவங்க அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு போயிட்டிருக்காங்க. நான் இப்பத்தான் - மாமா பிஸ்கோத்துன்ற மாதிரி முட்டிமோதி ஒரு லட்சம் வந்திருக்கேன். அதுக்கே இவ்ளோ செலவான்னு கேட்டாக்கா - காக்கைக்கும் தன் ஹிட்ஸ் பொன் ஹிட்ஸ்தானேன்றாங்க.
எனக்கு ஒரு லட்சம் வந்ததுக்கு சந்தோஷப்படறதா, இல்லே என்னை காக்கைன்னுட்டங்களேன்னு வருத்தப்படறதான்னு தெரியல.
*****
26 comments:
மீ த ஃபர்ஷ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
// The URL contained a malformed video ID. //
சார்லி வீடியோ லிங்க் போனா இப்படி வருதுங்கோ...
தவளை தன் வாயால் கெடும் ..
தேவையா தற்பெருமை இப்போ உங்க பர்ஸுக்கு ஆப்பு ..
//நல்லவேளை அவருக்கு தமிழ் தெரியாது.. தெரிஞ்சிருந்தா, முடியை இல்லே, என் தலையையே எடுத்திருப்பாரு. முடியிழையிலே தப்பிச்சேன் அன்னிக்கு....
//
அண்ணே...சான்ஸ்சே இல்லை...சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்
:))))))
//ரொம்ப டென்சனா இருக்கும்போதெல்லாம், யூட்யூபில் சார்லி சாப்ளின் படங்களைப் பார்ப்பது வழக்கம்//
தலைவா, லைப்ரரியிலே சாப்ளின் படங்கள் கிடைக்கின்றன
ரெண்டு தங்கவளையலா வாங்கிருங்க. ஃபாலோயர் கணக்குக்கும் சேர்த்து
ஒரு லட்சம் தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..அப்படியே யு ட்யுபில் சாப்லினி “The city Lights" boxing காட்சியையும் பாருங்கள்.
வாங்க அப்துல்லா அண்ணே -> மிக்க நன்றி...
வாங்க விஜய் ஆனந்த் -> இப்ப பாருங்க... சரி பண்ணிட்டேன்...
வாங்க சூரியன் -> பட்டதுக்கப் பிறகுதானே தெரியுது!!!!
வாங்க மருத நாயகம் -> ஆமாங்க. அதையும் எடுத்து பார்க்கிறோம்!!!
வாங்க இளா -> அவ்வ்வ்...
வாங்க அக்னிபார்வை -> நன்றி...
சாப்ளின் வீடியோவிற்கு நன்றிகள் ச்சின்னப் பையன்..
தங்கவளையல் நல்ல கணமா இருக்கட்டும்!
:))))))))))
நொறுக்ஸ் - வியாழன் - kalakal
ஒரு லட்சத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
me the one lakh hitter
I searched relevant picture for one lakh...all I got is tata nano car...HEEE.....HEEEEE
லட்சணமான லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.இன்னும் எகிறட்டும்.(உங்க மாதிரி சார்லிகள் இருப்பதால்தானே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்:))
so...in your office...there is some one in the name of "maala"...O.K...O.K.
//.. கேள்வி கேட்டு பதில் வாங்கறதை விட, கேள்வி கேக்காமலேயே தவிக்க விடுறதுன்றது..//
உண்மை..
//.. எனக்கு ஒரு லட்சம் வந்ததுக்கு சந்தோஷப்படறதா, இல்லே என்னை காக்கைன்னுட்டங்களேன்னு வருத்தப்படறதான்னு..//
;-)
லட்சம் ரீச் பண்ணதுக்கு உங்களுக்கு வாழ்த்துகள் !!
ரெண்டு ஜோடி (எப்பூடி?) தங்க வளையல்களுக்கு (ஈச் 2 பவுன்... எப்பூடி?) மன்னிக்கு வாழ்த்துகள் !!
3 செட் டிரெஸ்ஸுக்கு (அஹா) சஹானவுக்கு வாழ்த்துகள் !!
எதாவது விட்டுப்போச்சா?
அய்ய்ய்... எனக்கு?
you've made it... பூச்சாண்டி காட்டியே ஹிட்ஸ் வாங்கியாச்சு !
வாங்க உண்மைத் தமிழன் அண்ணாச்சி -> நன்றி..
வாங்க சிவா -> அவ்வ்வ் கணம்மாவா....
வாங்க ராஜ்குமார், ராகி ஐயா -> நன்றி.
வாங்க onelakh -. அவ்வ். அது நீங்கதானா? கடைசி 100-200 ஓட்டு ஓட்டுன்னு ஓட்னது?... தனியாவா கும்பலா பண்ணீங்களா அந்த வேலைய??? அவ்வ். டாடா நானோ காரா????? லட்ச ரூபாய் லாட்டரி டிக்கெட் எங்கேயாவது கிடைக்குதான்னு பாருங்க... வாங்கித் தர்றேன்... :-)))
வாங்க ராஜ நடராஜன், பட்டிக்காட்டான் -> நன்றி...
வாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்... சரி சரி... உங்க பின்னூட்டத்தை வீட்லே காட்டாமே மறைச்சிட வேண்டியதுதான்...... :-)))
லட்சம் ரீச் பண்ணதுக்கு உங்களுக்கு வாழ்த்துகள் !!
ரெண்டு ஜோடி (எப்பூடி?) தங்க வளையல்களுக்கு (ஈச் 3 பவுன்... எப்பூடி?) மன்னிக்கு வாழ்த்துகள் !!
7 செட் டிரெஸ்ஸுக்கு (அஹா) சஹானவுக்கு வாழ்த்துகள் !!
எப்பூடி??????
சாப்ளின் படம் அருமை.
///ஜூலை 3ம் தேதி இரவு நான் எழுதப் போகும் இடுகை, இதுவரை நான் எழுதிய 265+ இடுகைகளை விட எனக்குப் மிகவும் பிடித்தது!!!
///
அண்ணே, ஆவலுடன் இருக்குறோம்
நீங்கள் பல லட்சம் ஹிட்ஸ் பெற்று, பல சவரன் நகைகளை வாங்கிக் கொடுக்க வாழ்த்துக்கள்.
என்னால எங்க வீட்டுக்குட்டீஸை லாரல் ஹார்டியும் சார்லியும் பாக்க வைக்க முடியல.. ஓடிடராங்க.. :(
Post a Comment