Wednesday, May 20, 2009

மாமனார் போட்ட மோதிரம்!!!

ச்சின்ன வயசிலேயிருந்தே நமக்கு இந்த விரலில் மோதிரம் அணிவது பிடிக்காது. கல்யாணத்துக்குப் பிறகு ஆண்களுக்கு எல்லாமே அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத்தான் நடக்கும் என்ற பொது விதிப்படி, எனக்கும் என் மாமனார் ஒரு மோதிரத்தைப் போட்டு விட்டார்.

"அட அதை எவன்பா கையிலே எல்லாம் போட்டுக்கிட்டு அசிங்கமா - உள்ளே வாங்கி வெளியே வித்துட வேண்டியதுதான்" - அப்படின்னு அண்ணன் கவுண்டமணி சொன்னதைப் போல் - அதை வெளியே விக்க முடியலேன்னாக்கூட கையில் மாட்டிக்கொண்டு அலைவது படு அவஸ்தையான விஷயம் எனக்கு.

பெரிய மனது பண்ணி தங்ஸ் என்னிக்காவது வற்புறுத்தி மோதிரத்தை போட்டுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை - கை காட்டுங்க... கை காட்டுங்கன்னு சொல்லி - அந்த மோதிரம் பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வார். அலுவலகத்தில் இருந்தால் தொலைபேசியில் ஸ்டேட்டஸ் அப்டேட் நடக்கும்.

அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா - அட கேக்கலேன்னாக்கூட நான் சொல்லித்தான் ஆகணும்.

வீட்டிலோ அலுவலகத்திலோ உக்காந்து நான் யோசிச்சிண்டிருந்தேன்னு வைங்க - சரி சரி அலுவலக விஷயமா நான் என்னிக்கு யோசிச்சிருக்கேன் - எல்லாம் நம்ம பதிவு விஷயமாத்தான் - அந்த மோதிரம் ஒரு வழியாயிட்டிருக்கும்.

ஒரு விரல்லேந்து இன்னொரு விரலுக்கு மாற்றுவது, ஒரே விரலில் அதை சுற்றிக்கொண்டிருப்பது - அப்படி இப்படின்னு அதை ஒரு இடத்துலே உக்கார விடாமே விளையாடிட்டிருப்பேன். கு கையிலே பூ அப்படின்னு ஒரு பழமொழி இந்நேரத்துக்கு உங்களுக்கு நினைவுக்கு வரலாம். தப்பில்லை.

ஒரு சமயத்தில் என்ன ஆச்சுன்னா, தங்க மோதிரத்தை தொலைச்சிடுவேன்னு சொல்லி, எனக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை போட்டிருந்தாங்க. ஒரு நாள் வீட்டு வாசலில் நின்று தங்ஸுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கம்போல் மோதிரத்தை நோண்டிக்கொண்டிருக்க, டக்கென்று என் கையிலிருந்து குதித்து - அந்த மோதிரம் பக்கத்திலிருந்த ஒரு சாக்கடையில் விழுந்து சடாரென்று மறைந்தது.

அன்றிலிருந்து எந்த வகையான மோதிரத்தையும் என் கண்களில் காட்டாமல் வைத்திருந்த தங்ஸிடம், போன வாரம் ஒரு சிறப்பு நாளில் கெஞ்சிக் கூத்தாடி அந்த தங்க மோதிரத்தை வாங்கி மாட்டிக்கொண்டேன். ஆனால், அப்படி மாட்டிக்கொண்ட ஒரு மணி நேரத்திலேயே - அந்த மோதிரம் கொடுத்த அசௌகரியத்தாலும், தங்ஸ் கொடுத்த (அன்புத்!!) தொல்லையாலும் - வீட்டிலேயே அதை கழட்டி உள்ளே வைத்தாயிற்று.

மோதிரத்தை கழட்டிய அந்த நிமிடம், சந்தோஷத்தில் நான் சிறகில்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். லிட்டில் (இன்னுமா?) சூப்பர் ஸ்டார், நம்ம சிம்பு மாதிரி - கோலப்பொடி இல்லாமலேயே காத்துலே கோலம் போட்டு காட்டினேன்.

அப்பாடா, இப்பத்தான் என் விரல்களுக்கு விடுதலை கிடைச்சா மாதிரி இருக்கு - இனிமே பாரு, என் கையிலேந்து இடுகையா கொட்டப் போகுது - பின்னூட்டமா பின்னப் போகுது - அப்படின்னு ஆனந்தப் பட்டேன். ஆனா வழக்கம்போல கணிணியில் உக்காந்து, விசைப்பலகையில் கை வச்சபிறகு, தட்டச்சுவதற்கு எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே
திரையை முறைத்துப் பார்த்தபிறகு, கணிணியை அணைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.

சரி, அவ்வளவுதான். இடுகையின் கடைசி பத்திக்கு வந்தாச்சு.

போன வாரம் ஒரு சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னேனே - அது மட்டும் என்னன்னு சொல்லிட்டு முடிச்சிக்கறேன். மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.

*****

28 comments:

Sasikumar B May 20, 2009 at 5:45 AM  

Anniversary wishes sir.

திருமண நாள் வாழ்த்துக்கள்

Raghav May 20, 2009 at 7:33 AM  

ஹல்லோ.. எங்க மே 14ம்தேதியே சொன்னா.. ட்ரீட் கேப்போம்னுட்டு பயந்து இப்போ சொல்றீங்களா.. என்னா வில்லத்தனம்.. இருப்பினும் வாழ்த்துகள்.. பையரே..

எம்.எம்.அப்துல்லா May 20, 2009 at 7:39 AM  

//மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.

//

சரியா 2 மாசத்துல நான் மாட்டுனேன்

:)

லோகு May 20, 2009 at 8:38 AM  

திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதா?? ஆயுள் தண்டனைக்கு அனுதாபங்கள் சொல்வதா??

வால்பையன் May 20, 2009 at 8:52 AM  

நான் சிக்குறதுக்கு ஒரு நாள் முன்னாடி நீங்க சிக்கியிருக்கிங்க!

அப்ப நீங்க தான் சீனியர்!

ஆதிமூலகிருஷ்ணன் May 20, 2009 at 9:16 AM  

இன்னா வாழ்த்து சொல்லணுங்கிறியா தல.. வாழ்த்துங்கிற எளுத்தே என் கீ போர்டுல அளிஞ்சி போச்சிது.. போங்கடா..

ஆதிமூலகிருஷ்ணன் May 20, 2009 at 9:17 AM  

நா மோதிரத்தை பாத்ரூம், டாய்லெட்னு கண்ட இடத்துல கழட்டி வெச்சுடறேன்னு சின்ன வயசுலயிருந்தே எனக்கு இந்த விஷயத்துல தடா.

Mahesh May 20, 2009 at 9:21 AM  

//எம்.எம்.அப்துல்லா
//மே 14ம் தேதி நமக்கு (எங்களுக்கு) திருமண நாள். அவ்வளவுதான்.

//

சரியா 2 மாசத்துல நான் மாட்டுனேன்

:)

//

அண்ணே நானும் மாட்டுனது ஜூலை 14 தாண்ணே !!!

Mahesh May 20, 2009 at 9:22 AM  

வாழ்த்துகள் ப்ப்ப்ப்ப்பெரியப்பையரே !!!

T.V.Radhakrishnan May 20, 2009 at 9:39 AM  

:-))))
திருமண நாள் வாழ்த்துக்கள்

Anonymous,  May 20, 2009 at 9:59 AM  

13ஆந்தேதியே சொல்லுறதுக்கென்ன?

சரி சரி திருமணநாள் வாழ்த்துகள். இன்றுபோல என்றும் தங்க்ஸ் கைல அடிவாங்கி வாழ்க.

மங்களூர் சிவா May 20, 2009 at 10:01 AM  

திருமண நாள் வாழ்த்துக்கள்

Kailashi May 20, 2009 at 10:01 AM  

திருமண நாள் வாழ்த்துக்கள் ச்சின்னப்பையன் சார்.

அறிவிலி May 20, 2009 at 10:02 AM  

//கணிணியை அணைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.//

திருமண நாள் வாழ்த்துகள்.

ச்சின்னப் பையன் May 20, 2009 at 11:14 AM  

திருமண நாளுக்கு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...

வாங்க சசிகுமார் -> நன்றி..

வாங்க ராகவ், லோகு -> அவ்வ்வ்...

வாங்க அப்துல்லா அண்ணே, மகேஷ் அண்ணே -> ஹை. ரெண்டு பேரும் ஒரே நாள்லே மாட்னீங்களா?

வாங்க ஆதி -> ஹாஹா... அங்கேயுமா தடா?

ச்சின்னப் பையன் May 20, 2009 at 11:15 AM  

வாங்க ராகி ஐயா, அண்ணாச்சி, சிவா, கைலாஷி, அறிவிலி -> மிக்க நன்றி...

வித்யா May 20, 2009 at 11:25 AM  

வாழ்த்துகள்.

Swarnarekha May 20, 2009 at 12:19 PM  

// அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா - அட கேக்கலேன்னாக்கூட நான் சொல்லித்தான் ஆகணும்.//

என்ன ஒரு வில்லத்தனம்.....

♫சோம்பேறி♫ May 20, 2009 at 1:36 PM  

/*தங்க மோதிரத்தை தொலைச்சிடுவேன்னு சொல்லி, எனக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை போட்டிருந்தாங்க.*/

கவலைப்படாதீங்க. அடுத்து வென்கலத்துல செஞ்சு போடுவாங்க:-)

திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..

Anonymous,  May 20, 2009 at 2:28 PM  

Kenakkoo...intha situation la intha pathivu thevaya?....muttakkoooooooo...

---Ramnad Selva

Anonymous,  May 20, 2009 at 2:30 PM  

But "All the best for your married life " --- Ramnad Selva...

நசரேயன் May 20, 2009 at 2:38 PM  

திருமண நாள் வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா May 20, 2009 at 6:35 PM  

திருமண நன்னாள் வாழ்த்துகள் சத்யா.

senthilkumar May 22, 2009 at 9:26 AM  

வாழ்த்துக்கள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.....

ராம்.CM May 29, 2009 at 8:00 AM  

திருமண நாள் நல் வாழ்த்துக்கள்..

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP