குழந்தை யாரை மாதிரி இருக்கு?
குழந்தை பொறந்துடுச்சு. அட, எனக்கு இல்லீங்க. ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். ஒருத்தருக்கு குழந்தை பொறந்துடுச்சுன்னு வைங்க. அதை பாக்க வர்றவங்க என்னன்ன சொல்வாங்க, அதுக்கு அந்த குழந்தையோட அம்மா, அப்பாவோட ரியாக்ஷன் எப்படியிருக்கும்னுதான் இந்த பதிவு... ஐ ஆம் சாரி பழமைபேசி... இந்த இடுகை.
எனக்கு எப்பவுமே புரியாத ஒண்ணு (அட.. புரியாத விஷயங்கள் நிறைய இருக்கு. அதிலே இதுவும் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்!), குழந்தையை குழந்தையா பாத்து, அதன் அழகை யாருமே ரசிக்க மாட்டாங்களா? அது எப்பவுமே யார் மாதிரியாவது இருந்தே ஆகணுமா? அப்படி இல்லேன்னாலும், அவங்களா ஏதாவது கற்பனை செய்துகொண்டு அவரை மாதிரி இருக்கு,
இவரை மாதிரி இருக்குன்னு ஏன் சொல்றாங்க.
இவரை மாதிரி இருக்குன்னு ஏன் சொல்றாங்க.
குழந்தை தாத்தா மாதிரி இருக்கு, அம்மா மாதிரி இருக்கு - அப்படின்ற ஒப்பீட்டையாவது ஒப்புக் கொள்ளலாம். மூக்கு மாமா மாதிரி இருக்கு. நெத்தி சித்தி (ஒரு எதுகை மோனைதான்!) மாதிரி இருக்குன்னு பார்ட் பார்ட்டா பிரிச்சி ஒப்பீடு செய்யணுமா?
ஒவ்வொருத்தரா குழந்தைய பாக்க வரும்போதும், கு.அப்பாவுக்கு 'பக்பக்'னு அடிச்சிக்கும். அடங்கொய்யா, இவன் யாரை ஒப்பீடு செய்யப்போறானோ தெரியலியே? ஒழுங்கா வந்தோமா, பாத்தோமான்னு போய்க்கிட்டே இருங்கப்பா. என் பொழப்புலே மண்ணு அள்ளி போட்றாதீங்கன்னு மனசுலே குமுறிக்கிட்டிருப்பாரு. - அட, ஏன்னு புரியலியா?. கீழே படிங்க.
கு.அம்மாவோட சொந்தக்காரங்க யாரையாவது ஒப்பீடு செய்து சொல்லிட்டார்னா, அவருக்கு அடிச்சது லக். கொஞ்சம் அதிகமா சாக்லேட்டும், அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகும்படி அழைப்பும், உபசரிப்பும் கிடைக்கும்.
அதுவே அவரு, கு.அப்பாவோட சொந்தக்காரங்க யாரையாவது ஒப்பீடு செய்துட்டார்னு வைங்க. உதாரணத்துக்கு, குழந்தையோட முடி அப்படியே அதோட அத்தைய கொண்டிருக்குன்னு சொல்லிட்டார்னா, சொன்னவருக்கு சாக்லேட் கட். கு.அப்பாவுக்கு ஒரு முறைப்பு (முறைக்கிறது யாருன்னு சொல்லித்தான் ஆகணுமா?), ரெண்டு திட்டு, மூணு வேளை சாப்பாட்டில்
உப்பு கட். - அது எதுக்கு அவ அப்படி சொல்லணும்? இனிமே இந்த பக்கம் வரட்டும் பாத்துக்கறேன். - அட விடும்மா, ஏதோ சொல்லிட்டா, சும்மா இந்த காதுலே வாங்கி அந்த காதுலே விடுவியா?
உப்பு கட். - அது எதுக்கு அவ அப்படி சொல்லணும்? இனிமே இந்த பக்கம் வரட்டும் பாத்துக்கறேன். - அட விடும்மா, ஏதோ சொல்லிட்டா, சும்மா இந்த காதுலே வாங்கி அந்த காதுலே விடுவியா?
முதல்லே சொன்னா போல, குழந்தை யாரை மாதிரியும் இல்லேன்னாலும் அதுவும் பிரச்சினைதான். வர்றவங்க - கேமிரா வெக்கிற தாமிரா (டைரக்டர்னு படிங்க!) மாதிரி குழந்தைய பல கோணங்கள்லே பாத்துட்டு இவ யாரை மாதிரி இருக்கான்னு தெரியலியே - அப்படின்னு தீவிரமா யோசிக்கும்போது - ஏண்டா அமைதியான குடும்பத்துலே புகுந்து குழப்பத்தை உண்டு பண்றீங்கன்னு மனசிலே நினைச்சாலும் - வெளியே சிரிச்சிக்கிட்டே - இல்லையே, குப்புற கவுந்தடிச்சி படுத்தா அப்படியே என்னை மாதிரியே இருப்பான்னு பெருமையா சொல்லிப்பாரு கு.அப்பா.
இப்படியாக போறவங்க வர்றவங்க எல்லாம் ஒப்பீட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க, கு.அப்பாவோ முறைப்பிலிருந்து தப்பிக்க - டேக் டைவர்ஷன், டேக் டைவர்ஷன் - அப்படின்னு பேச்சை மாத்தி வேறே விடயத்தை (அல்லது விஷயத்தை அல்லது விசயத்தை அல்லது விஸயத்தை அல்லது தமிழ்லே மேட்டரை) பேச ஆரம்பிச்சிட்டுதான் மூச்சே விடுவாரு (கடைசி
இல்லை, அடுத்த).
இல்லை, அடுத்த).
பிகு: இது சில நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. உங்க கருத்தையும் சொல்லுங்க...
************
23 comments:
\\விஷயத்தை அல்லது விசயத்தை அல்லது விஸயத்தை அல்லது தமிழ்லே மேட்டரை) \\
அதானே. தமிழ் வார்த்தை இருக்கும்போது எதுக்கு கஷ்டப்படனும்:)
நான் பொறந்தப்பயும் இப்பிடித்தான் சொந்தக்காரவுகளோடு ஒப்பிட்டாங்க. கொஞ்சம் வளந்து சேட்டைய ஆரமிச்சவுடனே பி.எஸ்.வீரப்பா, நம்பியாரோட ஓப்பிட ஆரமிச்சுட்டாய்ங்க :(
//கொஞ்சம் வளந்து சேட்டைய ஆரமிச்சவுடனே பி.எஸ்.வீரப்பா, நம்பியாரோட ஓப்பிட ஆரமிச்சுட்டாய்ங்க :(//
காமடி பண்ணாதீங்க அப்துல்லா. இவங்க எல்லாம் வில்லன்கள். நீங்க?
//மூக்கு மாமா மாதிரி இருக்கு. நெத்தி சித்தி (ஒரு எதுகை மோனைதான்!) மாதிரி இருக்குன்னு பார்ட் பார்ட்டா பிரிச்சி ஒப்பீடு செய்யணுமா?//
இதை விட கொடுமை, குழந்தை நிறமா (அதுதான்க சிவப்பா) பிறந்தா குழந்தை வெள்ளைக்காரனை மாதிரி நல்ல நிறம் என்று ஒப்பீடு செய்து குடும்பத்தையே கேவலப் படுத்துவாங்க.
இன்னும் ச்சின்னப் பையனாவே இருக்கீங்க :))))))))))
வித்யா said...
\\விஷயத்தை அல்லது விசயத்தை அல்லது விஸயத்தை அல்லது தமிழ்லே மேட்டரை) \\
அதானே. தமிழ் வார்த்தை இருக்கும்போது எதுக்கு கஷ்டப்படனும்:)
//
LOL.. haahaa
ஆமா, குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வேற என்னதாங்க பண்றது? கல்யாணவீடுன்னா நிறைய கூட்டமிரூக்கும், டைம் பாஸாகும். இங்கே ஒருத்தர் மூஞ்சீய ஒருத்தர் பாத்துக்கிஉ உக்காந்திருக்கணும். அதான் இப்பிடி.?
நான் கொஞ்சம் சின்னப்பையனா இருந்த போது, ஒரு முறை சத்தமாக 'குழந்த யாரை மாதிரியுமே இல்லை'னு சொல்லி எல்லார் முகத்திலயும் ஈயாட வச்சது ஞாபகம் வருது.
அப்புறம் சமயங்களில் குழந்தை அம்மாவையோ, அப்பாவையோ உரிச்சு வச்சா மாதிரி இருக்கிறதையும் பார்த்திருக்கிறேன்.
:-))
//கேமிரா வெக்கிற தாமிரா (டைரக்டர்னு படிங்க!)//
சிலேட்டு புலவராகிட்டிங்களே!
//கொஞ்சம் வளந்து சேட்டைய ஆரமிச்சவுடனே பி.எஸ்.வீரப்பா, நம்பியாரோட ஓப்பிட ஆரமிச்சுட்டாய்ங்க :(//
பரவாயில்லையே! மனுச பயலுகளோட தான ஒப்பிட்டுருக்காங்க!
நானெல்லாம் குரங்கு, நாய், டைனோசர்ன்னு வாலுல்ல பிராணிகளோடவே ஒப்பி்டப்பட்டேனாம்!
என் பையனுக்கு ஒரு மச்சம் இருக்குங்க.
யாராவது உங்களுக்கும் இப்படி இருக்கான்னு கேட்டுற போறாங்களேன்னு மூடியே வெச்சிருந்தேங்க (பையனோடதயும்தான்)
வாங்க சகோதரி வித்யா -> ஹாஹா... அதே அதே...
வாங்க அப்துல்லா அண்ணே -> அவ்வ்வ்... அப்போவேவா....
வாங்க வேலன் அண்ணாச்சி -> ஆமாங்க. அது ரொம்ப டூ மச்சா தெரியல????
வாங்க வேந்தன் அண்ணே -> யாரை புகழறோம், யாரை திட்டறோம்னே தெரியாமே பேசுவாய்ங்க...
வாங்க சுப்பு அண்ணே -> அவ்வ். என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலியே?????
உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டா?
//அறிவிலி said...
என் பையனுக்கு ஒரு மச்சம் இருக்குங்க.
யாராவது உங்களுக்கும் இப்படி இருக்கான்னு கேட்டுற போறாங்களேன்னு மூடியே வெச்சிருந்தேங்க (பையனோடதயும்தான்)//
ஹா ஹா ஹா.:)))
அடங்கமாட்டீங்களாய்யா நீங்க!
/வடகரை வேலன் said...
//கொஞ்சம் வளந்து சேட்டைய ஆரமிச்சவுடனே பி.எஸ்.வீரப்பா, நம்பியாரோட ஓப்பிட ஆரமிச்சுட்டாய்ங்க :(//
காமடி பண்ணாதீங்க அப்துல்லா. இவங்க எல்லாம் வில்லன்கள். நீங்க?//
வில்லாதி வில்லன் :-)
அடுத்த வாய்ப்பு வந்தால் பதிலே சொல்லுறேன்
//
வால்பையன் said...
//கொஞ்சம் வளந்து சேட்டைய ஆரமிச்சவுடனே பி.எஸ்.வீரப்பா, நம்பியாரோட ஓப்பிட ஆரமிச்சுட்டாய்ங்க :(//
பரவாயில்லையே! மனுச பயலுகளோட தான ஒப்பிட்டுருக்காங்க!
நானெல்லாம் குரங்கு, நாய், டைனோசர்ன்னு வாலுல்ல பிராணிகளோடவே ஒப்பி்டப்பட்டேனாம்!
//
அப்படி சொன்னவங்களை எல்லாம் பிராணிவதை சட்டத்தின் மூலம் கைது செய்ய சொல்லி மேனகாவுக்கு மனு கொடுக்கனும் :)
வாங்க ஆதி -> அப்போவே என்ன கொல வெறி????
வாங்க சுரேஷ் -> நன்றி...
வாங்க வால் -> ஹாஹா... முடியல...
வாங்க அறிவிலி -> :-)))))))))))))
வாங்க பப்பு -> ஹிஹி.. இப்படி வெளிப்படையா கேக்கப்படாது...:-))
வாங்க சென்ஷி, மு-க அக்கா -> நன்றி...
வாங்க நசரேயன் -> ஆஹா... சரி சரி... புரிஞ்சிடுச்சு... :-))
வாங்க ஆளவந்தான் -> அவ்வ்வ்....
//ஒவ்வொருத்தரா குழந்தைய பாக்க வரும்போதும், கு.அப்பாவுக்கு 'பக்பக்'னு அடிச்சிக்கும். அடங்கொய்யா, இவன் யாரை ஒப்பீடு செய்யப்போறானோ தெரியலியே? //
:-)))))))
சூப்பரா இருக்குங்கோவ்.
/
இல்லையே, குப்புற கவுந்தடிச்சி படுத்தா அப்படியே என்னை மாதிரியே இருப்பான்னு பெருமையா சொல்லிப்பாரு கு.அப்பா.
/
:)))))))))
ஹாஹா
/
டேக் டைவர்ஷன் - அப்படின்னு பேச்சை மாத்தி வேறே விடயத்தை (அல்லது விஷயத்தை அல்லது விசயத்தை அல்லது விஸயத்தை அல்லது தமிழ்லே மேட்டரை)
/
செத்தானுங்க!
:))))))))))))))
வாங்க கிரி, பட்டாம்பூச்சி, சிவா -> நன்றி...
Post a Comment