Tuesday, May 5, 2009

நானும் அரசியலில் குதிக்கப் போகிறேன்...


தென் மாநிலத்திலிருந்து சென்னை வரும் விமானத்தில் இருவர் பேசிக்கொள்வது.

"நீங்க அரசியல்வாதியா? வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்களேன்னு கேட்டேன்".

"ஆமாங்க. நான் அரசியல்வாதிதான். வர்ற எம்.பி தேர்தல்லே வேட்புமனு தாக்கல் பண்ணப்போறேன். அது சம்மந்தமா கட்சித் தலைமையை பாத்துப் பேசத்தான் சென்னை போயிட்டிருக்கேன்".

"இந்த சின்ன வயசுலே நீங்க அரசியல்லே ஈடுபடறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எந்த தொகுதிலேந்து போட்டியிடப் போறீங்க? இப்போ அந்த தொகுதி எம்.பி. யாரு?"

"நான் ___ தொகுதியில் போட்டியிடப் போறேன். இப்போ அங்கே யாரு எம்.பின்னு தெரியல".

"இதுக்கு முன்னாடி அங்கே உள்ளாட்சித் தேர்தல்லெல்லாம் நின்னு வேலை பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அப்பத்தானே அந்த மக்களைப் பத்தி தெரிஞ்சிக்க முடியும்? அவங்களுக்கும் உங்களைத் தெரியும்?"

"இல்லீங்க. எனக்கு அரசியல்லே ஈடுபாடே இல்லே. எங்க கட்சித் தலைமைதான் ரொம்பவே வற்புறுத்தி என்னை நிக்க வெக்கிறாங்க. நான் எந்த பதவியும் வகிச்சதில்லை".

"கட்சியே வற்புறுத்தி உங்களை தேர்தல்லே நிறுத்தறாங்கன்னா, ஏதாவது பொதுச்சேவை செய்தோ அல்லது போராட்டத்தில் கலந்துகொண்டோ மக்கள் மத்தியிலே உங்களுக்கு ஒரு நல்ல பேரு வந்திருக்கணும். நான் சொல்றது சரிதானே"?

"அதுக்கெல்லாம் எங்கேங்க நேரம்? நான் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பண்றவன். என் தொழிலை கவனிக்கவே எனக்கு 24 மணி நேரம் போற மாட்டேங்குது".

"இப்படி அரசியல், சமூகசேவை இதிலெல்லாம் முன்னனுபவம் எதுவுமே இல்லாமே, மக்கள் தொண்டு செய்றதுக்காக பொது வாழ்க்கையில் ஈடுபடறீங்களே.. உங்களை நான் ரொம்ப பாராட்டறேன்".

"நன்றிங்க"..

"இந்த நாட்டின் வருங்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்குன்னு சொல்றது ரொம்ப சுலபம். ஆனா, அதை செயல்படுத்த உங்களை மாதிரி இளைஞர்களுக்கு சீட் கொடுத்து ஊக்குவிக்கற உங்க கட்சித் தலைமையையும் பாராட்டணும்".

"ஆமாங்க. இது எல்லாத்துக்கும் எங்க கட்சித் தலைவர்தான் காரணம்".

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுக்கு எந்த தகுதியில் அடிப்படையில் இந்த சீட் கொடுத்திருக்காங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? "

"அட இதில் தப்பா நினைக்க என்னங்க இருக்கு. அந்த கட்சித் தலைவர் என் ஒன்ணு விட்ட சித்தப்பாதாங்க. எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். என் சொந்தக்காரங்கள்லே மூணு பேர் எம்.பியாகவும், நாலு பேர் அமைச்சராகவும், அஞ்சு பேர் எம்.எல்.ஏவாகவும் இருக்காங்க. அந்த ஒரு தகுதி போதாதா எனக்கு?"

ஙே...

21 comments:

முரளிகண்ணன் May 5, 2009 at 9:38 PM  

அருமையான ஒரு பக்கக் கதை.

Vidhya Chandrasekaran May 5, 2009 at 9:48 PM  

சூப்பர் தகுதி:)

முத்துலெட்சுமி/muthuletchumi May 5, 2009 at 10:33 PM  

இது கதையா உண்மைக்கதையாட்டம்ல இருக்கு.. :)

அறிவிலி May 5, 2009 at 11:47 PM  

அவுரு சினிமால வந்துருக்காரான்னு(நடிச்சுருக்காரான்னு இல்ல) கேட்டீங்களா?

SUBBU May 6, 2009 at 12:20 AM  

அந்த ஒரு தகுதி போதும்னே :)))))))))

Anonymous,  May 6, 2009 at 1:55 AM  

ஆட்டோ வருது. ஜாக்கிரதை.

சரவணகுமரன் May 6, 2009 at 2:31 AM  

யாருங்க அந்த எம்பி?

சின்னப் பையன் May 6, 2009 at 10:05 AM  

வாங்க மு-க அண்ணா, சகோதரி வித்யா, மு-க அக்கா, சுப்பு -> நன்றி..

வாங்க ஆதி, வேலன் அண்ணாச்சி, சரவணகுமரன், ஸ்ரீமதி -> எல்லோருக்கும் நன்றி...

ராஜ நடராஜன் May 6, 2009 at 10:37 AM  

தலைப்பு சரி.ஆனா கதை சொல்லி ஏமாத்தீட்டீங்களே!

படிச்சிகிட்டே வந்தா இது கதையில்லையின்னும் தெரியுது.

VIKNESHWARAN ADAKKALAM May 6, 2009 at 12:01 PM  

மந்திரிக்கு பொண்ணு இருந்து டவடிச்சிட்டா நாமும் வருங்கால மந்திரியாக வாய்ப்பிருக்குல்ல?

RAMYA May 6, 2009 at 1:36 PM  

//"அட இதில் தப்பா நினைக்க என்னங்க இருக்கு. அந்த கட்சித் தலைவர் என் ஒன்ணு விட்ட சித்தப்பாதாங்க. எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். என் சொந்தக்காரங்கள்லே மூணு பேர் எம்.பியாகவும், நாலு பேர் அமைச்சராகவும், அஞ்சு பேர் எம்.எல்.ஏவாகவும் இருக்காங்க. அந்த ஒரு தகுதி போதாதா எனக்கு?"
//

நல்லா தகுதிதான், ஒரு மார்க்கமா கிளம்பிடாங்களோ!

தாரணி பிரியா May 6, 2009 at 1:39 PM  

இதுதான் மெயின் தகுதியே. நீங்க ரொம்ப நாளா வெளிநாடுல இருக்கறதால நம்ம நாட்டு அடிப்படை விதிகள் மறந்திட்டுங்க போல :)

நசரேயன் May 6, 2009 at 5:20 PM  

இந்த ஒரு தகுதி போதும்

பட்டாம்பூச்சி May 7, 2009 at 6:14 AM  

அது சரி.
அப்படித்தானே இங்க நெறைய பேரோட வண்டி ஓடிகிட்டு இருக்கு.

வால்பையன் May 7, 2009 at 9:33 AM  

மிக முக்கியமான தகுதி இருக்கு அவருக்கு அப்புறம் என்ன?

மங்களூர் சிவா May 7, 2009 at 1:03 PM  

ஹா ஹா இரண்டு பேரின் முகத்திரையை கிழிச்சிட்டீங்க போங்க.

சின்னப் பையன் May 7, 2009 at 4:15 PM  

வாங்க ராஜ நடராஜன் -> அவ்வ். நான் நிஜமாவே அரசியல்லே இறங்கறேன்னு நினைச்சீங்களா.... இங்கேயிருந்து அது முடியாதுங்களே.....

வாப்பா விக்னேஸ்வரா -> ஆஆஆ.. இது நல்ல ஐடியாவா இருக்கே... எனக்கு இது காலம் கடந்த யோசனை... நீ வேணா முயற்சி செய்து பாரு... :-)))

வாங்க சகோதரிகள் ரம்யா & தாரணி பிரியா, நசரேயன், பட்டாம்பூச்சி, வால் -> நன்றி...

வாங்க சிவா -> அவ்வ்வ். யாருங்க அது ரெண்டு பேரு???? :-)))

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP