நொறுக்ஸ் - புதன் - 05/13/2009
சமீபத்தில், கொலவெறியோட ரெண்டு வேலைகளைச் செய்தேன். ஒரு வேலை செய்தபிறகு நல்லா சிரிச்சேன் - மற்றொரு வேலை செய்தபிறகு கொஞ்சம் கண்ணீர் விட்டேன். ஆனா, ரெண்டு சமயத்திலும் எனக்கு நல்லா திட்டு விழுந்தது. அப்படி என்ன செய்தேன்? விவரம் பதிவில்.
*****
இந்த வருடம் என்னோட ஓட்டு போடும் வாய்ப்பு போயிடுச்சு. கவலைப்படாதேப்பா, உன் ஓட்டை வேறே யாராவது தவறாமே போட்டுருப்பாங்கன்னு சொல்றீங்களா - அதுவும் சரிதான். (சொந்த) அம்மாவைப் பாக்க வர்ற சாக்குலே டெல்லியிலிருந்து வந்து ஓட்டு போட்டதும், திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை முறுக்கோட (சாப்பிடற முறுக்கு இல்லே!) போய் ஓட்டு போட்டதும் நினைவுக்கு வருது.
*****
பிறர் கண்ணாடி உடைந்ததற்கு சிரித்தால்
நம் கண்ணாடி பிற்பகலில் தானே உடையும்.
அட திட்டறதுக்கு ரெடியாகாதீங்க. நாந்தான் இதை குறள்னு சொல்லவேயில்லையே...
போன வாரம் என்னுடைய பாஸ், ஞாபகமறதியில் அவரோட மூக்குக் கண்ணாடி மேலே உக்காந்துட்டாரு. அப்போ அறையில் இருந்த நாங்க எல்லாரும் பயங்கரமா சிரிச்சிட்டோம். அப்பவே அவரு நல்லா சாபம் விட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.
இன்னிக்கு என்ன ஆச்சுன்னா, கார்லேந்து இறங்கியவுடன் கண்ணாடியை ஒழுங்கா அதோட இடத்தில் மடித்து வைக்க சோம்பேறித்தனப்பட்டு - நான் உட்காரும் இருக்கையிலே போட்டுட்டு போயிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்து - எதிரில் இருந்த இரு அமெரிக்க பிரஜைகளின் மீது வைத்திருந்த என் இரு கண்களையும் விலக்க முடியாமல் - யாருப்பா அது, பார்த்த விழி பார்த்தபடின்னு பாடுறது - காரில் ஏறி உட்கார்ந்தேன். பச்சக்.
நல்லவேளை, பின்புறம் சேதாரம் ஒண்ணுமில்லாமல் தப்பித்தேன்.
*****
நம்ம கடையிலே 'கடையோட மாப்பிள்ளை'ன்னு ஒரு நாடகம் (மாதிரி) ஆரம்பித்து இதுவரை ஐந்து பகுதிகள் வந்திருக்கு. இதோட கடைசி பகுதி வர்ற வாரம் வருது. ஒவ்வொரு பகுதி வந்தபிறகும் உடனே படித்து பின்னூட்டியவர்களுக்கும் - இது முடியட்டும், எல்லா பகுதிகளையும் சேர்த்து படிச்சிக்கலாம்னு வெயிட் பண்றவங்களுக்கும் நன்றி.
எல்லா பகுதியையும் எழுதிட்டே வெளியிடலாம்னுதான் முதலில் நினைத்தேன். பிறகு, நம்ம (என்) சோம்பேறித்தனத்தில் இருந்த அபார நம்பிக்கை காரணமாகவும், ஒரு பகுதி போட்டாதான், பிரஷர் காரணமாக அடுத்த பகுதி வெளியிட்டே ஆகணும்ற கட்டாயம் வரும்னு நினைச்சி - வெறும் கதைக்களத்தை முடிவு செய்துட்டு - அப்பா. மூச்சு வாங்குது. நான்
சொல்ல வந்தது புரிஞ்சுடுச்சில்லே... அவ்வளவுதான்.
*****
இந்த ஊருக்கு வந்து மூணு வருஷத்திற்கு பிறகு நேற்றிரவு முதல் முறையாக - எங்க வீட்டுலே ரெண்டு மணி நேரத்துக்கு மின்வெட்டு. தமிழகத்துலே தேர்தல்னா, உலகத்தமிழர்கள் எல்லார் வீட்டிலேயும் மின்வெட்டு அமுல்படுத்தணுமான்னு எங்களுக்கு வந்த சந்தேகத்தை யார்கிட்டே கேட்டு தெளிவடையறதுன்னு தெரியல.
மின்வெட்டுன்னவுடனே, பதிவர் நண்பர் மருதநாயகம் ஒரு தடவை சொன்னதுதான் நினைவுக்கு வந்துச்சு.
அவரோட சின்னப்பையன் (நானில்லை!) இங்கிருந்து தமிழ்நாட்டுக்குப் போன புதிதில், வீட்டில் டிவி பாத்துக்கிட்டிருந்தபோது கரண்ட் கட் ஆயிடுச்சாம். அமெரிக்காவில் இருந்தவரைக்கும் கரண்ட் கட்டுன்னா என்னன்னே தெரியாத பையனாச்சே. அங்கே இருக்கறவங்கதான் டிவியை அணைச்சிட்டாங்கன்னு சொல்லி புரண்டு புரண்டு ஒரே அழுகையாம்.
பிறகு தினமும் அதேமாதிரி கட்டாவதால் பழகிப்போயிருக்கும்னு சொன்னாரு.
*****
வேலை 1: கார் கதவை இழுந்து மூடும்போது, நடுவே தங்ஸின் கைவிரல் இருந்ததை கவனிக்கவில்லை. அட, விரலை நசுக்கிட்டேன்னு நினைக்காதீங்க. முடியிழையில் மிஸ்ஸாயிடுச்சு(!!). இருந்தாலும் அவங்களுக்கு கொஞ்ச நேரம் வலிச்சது (அப்படின்னாங்க).
வேலை 2: வீட்டில் ஓடியாடி விளையாடும்போது என் கால் தடுக்கி நாற்காலியில் இடித்ததால், சஹானாவுக்கு அடி. ரெட் இண்டியன் மாதிரி ஆயிட்டாங்க. பயங்கர அழுகை.
எந்த வேலை செய்தபிறகு சிரித்தேன், எந்த வேலை செய்தபிறகு கண்ணீர் விட்டேன்றது உங்க கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!!
*****
19 comments:
வேணும்னே கதவ அடிச்சு சாத்திப்புட்டு, யார ஏமாத்துறீங்க?
அவங்க அப்பாவியா இருக்கவும், நீங்க அழுகறத பாத்து மன்னிச்சு விட்டுட்டாங்க.
//அட திட்டறதுக்கு ரெடியாகாதீங்க. நாந்தான் இதை குறள்னு சொல்லவேயில்லையே...//
:)
நல்ல நகைச்சுவை உணர்வோடு இருக்கு பதிவு.
காலையிலேயே கிடைச்சுது எனர்ஜி !
முதல் வேலைதானே கொலை வெறியோட செஞ்சு இருப்பிங்க. இரண்டாவது தெரியாமதான் செஞ்சு இருப்பிங்க.
கடையோட மாப்பிள்ளை பகுதியை படிக்க சேர்த்தி வைச்சுகிட்ட இருக்கிற வாசகர்கள்ல நானும் ஒருத்தி :)
நீங்க அதுக்காகா சிரிச்சிருந்தாலும், அத அவங்க பார்த்த உடனே உங்கள அழ வச்சிருப்பாங்களே...
சிரிச்சதுக்கு வலிச்சு அழுதீங்கதானே?
:)) நானும் இதே மாதிரி கண்ணாடிய உக்காந்து உடைச்சிருக்கேன்..
//வேலை 1: கார் கதவை இழுந்து மூடும்போது, நடுவே தங்ஸின் கைவிரல் இருந்ததை கவனிக்கவில்லை. அட, விரலை நசுக்கிட்டேன்னு நினைக்காதீங்க. முடியிழையில் மிஸ்ஸாயிடுச்சு(!!). இருந்தாலும் அவங்களுக்கு கொஞ்ச நேரம் வலிச்சது (அப்படின்னாங்க).
வேலை 2: வீட்டில் ஓடியாடி விளையாடும்போது என் கால் தடுக்கி நாற்காலியில் இடித்ததால், சஹானாவுக்கு அடி. ரெட் இண்டியன் மாதிரி ஆயிட்டாங்க. பயங்கர அழுகை.
எந்த வேலை செய்தபிறகு சிரித்தேன், எந்த வேலை செய்தபிறகு கண்ணீர் விட்டேன்றது உங்க கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!!//
ஊரான் வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம்.. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயமா?? சாரி அண்ணா :((
போங்கையா மொக்ஸ்.! சிரிச்சாராம், அழுதாராம்..
(அப்புறம் கண்ணாடிகள் உட்கார்வதாலேயே அதிக பட்சமாக சேதாரமாகின்றன என்று ஏதோ பத்திரிகையில் படித்ததாய் ஞாபகம்.!)
(தொடரில் மைனஸ் என்று நான் குறிப்பிட்டது.. கிரேஸியின் அதே பிரமிப்பை தரமுடிவது சிறப்பு எனினும், அது இன்னொருவரின் காப்பி என்பதான தனித்தன்மையிழப்பதே..)
சிரிச்சதுக்கு வலிச்சு அழுதீங்கதானே?
:))))))))))))))
:)
புது கண்ணாடி வாங்கியாச்சா!
உங்க விரலை வச்சு நசுக்குனா நல்லா சிரிப்பு வரும்!
உங்க விரலை வச்சு நசுக்குனா நல்லா சிரிப்பு வரும்!
:))))
:)-
//அவரோட சின்னப்பையன் (நானில்லை!) இங்கிருந்து தமிழ்நாட்டுக்குப் போன புதிதில், வீட்டில் டிவி பாத்துக்கிட்டிருந்தபோது கரண்ட் கட் ஆயிடுச்சாம். அமெரிக்காவில் இருந்தவரைக்கும் கரண்ட் கட்டுன்னா என்னன்னே தெரியாத பையனாச்சே. அங்கே இருக்கறவங்கதான் டிவியை அணைச்சிட்டாங்கன்னு சொல்லி புரண்டு புரண்டு ஒரே அழுகையாம்//
அடிக்கடி கரண்ட் கட் ஆனதால எங்க பையன் இப்போ டிவி பார்ப்பதையே மறந்துவிட்டான்
//கார் கதவை இழுந்து மூடும்போது, நடுவே தங்ஸின் கைவிரல் இருந்ததை கவனிக்கவில்லை.//
இது விபத்து மாதிரி தெரியலையே
:)))))))))))
தமிழகத்துலே தேர்தல்னா, உலகத்தமிழர்கள் எல்லார் வீட்டிலேயும் மின்வெட்டு அமுல்படுத்தணுமான்னு எங்களுக்கு வந்த சந்தேகத்தை யார்கிட்டே கேட்டு தெளிவடையறதுன்னு தெரியல.
ஹா ஹா ரசித்துச் சிரித்தேன்.
ஒரு லட்சம் ஹிட்களையும், நூறு ஃபாலோயர்களையும் வாங்க தட்டுத்தடுமாறி திக்கித்திணறிக் கொண்டிருக்கும் ஒரு தனி நபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
hmmmmmmmm.....slow and steady wins the race...!
Post a Comment